திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங் கல்லனா யானானென் றுந்தீபற அம்பிகை பாகனென் றுந்தீபற. | 21 |
காற்றினை மாற்றிக் கருத்தைக் * கருத்தினுள் ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற அல்லாத தல்லலென் றுந்தீபற. | 22 |
* கருத்தினில் |
கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில் வெள்ள வெளியாமென் றுந்தீபற வீடு மெளிதாமென் றுந்தீபற. | 23 |
எட்டுக்கொண் டார்தமைத் தொட்டுக்கொண் டேநின்றார் விட்டா ருலகமென் றுந்தீபற வீடேவீ டாகுமென் றுந்தீபற. | 24 |
சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே ஒத்ததே யொத்ததென் றுந்தீபற ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற. | 25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, நூல்கள், சாத்திரங்கள், திருவுந்தியார், சித்தாந்த, இலக்கியங்கள்