முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.050.திருவீழிமிழலை
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.050.திருவீழிமிழலை

6.050.திருவீழிமிழலை
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
2584 | போரானை ஈருரிவைப் போர்வை யானைப் பாரானை மதியானைப் பகலா னானைப் நீரானைக் காற்றானைத் தீயா னானை தேரானைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.1 |
தன்னை எதிர்த்து வந்த யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை மேலே போர்த்தி, புலித்தோலை ஆடையாக உடுத்தவனாய், நிலனாய்ச் சந்திரனாய்ச் சூரியனாய், வானவெளியாய், நீராய் காற்றாய்த் தீயாய்ப் பல உயிர்களாய் அட்ட மூர்த்தியாய்ப் பரந்து நிற்பவனாய், பகைவருடைய மும்மதில்களும் எரியுமாறு நினைத்த போது இவர்ந்து சென்ற தெய்வத்தேருடையவனான திருவீழி மிழலைப் பெருமானை அணுகி வழிபடாதவர்கள் தீய வழியிலேயே சென்று கெடுகின்றவர் ஆவார்கள்.
2585 | சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு பவந்தாங்கு பாசுபத வேடத் தானைப் கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னைக் சிவந்தானைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.2 |
பிணங்களை உடைய சுடகாட்டுச் சாம்பல், எலும்பு மண்டையோடு பஞ்சவடி என்ற இவற்றை அணிந்தவனாய்ப் பிறப்பைத் தடுக்கின்ற பாசுபத மதத்தினர் விரும்பிக் கொள்ளும் வேடத்தைத் தரித்தவனாய்த் தன்னை ஒழிந்த தேவர்களைத் கொண்டு தக்கன் செய்த வேள்வியை அழித்தவனாய்க் கச்சி ஏகம்பனாய்த் தன் திருவடிகளைத் சார்ந்த அடியவனைக் கோபித்து வந்த கூற்றுவனைக் கீழே விழுமாறு அவனைக் கோபித்து உதைத்தவனாய்த் திருவீழி மிழலையில் உள்ள பெருமானை அடையாதவர் தீ நெறிக்கண் சேர்கின்றவராவர்.
2586 | அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை நின்றானைக் கிடந்தகடல் நஞ்சுண் டானை வென்றானை மீயச்சூர் மேவி னானை சென்றானைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.3 |
ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழிருந்து அறத்தை உபதேசித்தவனாய், அகத்தியனை அவன் பெருமை தோன்ற உயரச் செய்தவனாய்ப் பிரமனும் திருமாலும் தேடுமாறு அனற் பிழம்பாய் நின்றவனாய், கடல்விடம் உண்டவனாய்ப் பார்வதியோடு சேர்ந்திருந்தே பொறிவாயில் ஐந்து அவித்தவனாய், மீயச்சூரை உறைவிடமாக விரும்பியவனாய்ப் பார்வதியின் தவத்தின் திண்மையை அளக்கச் சென்றவனாய்த் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர்.
2587 | தூயானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத் தாயானைச் சக்கரமாற் கீந்தான் தன்னைச் வாயானை மந்திரிப்பார் மனத்து ளானை சேயானைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.4 |
தூயனாய்ப் பவளத்தின் ஒளியை உடையவனாய், எல்லா உயிர்களுக்கும் துணையாக நின்ற தாயாய்த் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய், எல்லாருக்கும் நன்மை செய்பவனாய்ச் சந்தோக சாமம் ஓதுபவனாய், மந்திரங்களை எண்ணுபவர் மனத்து உறைபவனாய்த் திருவைந்தெழுத்தின் பயனைத் தௌயாது ஐயுற்று ஓதுபவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய், உள்ள திருவீழி மிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர்.
2588 | நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த மற்றமரர் உலந்தாலும் உலவா தானை உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா செற்றவனைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.5 |
ஞானத்தின் பொருட்டுச் செய்யப்படும் தவத்திற்குப் பயன் அளிக்கும் பெரியவனாய், தீங்கு செய்வதாய் வந்த விடத்தை அமுதாக உண்டவனாய், அமுதமுண்ட தேவர்கள் இறந்தாலும் தான் இறவாதவனாய், முக்காலப் பொருள்களை உணரும் ஞானிகளும் உணரமுடியாத ஒப்பற்ற ஞானப்பிரகாசனாய், வானத்தின் உலவிய மதில்கள் மூன்றையும் ஒரு சேர அழித்தவனாய், உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர்.
