முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.108.திருப்பாதாளீச்சரம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.108.திருப்பாதாளீச்சரம்

1.108.திருப்பாதாளீச்சரம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
1163 |
மின்னியல் செஞ்சடைமேல்
விளங்கும்மதி பொன்னியல் கொன்றையினான் அன்ன மனநடையா ளொருபாகத் பன்னிய பாடலினா |
1.108.1 |
மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் மதி, ஊமத்தமலர் பொன் போன்ற நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி, அழகு விளங்கும் அன்னம் போன்ற நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, நாள்தோறும் வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1164 |
நீடலர் கொன்றையொடு நிரம்பா தோடமர் காதினல்ல குழையான் ஆடர வம்பெருக வனலேந்திக் பாடலி னாலினியா |
1.108.2 |
கொத்தாக நீண்டு அலர்கின்ற கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில் சூடி, ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு காதில் நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும், சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும், ஆடும் பாம்பு அணிகலனாகப் பெருகித் தோன்ற அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்.
1165 |
நாகமும் வான்மதியுந் நலமல்கு போகநல் வில்வரையாற் தோகைநன் மாமயில்போல் பாகமும் வைத்துகந்தா |
1.108.3 |
பாம்பு, வானில் விளங்கும் மதி ஆகியனவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும், உரிய காலம் கழிய நல்ல மேருவில்லால் முப்புரங்களை எரித்துகந்தவனும், தோகையை உடைய நல்ல ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்புலனாய மென்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1166 |
அங்கமு நான்மறையும் அருள்செய் மங்கையோர் கூறுடையான் செங்கய னின்றுகளுஞ் செறுவிற் பங்கய நின்றலரும் |
1.108.4 |
பேய்கள் பலவும் உடன் சூழ, சுடுகாட்டை அரங்காக எண்ணி நின்று, தீ, மான்கன்று மழு ஆகியவற்றைக் கைகளில் விளங்குவித்து, தேய்ந்த பிறையும் பாம்பும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும் உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1167 |
கண்ணமர் நெற்றியினான்
கமழ்கொன்றைச் விண்ணியன் மாமதியும் பெண்ணமர் மேனியினான் பெருங்கா பண்ணியல் பாடலினா |
1.108.5 |
கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1168 |
கண்ணமர் நெற்றியினான்
கமழ்கொன்றைச் விண்ணியன் மாமதியும் பெண்ணமர் மேனியினான் பெருங்கா பண்ணியல் பாடலினா |
1.108.6 |
கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1169 |
விண்டலர் மத்தமொடு
மிளிரும்மிள வண்டலர் கொன்றைநகு விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை பண்டிசை பாடலினா |
1.108.7 |
தளையவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, புரண்டு கொண்டிருக்கும் இளநாகம், வன்னிஇலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை, பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை உடையவனும், பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவனும், நான்கு வேதங்களையும் உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசை மரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1170 |
மல்கிய நுண்ணிடையா ளுமைநங்கை தொல்லை மலையெடுத்த கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் பல்லிசை பாடலினா |
1.108.8 |
செறிந்த நுண்மையான இடையினை உடைய உமையம்மை அஞ்ச அன்று கையால் பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும், முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவனும், குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்தவனும் பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1171 |
தாமரை மேலயனும் மரியுந்தம காமனை வீடுவித்தான் பூமரு வுங்குழலா ளுமைநங்கை பாமரு வுங்குணத்தா |
1.108.9 |
மன்மதனை எரித்த சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும், திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது குறிப்பெச்சம்.
1172 |
காலையி லுண்பவருஞ் சமண்கையருங் றால விடநுகர்ந்தா னவன் மாலையில் வண்டினங்கண் மதுவுண் பாலையாழ்ப் பாட்டுகந்தா |
1.108.10 |
காலையில் சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ் மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக் காலத்தில்வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக் கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.
1173 |
பன்மலர் வைகுபொழில்
புடைசூழ்ந்த பொன்னியன் மாடமல்கு தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான இன்னிசை பத்தும்வல்லா |
1.108.11 |
பலவகையான மலர்களும் பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று தரிசிக்குமாறு, பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும், தன்புகழ் உலகெங்கும் பரவி விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந்தன் பாடிய இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 106 | 107 | 108 | 109 | 110 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாதாளீச்சரம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோயில், னுறைகோயில், பாதாளே, உறையும், பாதாளீச்சரமாகும், சிவபிரான், பொருந்திய, கொன்றை, பாடலினா, உடையவனும், மலரோடு, விளங்கும், கொண்டு, சுடுகாட்டை, பாடல்களைப், சிறந்த, உலாவும், கமழும், பண்ணியல், வாடும், நெற்றியை, சடைமுடி, பொருந்த, வானின்கண், தன்னால், ஆடுபவனுமாகிய, பாடல்களுடன், ளுமைநங்கை, கையால், இன்னிசை, பண்ணொடு, அரங்காகக், வைத்தவனும், டரங்காக, விரும்பப், திருமேனியனும், பிறைமதியையும், விண்ணியன், சிவபெருமான், வெள்ளைத், கைவீசி, காதில், உமையம்மை, கங்கையையும், திருமுறை, திருச்சிற்றம்பலம், செஞ்சடைமேல், மத்தமொடு, விளங்குவோனும், பாம்பு, முடன்வைத், தவன்விரும்பும், பெண்ணமர், மேனியினான், மாமதியும், திருப்பாதாளீச்சரம், கண்ணமர், நெற்றியினான், கமழ்கொன்றைச், சடைதன்மே, பெருங்கா