முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 5.திருச்சதகம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்

5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)
(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. | 5 |
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. | 6 |
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. | 7 |
சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. | 8 |
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. | 9 |
பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும் நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. | 10 |
முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள் செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. | 11 |
உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும் இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின் உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக் கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. | 12 |
பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும் அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. | 13 |
புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. | 14 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொண்டு, உழிதரு, அன்பர், என்னும், உள்ளம், போற்றி, கைதான்