முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 5.திருச்சதகம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்
5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
4. ஆத்ம சுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்)
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப் பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? | 35 |
அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப் பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. | 36 |
மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெக் சிவன் அவன் திரங் கோள் மேல் நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம் கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. | 37 |
கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திருப் பாதம் முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. | 38 |
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. | 39 |
புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. | 40 |
வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத் திசையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதணாலே முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன் இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே. | 41 |
ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனையென் சிவலோகக் கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே. | 42 |
ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. | 43 |
வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன் ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. | 44 |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தாவதும், நெஞ்சே, அறுத்து, கில்லேனே, உடையான்