முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.136.திருத்தருமபுரம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.136.திருத்தருமபுரம்
1.136.திருத்தருமபுரம்
பண் - யாழ்மூரி
திருச்சிற்றம்பலம்
பண் - யாழ்மூரி
திருச்சிற்றம்பலம்
-
சுவாமிபெயர் - -.
தேவியார் - -.
1459 |
மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர் பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவ வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறைவண்டறை |
1.136.1 |
விரும்பத்தக்க இளம்பிடியையும், இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியைத் தம் துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதப்படைகள் நின்று இசை பாட ஆடுபவரும், விரிந்த சடைகளையுடைய நீண்ட முடிமீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர்தம் இடமாக விளங்குவது ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையைப் பொருது விளங்கவும், அதன் அயலில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும். அழகிய பொழில்களில் குயில்கள் பாடவும் விளங்கும் திருத்தருமபுரம் என்னும் நகராகும்.
1460 |
பொங்குந டைப்புகலில் விடை யாமவ
ரூர்திவெண் மங்குலி டைத்தவழும் மதி சூடுவ ராடுவர் சங்குக டற்றிரையா லுதை யுண்டுச ரிந்திரிந் தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிரு ளொல்கநின் |
1.136.2 |
சினம் பொங்கிய நடையினை உடையதாய், உவமை சொல்லுதற்கு வேறொன்று இல்லாததாய் விளங்கும் விடையை ஊர்தியாகக் கொண்டவரும், திருநீறு அணிந்த அகன்ற மார்பின்கண் பூணூல் புரள வானத்தில் தவழும் பிறைமதியைச் சூடி ஆடுபவரும், வளமைகளைத் தருவதாகிய கங்கை, அரவம் ஆகியன தங்கிய சடையினருமாகிய சிவபிரானாரது இடம், கடல் அலைகளால் அலைக்கப் பெற்ற சங்குகள் சரிந்து இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து வெண்மணற் குவியலின் மேல் ஏறித் தங்கி ஈனும் ஒளி பொருந்திய முத்துமணிகளால் மெல்லிய இருள் விலகி ஒளி சிறந்து தோன்றும் அழகிய திருத்தருமபுரமாகிய நகரமாகும்.
1461 |
விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுசூ கண்ணுற நின்றொளிருங் கதிர் வெண்மதிக் கண்ணியர் பெண்ணுற நின்றவர்தம் முரு வம்மயன் மாறொழவ் தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவன்ம ருங்கலர் |
1.136.3 |
வானளாவிய பெரிய மலை போன்ற விடையின் மேல் ஏறி வருபவரும், கங்கையை அணிந்தவரும், விரிந்து சுருண்டு ஒளிதரும் தோடு விளங்கக் கண்ணைக் கவரும் ஒளிதரும் பிறைமதியாகிய கண்ணியை முடியிற் சூடியவரும், முடை நாறும் தலையோட்டை உண்கலனாகக் கொண்டவரும், உமையம்மையைக் கூடிப் பிணைந்து இணைந்து அணைத்துத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவரும், தமது உருவத்தை அயனும் மாலும் தொழ நின்றவருமாகிய சிவபிரானாரது இடம், குளிர்ந்த இதழ்களையுடைய முல்லை மலர்களோடு எட்டு இதழ்களையுடைய காட்டு மல்லிகை மலர்கள் மலர்ந்து மணம் வீசுவதும், கரிய உப்பங்கழிகள் நிறைந்ததுமாகிய திருத்தருமபுரம் என்னும் நன்னகராகும்.
1462 |
வாருறு மென்முலைநன் னுத லேழையொ டாடுவர் காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர் பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர் தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர் |
1.136.4 |
கச்சணிந்த மென்மையான தனங்களையுடைய உமையம்மையோடு கூடி நடனம் ஆடுபவரும், உலகிற்கு வளம் சேர்க்கும் நிலவொளியைத் தரும் மதி சூடிய சடையினரும், கார்காலத்தே மலரும் கொன்றை மாலையைச் சூடியவரும், விரைந்து செல்லும் விடையைக் கொடியாகக் கொண்டவரும், அச்சந்தரும் சுடுகாட்டைத் தமக்குரிய இடமாகக் கொண்டவரும், மண்ணுலகத்தினர், விண்ணுலகத்தினர்களால் போற்றப்படுபவரும், அவமானம் எனக் கருதாது அழிந்துபட்ட தலையோட்டில் பலிகொள்பவரும், பாம்பை மாலையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய பதி. மகரந்தங்களை உதிர்க்கும் மலர்கள் நிறைந்த, தழைகள் செறிந்த, மேகங்கள் தவழும் பொழில்கள் சூழ்ந்த திருத்தருமபுரம் என்னும் நகரமாகும்.
