உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

| தத்துவங்கள் ஆறாறும் தம்மைத்தாம் என்று அறியா எத்தன்மை என்னில் இயம்பக்கேள் - சுத்தமாம் ஆறு சுவையும் அறியாவே தம்மைத்தாம் கூறில் அவை இவை போல் கொள். | 26 | 
| ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை வேறு ஒருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும் ஒன்று ஒன்றாய் நாடி உணர்ந்து ஓதில் அதில் உற்று அறிவாய் நின்ற பொருள் தானேகாண் நீ. | 27 | 
சிவ ரூபம்
                      
| குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு பொன்றாத நும் உருவம் போதியீர் - நின்று அருக்கன் கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனது அறிவில் நண்ணி அறிவித்திடுவோம் நாம். | 28 | 
| அன்றியும்கேள் ஆன்மாவால் ஆய்ந்து அறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இவை என்ன - நின்றதுபோல் ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன் அறிவில் மேவாமல் மேவி நாமே. | 29 | 
| அக்கரங்கட்கு எல்லாம் அகர உயிர் நின்றால்போல் மிக்க உயிர்க்கு உயிராய் மேவினோம் - எக்கண்ணும் நில்லா இடத்து உயிர்க்கு நில்லாது அறிவு என்று நல் ஆகமம் ஓதும் நாடு. | 30 | 
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› | 
	தேடல் தொடர்பான தகவல்கள்:
			
	
  உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், உண்மை, சாத்திரங்கள், சித்தாந்த, விளக்கம், அறிவில், உயிர்க்கு, சுவையும், இலக்கியங்கள், ஆறாறும், தம்மைத்தாம், அறியா
 கலைக் களஞ்சியம்
 கலைக் களஞ்சியம்

 
				