2589 | மைவான மிடற்றானை அவ்வான் மின்போல் பெய்வானைப் பிச்சாட லாடு வானைப் பொய்வானைப் பொய்யிலா மெய்யன் தன்னைப் செய்வானைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.6 |
கரிய மேகம் போன்ற நீலகண்டனாய், வானத்து மின்னல்போலச் சடையில் ஒளிவீசும் பிறை அணிந்தவனாய், எங்கும் மழையாய் அருளைப் பொழிவானாய், எங்கும் சென்று பிச்சை எடுப்பானாய்ப் பள்ளம் போன்ற வாயை உடைய பேய்க் கூட்டங்கள் ஆரவாரிக்க நிறைந்த தூணியிலிருந்து அம்பைச் செலுத்துபவனாய்ப் பொய்கலவாத மெய்யனாய்ப் பூமியிலும் மேலுலகங்களிலும் பொருந்தும் வாழ்க்கையில் உயிர்களைப் பிறக்கச் செய்வானாய், உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர்.
2590 | மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை புக்கானை எப்பொருட்கும் பொதுவா னானைப் தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத் கானைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.7 |
எல்லோருக்கும் மேலானவனாய்க் குறையிரந்து வருபவர்களை விரும்பிக் குறைமுடிப்பவனாய், அறுவகை வைதிக சமயங்களாகவும் ஆகியவனாய், எல்லாப் பொருள்களுக்கும் பொதுவானவனாய்த் தேவர்களும் போற்றத்தக்கானாய்த் தன்னைத் தவிர வேறு மெய்ப்பொருள் இல்லாதவனாய், மேருமலையை நடுவாக வைத்துத் திசைகளைப் பகுக்கச் செய்தவனாய், உள்ள திருவீழி மிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர்.
2591 | வானவர்கோன் தோளிறுத்த மைந்தன் தன்னை ஊனவனை உயிரவனை யொருநாட் பார்த்தன் கானவனைக் கயிலாயம் மேவி னானைக் தேனவனைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.8 |
இந்திரனுடைய தோள்களை நீக்கிய வலிமை உடையவனாய், வளைகுளம் மறைக்காடு என்ற தலங்களில் உறைபவனாய், உடலாகவும் உயிராகவும் இருப்பவனாய், ஒரு காலத்தில் அருச்சுனனுடைய தவத்தின் உறுதி நிலையை அறியச் சென்ற வேடுவனாய்க் கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்த் தன்னைச் சேர்ந்தவர்களுக்குத் தேன் போல இனியவனாய், உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர்.
2592 | பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப் வரத்தானை வணங்குவார் மனத்து ளானை சரத்தானைச் சரத்தையுந்தன் தாட்கீழ் வைத்த சிரத்தானைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.9 |
மாயைக்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளவனாய், மாயைக்கு இப்பால் அளவற்ற வடிவங்களும் உடையவனாய், ஆன்மாக்களுக்குத் தலைவனாய், அடியவர்களுக்கு முத்தி நிலையைக் காட்டும் மேம்பட்டவனாய்த் தன்னை வணங்குபவர் மனத்து இருப்பவனாய், வாயுதேவன் திருமால் அக்கினி தேவன் இம்மூவரையும் முறையே அம்பின் சிறகாகவும் அம்பாகவும் அம்பின் கூரிய நுனியாகவும் கொண்டவனாய், அந்த அம்பையும் பயன் படுத்தாது விடுத்த தவச்செல்வனாய்த் தாருகவனத்து முனிவர் விடுத்த வெண்தலையைச் சடைமுடியில் அணிந்தவனாய்த் திருவீழிமிழலையில் உள்ள பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர்.
2593 | அறுத்தானை அயன்தலைகள் அஞ்சி லொன்றை இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை பறித்தானைப் பகீரதற்காய் வானோர் வேண்டப் செறித்தானைத் திருவீழி மிழலை யானைச் |
6.050.10 |
பிரமனுடைய ஐந்தலைகளுள் ஒன்றனை அறுத்தானாய், அஞ்சாமல் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் தோள்களை முரித்து அவன் இசைத்த நரம்பின் ஒலியைக் கேட்டவனாய்த் தக்கன் வேள்வியில் சந்திரனைக் காலால் தேய்த்தவனாய், சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்தவனாய்ப் பகீரதனுக்காகவும் தேவர்கள் வேண்டியதற்காகவும் பரவலாக இறங்கிவந்த கங்கையைப் பனித்துளி போலத் தன் சடையில் அடக்கியவனாய், உள்ள திருவீழிமிழலைப் பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீழிமிழலை - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவீழி, யானைச்சேராதார், சேர்கின், தீநெறிக்கே, சேராதார், செல்பவராவர், நெறிக்கண், மனத்து, திருவீழிமிழலையானைச், பெருமானைச், உடையவனாய், தேவர்கள், மிழலையானைச், உள்ளவனாய், எங்கும், மாயைக்கு, அம்பின், முத்தி, இருப்பவனாய், சடையில், தோள்களை, செல்பவர், திருவீழிமிழலையில், பெருமானை, சென்று, பரந்து, திருச்சிற்றம்பலம், திருமுறை, பாசுபத, விரும்பிக், தவத்தின், திருவீழிமிழலை, காலத்தில், கோபித்து, தக்கன், சந்தோக