முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.111.பசுபதி
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.111.பசுபதி

4.111.பசுபதி
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1031 | சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் |
4.111.1 |
பெரிய கங்கை என்னும் மூங்கில் போன்ற பருத்ததோள்களை உடைய பெண்ணின் ஒளி வீசுகின்ற அணிகலன்களை அணிந்த அழகிய முலைமீது பாம்புகள் தவழும் சடையை உடையவனே! எம்மை அடிமை கொள்ளும் ஆன்ம நாயகனே! சாம்பலைப் பூசிக் கொண்டு. உறங்கும்போது வெறும் தரையிலேயே கிடந்து உறங்கி உன் திருவடிகளை முன் நின்று துதித்து அங்கலாய்க்கும் அடியவர்கள்திறத்து அருள் செய்வாயாக.
1032 | உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த இடும்பைப் படாம லிரங்குகண் டாயிரு ளோடச் அடும்பொத் தனைய வழன்மழு வாவழ படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் |
4.111.2 |
இருள் ஓடுமாறு, அடுப்பம்பூவை ஒத்த நிறத்தினதாய்ச் செந்தீயை வெளிப்படுத்திக் கோபிக்கும் மழுப்படையை ஏந்தியவனே! நெருப்பைக் கக்கும் படமெடுத்தாடும் பாம்பை இடுப்பில் இறுகக் கட்டியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! பிறவிப் பிணியைப் போக்கி உன் திருவடிகளையே தம் தலைக்கண்வைத்த மேம்பட்டவர்களாகிய அடியவர்கள் துன்புறாத வகையில் அவர்களுக்கு இரங்கி அருளுவாயாக.
1033 | தாரித் திரந்தவி ராவடி யார்தடு மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை வேரித்தண் பூஞ்சுட ரைங்கணை வேள்வெந்து பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் |
4.111.3 |
முன்னொருகாலத்தில் தேனை உடைய குளிர்ந்த பூக்களாகிய ஒளிவீசும் ஐந்து அம்புகளை உடைய மன்மதனை வெந்து விழுமாறு நெருப்பினை வெளிப்படுத்திய கண்ணுடையவனாய் எம்மை ஆளும் பசுபதியே! வறுமைத் துன்பம் நீங்காத அடியவர்களுக்கு ஏற்படும் தடுமாற்றமாகிய பெரிய அலைகளை உடைய கடலிலிருந்து அவர்களைக் கரையேற்றுவாயாக.
1034 | ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத அருவினைச் சுற்ற மகல்விகண் டாயண்ட பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் |
4.111.4 |
வானளாவிய பெரிய மலைபோன்ற யானை பிளிறுமாறு அதன் உடலைப் பிளந்து மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த பசுபதியே! வேறு எவரையும் பற்றுக்கோடாகக் கருதாமல் உன் திருவடிகளையே வழிபடும் அடியவர்களுடைய நீங்குதல் அரிய வினைத் தொகுதிகளைப் போக்கி அருளுவாயாக.
1035 | இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்ட சுடர்த்திங்கள் சூடிச் சுழல்கங்கை யோடுஞ் படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் |
4.111.5 |
அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் ஒளி வீசுகின்ற சந்திரனைச் சூடிச் சுழலுகின்ற கங்கையோடு வண்டுகள் நெருங்கிப் பூக்களில் பரவுதலைக் கொண்ட செஞ்சடைப் பசுபதியே! இடையூறு ஏதும் இல்லாமல் தொடர்ச்சியாக உன் திருவடிகளை வழிபடுகின்ற அடியவர்களை வருத்தும் பிறவிப் பிணியைப் போக்குவாயாக.
1036 | அடலைக் கடல்கழி வானின் னடியிணை நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா படரச் சுடர்மகு டாவெம்மை யாளும் |
4.111.6 |
நறிய கொன்றை, பிறை, சாம்பல், பாம்பு, தலையில் சூடும் மணி இவை பரவி ஒளி வீசும் சடைமுடியை உடைய பசுபதியே! துயர்க்கடல் நீங்குவதற்காக நின் திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்த அடியவர்கள் வருத்தமுறாத வகையில் அவர்கள் துயரங்களைப் போக்குவாயாக.
1037 | துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் அறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் |
4.111.7 |
மும்மதில்கள் உடையனவாய்த் தாம் தங்கும் இடங்களை அழித்தல் தொழிலைப் புரிந்து வானத்திலே உலவும், மந்திரத்தால் செல்லும் தேர்போலப் பறக்கும் ஆற்றலுடைய மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த பசுபதியே! உலகில் பற்றறுத்து நிற்றலாகிய தொழிலையே விரும்பிச் செய்து உன்னுடைய வண்டுகள் சூழ்ந்து திருவடிகளையே தொழும் அடியவர்களுடைய மறத்தலாகிய செயலைப் போக்கி அருளுவாயாக.
1038 | சித்தத் துருகிச் சிவனெம்பி ரானென்று பித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி மத்தத் தரக்க னிருபது தோளு பத்துற் றுறநெரித் தாயெம்மை யாளும் |
4.111.10 |
செருக்குற்ற இராவணனுடைய இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும், அவனுக்கு உன் திறத்துப் பக்தி ஏற்படுமாறு நசுக்கியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! மனம் உருகிச் சிவனே எம் தலைவன் என்று மனத்திலே உறுதியான எண்ணம் மிகவே அதனையே எப்பொழுதும் அடைவுகேடாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியவர்களுடைய பிறவிப் பிணியைப்போக்கி அருளுவாயாக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 109 | 110 | 111 | 112 | 113 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பசுபதி - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - யாளும்பசுபதியே, பசுபதியே, திருவடிகளையே, யாயெம்மை, அருளுவாயாக, போக்கி, அடியவர்களுடைய, தாயெம்மை, பிறவிப், கொள்ளும், திருமுறை, திருச்சிற்றம்பலம், விலக்குகண், வண்டுகள், போக்குவாயாக, சாம்பலைப், சூடிச், வகையில், பிணியைப், பசுபதி, வீசுகின்ற, மூங்கில், அடியவர்கள், திருவடிகளை