முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.051.திருச்சோபுரம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.051.திருச்சோபுரம்

1.051.திருச்சோபுரம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோபுரநாதர்.
தேவியார் - சோபுரநாயகியம்மை.
548 |
வெங்கணானை யீருரிவை மங்கைபாகம் வைத்துகந்த கங்கையோடு திங்கள்சூடிக் தொங்கலானே தூயநீற்றாய் |
1.051.1 |
கங்கை திங்கள் ஆகியவற்றை முடிமிசைச் சூடி மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித் திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய, விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ?.
549 |
விடையமர்ந்து வெண்மழுவொன் சடையொடுங்கத் தண்புனலைத் கடையுயர்ந்த மும்மதிலுங் தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் |
1.051.2 |
வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமரது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?.
550 |
தீயராய வல்லரக்கர் சாயவெய்து வானவரைத் பாயும்வெள்ளை யேற்றையேறிப் தூயவெள்ளை நீற்றினானே |
1.051.3 |
பாய்ந்து செல்லும் வெண்ணிறமான விடையேற்றின் மரது ஏறி, பாயும் புலியினது தோலை உடுத்துத் தூய வெண்ணீற்றை அணிந்துள்ளவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள் அழுந்துமாறு கணை எய்து தேவர்களை வாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ?
551 |
பல்லிலோடு கையிலேந்திப் தல்லல்வாழ்க்கை மேலதான வில்லைவென்ற நுண்புருவ தொல்லையூழி யாகிநின்றாய் |
1.051.4 |
வில்லை வென்ற வளைந்த நுண்புருவத்தையும், வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடைய உமையம்மையோடும், பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! பல் இல்லாத மண்டை யோட்டைக் கையிலேந்திப் பலர்இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் அல்லல் பொருந்திய வாழ்க்கையின்மேல் நீ ஆதரவு காட்டுதற்குக் காரணம் என்னவோ?
552 |
நாற்றமிக்க கொன்றைதுன்று ஏற்றமாக வைத்துகந்த யொல்கவுதைத் தருளி சோபுரமே யவனே. |
1.051.5 |
வலிமை பொருந்திய காலனை அழியுமாறு உதைத்தருளி, எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெற வைத்து மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
553 |
கொன்னவின்ற மூவிலைவேற் பொன்னைவென்ற கொன்றைமாலை அன்னமன்ன மென்னடையாள் துன்னவண்ண ஆடையினாய் |
1.051.6 |
அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தி, இடையில் அழகிய கோவண ஆடையை அணிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொல்லும் தொழில் பொருந்திய மூவிலை வேலையும் தூய மழுவாட் படையையும் உடையவனே! நிறத்தால் பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச் சூடுதற்குரிய காரணம் என்னையோ?
554 |
குற்றமின்மை யுண்மைநீயென் கற்றகேள்வி ஞானமான வற்றலாமை வாளரவம் துற்றலான கொள்கையானே |
1.051.7 |
ஊன் வற்றிய ஆமை ஓட்டையும், ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு, பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும், கேள்வியும், அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ?
555 |
விலங்கலொன்று வெஞ்சிலையாக் குலங்கள்வாழு மூரெரித்த இலங்கைமன்னு வாளவுணர் துலங்கவூன்றி வைத்துகந்தாய் |
1.051.8 |
இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.
556 |
விடங்கொணாக மால்வரையைச் கடைந்தநஞ்சை யுண்டுகந்த இடந்துமண்ணை யுண்டமாலு தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் |
1.051.9 |
மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நரரைக் கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
557 |
புத்தரோடு புன்சமணர் பித்தராகக் கண்டுகந்த மத்தயானை யீருரிவை துத்திநாகஞ் சூடினானே |
1.051.10 |
மதம் பொருந்திய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து, நீண்ட சடையின் மேல் புள்ளிகளையுடைய நாகப்பாம்பைச்சூடியவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! புத்தர்களும், சமணர்களும் பொய்யுரைகளையே பேசிப் பித்தராகத் திரிதலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம் என்னையோ?.
558 |
சோலைமிக்க தண்வயல்சூழ் சீலமிக்க தொல்புகழார் ஞாலமிக்க தண்டமிழான் கோலமிக்க மாலைவல்லார் |
1.051.11 |
சோலைகள் மிகுந்ததும், குளிர்ந்தவயல்களால் சூழப்பட்டதுமான திருச்சோபுரம் மேவிய இறைவனைச் சீலத்தால் மிக்க, பழமையான புகழை உடைய அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப் பதியின் தலைவனும். நன்மைகளையே கருதுபவனும், உலகில் மேம்பட்ட தண் தமிழ் பாடியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய அழகுமிக்க இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சோபுரம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சோபுரமே, திருச்சோபுரம், இறைவனே, காரணம், னைகொலாம், பொருந்திய, என்னையோ, விளங்கும், மகிழ்தற்குக், என்னவோ, என்னும், கொன்றை, மாலையை, கையிலேந்திப், அரக்கர், ஞானசம்பந்தன், வாழும், காரணமென், விரலால், நிற்பவனே, பழமையான, அழுந்துமாறு, வைத்துகந்த, திருச்சோபுரத்தில், யீருரிவை, திருச்சிற்றம்பலம், திருமுறை, யானையை, உரித்து, வில்லை, உடையவனே, தாங்கியதென், கொண்டு, தோலைப், வெண்மையான