1463 |
நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக் பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப் ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ் தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை |
1.136.5 |
ஆராயுமிடத்து அவருக்கு உவமையாகச் சொல்லத்தக்கவர் யாரும் இல்லை. கடிதாக வந்த கங்கைக்குத் தம் நீண்ட சடையை இடமாகக் கொடுத்த நிலையினர் அவர். அவருக்குப் பெயர்களோ பல ஆயிரம். முன்தொட்டு அவருக்குப் பிறப்பு இறப்பு இல்லை. தம்மை எதிர்த்தவர்களோடு சினந்து அவர்களைக் கொன்ற அவரது பெருவலியை யார் அறிவார்? தீயின் தன்மையுடைய நஞ்சினைக் கொண்ட நாகம் அவருக்கு ஆரம். செழுமையான பொன்போன்ற கொன்றை மலர், அவருக்கு மாலையாகும். இமவான் மகளாகிய பார்வதி அவருக்கு மனைவி. அவர் ஊர்ந்து செல்வது போர்ப் பயிற்சி உடைய இடபம். அவர் தங்கியுள்ள இடம் மணம் பொருந்திய ஒளிகளையுடைய பொழில்களால் சூழப்பட்ட தருமபுரம் என்னும் பதியாகும்.
1464 |
நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக் பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப் ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ் தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை |
1.136.6 |
மலர்மாலை சூடிய கூந்தலையும், தன் கணவரால் தழுவப்பெறும் மெல்லிய தனங்களையும், தேமல்களோடு கூடிய மேனியினையும், கொடி போன்ற இடையையும், பவளம் போன்ற வாயையும், மாவடு போன்ற ஒளி விளங்கும் கண்களையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும், வெற்றியைத் தரும் படைக்கலனாக மழுவாளைக் கொண்டவரும் விடையைக் கொடியாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, யாழிசையையும் வெல்லுமாறு வண்டுகள் ஏழிசை முரன்று மெல்லிய சிறகுகளால் ஒலித்துச் சூழும் தேன்நிறைந்த நல்ல தாழை மரங்களும், புலிநகக் கொன்றையும் நிறைந்த கடற்கரைச் சோலைகளிலுள்ள சேற்று நிலங்களில் இசைபாடும் பறவையினங்கள் துயில்கொள்ளும் தலமாகிய தருமபுரமாகும்.
1465 |
தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித் தூமரு செஞ்சடையிற் றுதை வெண்மதி துன்றுகொன் காமரு தண்கழிநீ டிய கானல கண்டகங் தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர் |
1.136.7 |
இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் ஆகிய உமையம்மை ஒருபாலாகப் பொருந்திய மேனியனும், செவ்வொளி விரியும் தூய செஞ்சடையில் வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர், பழமையான கங்கை நீர், தலைமாலை ஆகியவற்றை மறைத்துச் சூடி, உரித்து உடுத்த தோல்களை உடையாகக் கொண்டவனும் ஆகிய இறைவனது பதி அழகிய குளிர்ந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் தாழை மரங்களும், கடலினிடத்திருந்து பெருகிவரும் உப்பங்கழிகளிடத்து நீர்முள்ளிகளும், நீர் நிலைகளில் தாமரை, குவளை, செங்கழுநீர் ஆகியவற்றின் மலர்களும் மணம் வீசுவதும், வயல்கள் செறிந்ததுமாகிய தருமபுரமாகும்.
1466 |
தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல் கோவண மும்முழையின் னத ளும்முடை யாடையர் பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக் தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடங் |
1.136.8 |
தூய வெண்ணிறம் பொருந்திய திருநீறு மார்பின் கண் விளங்க, மலை போலத் திரண்ட தோள்களில் மணம் நிறைந்து செறிந்த மென்மையான மலர்மாலையை அணிவர். கோவணத்தையும் மான் தோலையும் ஆடைகளாக உடையவர். கொல்லும் தொழிலில் வல்ல ஆயுதமாக ஓர் சூலத்தை ஏந்திய இளையர். பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன், பாடல்கள் பாடி அலறுமாறு அவனது வலிமையைச் செற்றுப் பின் அருள் புரிந்த தலைவர். தாவிச் செல்லும் இயல்புடைய ஆனேற்றைத் தம் ஊர்தியாகக் கொண்டவர். அவ்அடிகட்கு இடம், வலிய பெரிய கடலின் அலைகள் சேர்ந்த பெரிய மணற்கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.
