முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.052.திருநெடுங்களம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.052.திருநெடுங்களம்
1.052.திருநெடுங்களம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நித்தியசுந்தரர்.
தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.
559 |
மறையுடையாய் தோலுடையாய் பிறையுடையாய் பிஞ்ஞகனே குறையுடையார் குற்றமோராய் நிறையுடையா ரிடர்களையாய் |
1.052.1 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள்வாயாக.
560 |
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் தினைத்தனையா மிடற்றில்வைத்த மனத்தகத்தோர் பாடலாடல் நினைத்தெழுவா ரிடர்களையாய் |
1.052.2 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.
561 |
நின்னடியே வழிபடுவான் என்னடியா னுயிரைவவ்வே பொன்னடியே பரவிநாளும் நின்னடியா ரிடர்களையாய் |
1.052.3 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண் புக அவனைக் கொல்லவந்த வலிமைபொருந்திய கூற்றுவனைச் சினந்து, என் அடியவன் உயிரைக் கவராதே என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.
562 |
மலைபுரிந்த மன்னவன்றன் அலைபுரிந்த கங்கைதங்கு தலைபுரிந்த பலிமகிழ்வாய் நிலைபுரிந்தா ரிடர்களையாய் |
1.052.4 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான்மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.
563 |
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் தூங்கிநல்லார் பாடலோடு தாங்கிநில்லா அன்பினோடுந் நீங்கிநில்லா ரிடர்களையாய் |
1.052.5 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவ வேடம் தாங்கியவர்களும் பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடி வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடிகளை நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.
564 |
விருத்தனாகிப் பாலனாகி கருத்தனாகிக் கங்கையாளைக் அருத்தனாய வாதிதேவ நிருத்தர்கீத ரிடர்களையாய் |
1.052.6 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங் கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலை ஞானங்கள் மெய்ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய் உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருள்வாயாக.
565 |
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் மாறுகொண்டார் புரமெரித்த ஏறுகொண்டாய் சாந்தமீதென் நீறுகொண்டா ரிடர்களையாய் |
1.052.7 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கியருள்வாயாக.
566 |
குன்றினுச்சி மேல்விளங்குங் அன்றிநின்ற வரக்கர்கோனை என்றுநல்ல வாய்மொழியா நின்றுநைவா ரிடர்களையாய் |
1.052.8 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலையின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.
567 |
வேழவெண்கொம் பொசித்தமாலும் சூழவெங்கு நேடவாங்கோர் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் நீழல்வாழ்வா ரிடர்களையாய் |
1.052.9 |
திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப் பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினதுகொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன் போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாய்.
568 |
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற தஞ்சமில்லாச் சாக்கியருந் துஞ்சலில்லா வாய்மொழியால் நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் |
1.052.10 |
கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.
569 |
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற தஞ்சமில்லாச் சாக்கியருந் துஞ்சலில்லா வாய்மொழியால் நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் |
1.052.11 |
மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப் பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெடுங்களம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருநெடுங்களம், இறைவனே, ரிடர்களையாய், நெடுங்களமே, அடியவர்களின், இடர்களைப், வாழும், பகலும், இடர்களைக், தலைவனாகிய, திருவடி, கொண்டு, விரும்பி, கொண்டவனே, போக்கியருளுவாயாக, வாய்மொழியால், தோத்திரநின், நெஞ்சில்வைப்பா, மன்னவனே, மேலும், துஞ்சலில்லா, வெஞ்சொற்றஞ்சொல், தஞ்சமில்லாச், சாக்கியருந், பெருமானே, சமணும், றறியார், லாக்கிநின்ற, வேடமிலாச், தத்துவமொன், திருமேனியின், இடர்களை, நீக்கி, மேம்பட்ட, வளரும், திருமுறை, திருச்சிற்றம்பலம், அருள்வாயாக, இரவும், ணிழற்கீழ், மகிழ்பவனே, தலைவநின்றா, களைந்தருள்வாயாக, நின்னையே, வழிபடும், திருவடிகளை