1467 |
வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர் கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம் தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந் |
1.136.9 |
கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். பிறைமதி, பாம்பு ஆகியவை தங்கும் சடையினர். கூரிய சூலமும், வெண்ணிறமான மழுவும் அவர் வெற்றி கொள்ளுதற்குரிய படைக்கலங்களாகும். ஒப்பற்ற மேரு மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர். ஆரக்கால் பொருந்திய சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலும், அகஇதழ்களை உடைய தாமரை மலரில் உறையும் பிரமனும் தம்முடைய அடிமுடிகளின் அளவுகளைத் தாம் அறியாவாறு அயரும்படி செய்தவர் அவர். கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரால் தொடுத்த மாலையை விரும்புபவர். அப்பெருமானார் தங்கியுள்ள இடம், பெரிய கடலின் அலைகள் வந்து தழுவிச் செல்லும் தருமபுரம் என்னும் பதியாகும்.
1468 |
புத்தர்க டத்துவர்மொய்த் துறி புல்கிய
கையர்பொய்ம் பத்தர்க ளத்தவமெய்ப் பயனாக வுகந்தவர் முத்தன வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி தத்தரு வித்திரளுந் திய மால்கட லோதம்வந் |
1.136.10 |
புத்தர்களாகிய தத்துவாதிகளும், உறிகளை ஏந்திய கையினராய்த் திரியும் சமணர்களும் கூறும் பொய் மொழிகளினின்று நீங்கிய நல்ல தவத்தை உடையவர்களும், புலவர்கள் பக்தர்கள் ஆகியோரின் தவத்தை மெய்ப் பயனாக உகந்தவரும், அன்புக்கு நெகிழ்பவரும், வன்புக்குச் சினப்பவரும் சுடலைப் பொடி அணிபவரும், முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஒளி பொருந்திய மலை மாதாகிய பார்வதி தேவியாரின் ஒன்றோடு ஒன்று செறிந்த தனங்கள் இரண்டையும் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாதவரும் ஆகிய சிவபிரானாரது பதி, தவழும் அலைகளை உடைய பெரிய கடலின் ஓதநீர் வந்து பொருந்தும் தருமபுரம் ஆகும்.
1469 |
பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம் பந்தனஃ பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை இன்னொடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும் |
1.136.11 |
பொன்னால் இயன்ற நெடிய நல்ல மணிகள் இழைத்த மாளிகைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் மலிந்ததும், கரைகளை மோதும் நிறைந்த நீர்வளம் உடையதும், திருமகள் உறைவதுமான புகலி என்னும், தனக்கு உவமை சொல்ல இயலாத பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தனுடைய பரந்து விரிந்து கடல் போன்ற செந்தமிழாகிய பாமாலைகளால், ஒன்றோடு ஒன்று பின்னி நீண்டுள்ள சடைமுடியில் பிறையையும் பாம்பையும் அணிந்துள்ளவனாகிய சிவபிரானுடைய பிணைந்துள்ள இரண்டு திருவடிகளையும் போற்றி அன்பு செய்பவர், இனிய பெரிய நல்லுலகை எய்துவர், அடையத் தக்கனவாய போகங்களையும் பெறுவர். இடர் செய்யும் பிணி துயர் முதலியன நீங்கி என்றும் இன்பம் உறுவர்.
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
முதல் திருமுறை முற்றும்.
முதல் திருமுறை முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தருமபுரம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ரம்பதியே, பொருந்திய, என்னும், கொண்டவரும், றருமபு, திருத்தருமபுரம், கடலின், விளங்கும், தருமபுரம், அவருக்கு, கொன்றை, நிறைந்த, செறிந்த, செல்லும், மென்மையான, தவழும், பதியாகும், சிவபிரானாரது, தருமபு, சடையர், மெல்லிய, ஆடுபவரும், கொண்டு, ஏந்திய, திருமுறை, அணிந்தவரும், பார்வதி, அலைகள், வெண்மையான, குழகர், வர்க்கிமவான், ளூர்வது, தவத்தை, லலங்கல், ஒன்றோடு, னிதழிநல், ரறிவார், தபெற்றியா, வர்க்கழல்வா, ழஃகுறவ், கொள்பொன், வெழுஃகொழும், போர்விடை, தருமபுரமாகும், உமையம்மையை, தலைவர், பாகமாகக், உறையும், றடர்த், மரங்களும், கடற்கரைச், தங்கியுள்ள, கடிபடு, லிடுந், பிறைமதி, பொழிற், அவருக்குப், கொண்டவர், கொடியாகக், நகரமாகும், திருநீறு, ஊர்தியாகக், கண்ணியர், பிரியார், ஒளிதரும், விரிந்து, வம்வைகிய, வண்டுகள், பதிகங்கள், தேவாரப், திருச்சிற்றம்பலம், புன்னை, கங்கையை, நடையினை, சூடியவரும், குளிர்ந்த, படர்ந், டுஞ்சடைக், படுவ்வதொர், நிலையர், முன்னைப்பி, வர்க்கெனையா, லில்லைநெ, வர்க்குணரப், மலர்கள், இதழ்களையுடைய, வீசுவதும், கச்சணிந்த, இடமாகக், விடையைக், றப்பிறப்