முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.018.திருவேள்விக்குடி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.018.திருவேள்விக்குடி

7.018.திருவேள்விக்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
178 |
மூப்பதும் இல்லை பிறப்பதும் சேர்ப்பது காட்டகத் தூரினு காப்பது வேள்விக் குடிதண் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் |
7.018.1 |
ஆராயுங்கால் எங்கள் தலைவர், பிறத்தலும் இல்லை; பின்பு வளர்ந்து முதுமை அடைதலும் இல்லை; முடிவில் இறந்தொழிதலுமில்லை; உறைவிடம் காட்டிடத்துள்ளது; அதுவன்றி ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும், தண்ணிய திருத்துருத்தியும், அன்றியும் அரைக்கண் இறுகக் கட்டுவது பாம்பு; இவற்றை முன்பே அறிந்தோமாயின், இவர்க்கு நாம் ஆட்படா தேயிருப்பேம். இவற்றை அறிந்தோமாயின், இவர்க்கு நாம் ஆட்படா தொழிவேமோ!
179 |
கட்டக்காட் டின்னட மாடுவ சுட்டவெண் ணீறணிந் தாடுவர் வட்டக்குண் டத்தில் எரிவளர்த் அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல் |
7.018.2 |
எங்கள் தலைவர். இடரைத் தரும் காட்டிலே நடனம் ஆடுவார்; யாராலும் காண்பதற்கு அரியவர். சுடப்பட்ட வெள்ளிய சாம்பலைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார்; வேதத்தைப் பலகாலும் பயில்கின்றவர்களாகிய அந்தணர்கள், வட்டமாகிய குழியில், தூயதாகிய நெய்யினால் எரியை வளர்த்துப் போற்றி, அதன்கண் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார்; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!
180 |
பேருமோர் ஆயிரம் பேருடை ஊரும தொற்றியூர் மற்றையூ காருங் கருங்கடல் நஞ்சமு காரம்பாம் பாவ தறிந்தோமேல் |
7.018.3 |
எங்கள் தலைவர். பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர்; இவர் பெண்ணும் அல்லர்; ஆணும் அல்லர்; இவர்க்கு ஊரும் ஒற்றிஊரே; அதுவன்றி வேறோர் ஊரை உடையராதலை நாம் அறிந்திலோம்; இருண்ட கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உணவாக உண்டு. கண்டம் கறுப்பாயினார்; இவர்க்கு ஆரமாவது, பாம்பே; இவற்றையெல்லாம் அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!
181 |
ஏனக்கொம் பும்மிள வாமையும் கானக்காட் டிற்றொண்டர் கண்டன மானைத்தோல் ஒன்றுடுத் துப்புலித் யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் |
7.018.4 |
எங்கள் தலைவர் பன்றியின் கொம்பையும், இளமையான ஆமையின் ஓட்டினையும் அணிந்து, ஒற்றை எருதின்மேல் ஏறுபவராய், தம்மை அடியார்கள் காட்டில் கண்ட கோலங்களையெல்லாம் பலபடியாக எடுத்துச் சொல்லிய பின்பும், விருப்பம் உண்டாக, மானினது அழகிய தோல் ஒன்றை அரையில் உடுத்து, தோளின் கண்ணும் புலித்தோலை இட்டு, உடம்பின் மேல் யானைத் தோலைப் போர்த்துக் கொள்பவர். இவற்றையெல்லாம் அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!
182 |
ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர் பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் |
7.018.5 |
எங்கள் தலைவர் நாவிற்குச் சுவைகள் பலவற்றை ஊட்டி உண்பதற்கு, ஊரவர் இடுகின்ற பிச்சையையன்றி மற்றோர் உணவையும் இலர். ஒற்றை எருதைக் கயிற்றிற் கட்டி வைத்துக் கொண்டு, அதன் மேல் ஏறிச் செல்வர். சிறிய பூதங்கள் தம்மிடத்தில் பாட்டு ஈதலைக் கேட்டு நின்று இன்பம் நுகர்பவராவர். புற்றுக்கள் தோறும் சென்று பல பாம்புகளைப் பிடித்து ஆட்டிப் பிழைப்பர். இவற்றையெல்லாம் அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!
183 |
குறவனார் தம்மகள் தம்மக மறவனா ராய்அங்கோர் பன்றிப்பின் இறைவனார் ஆதியார் சோதியா அறவனா ராவ தறிந்தோமேல் |
7.018.6 |
எங்கள் தலைவர்தம் புதல்வர்க்கு மனைவி, ஒரு குறவர் மகள்; இவரும் கொல்லும் தொழிலையுடைய வேடுவராய் முன்பு ஒரு பன்றிப்பின் சென்றார்; இவை மாயமாம். இவர் இப் பெற்றியரான இறைவரும், முன்னவரும், ஒளி வடிவினரும், அறவரும் ஆவதை அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!
184 |
பித்தரை ஒத்தொரு பெற்றியர் முற்றவை தம்மனை தந்தைக்குந் செத்தவர் தந்தலை யிற்பலி அத்தவ மாவ தறிந்தோமேல் |
7.018.7 |
என்னைப் பெற்ற நற்றாயும், வயது முதிர்ந்த அவள் தாயும், இவ் விருவர்க்கும் அன்னை, தந்தை, தமக்கை என்பவரும் ஆகிய எல்லோர்க்கும் இறைவராய் உள்ள இவர். பித்தரைப் போன்ற ஒரு தன்மை உடையராய் இருக்கின்றார்; அன்றியும், இறந்தவர் தலையோட்டில் பிச்சை ஏற்பதே செல்வமாக, அன்னதொரு தவமுடையராதலை அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!
185 |
உம்பரான் ஊழியான் ஆழியான் தம்பர மல்லவர் சிந்திப் எம்பர மல்லவர் என்னெஞ்சத் அம்பர மாவ தறிந்தோமேல் |
7.018.8 |
'இந்திரன், உருத்திரன், மால், அயன், என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும், 'தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குபவர் எம்மளவல்லவர்' என்றும் சொல்லப்படுகின்ற இவர், என் மனத்திலும் இருத்தலுடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!
186 |
இந்திர னுக்கும் இராவண மந்திரம் ஓதுவர் மாமறை சிந்துரக் கண்ணனும் நான்முக அந்தரஞ் செல்வ தறிந்தோமேல் |
7.018.9 |
எங்கள் தலைவர் தேவர் கோமானாகிய இந்திரனுக்கும், அரக்கர் கோமானாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தார். அந்தணர்க்குரிய மந்திரம் ஓதுதல், மறைபாடுதல் என்பவற்றையும், வேடர்க்குரிய மான் கன்றைப் பிடித்தலையும் உடையவர். 'மால், அயன்' என்னும் இருவரும் உடனாயிருப்ப, அவரொடு நிற்றலேயன்றி, தாம் மட்டும் தனியே உயர்ந்தும் செல்வர். இவற்றையெல்லாம் அறிந்தோமேல், நாம் இவர்க்கு ஆட்படோமே!
187 |
கூடலர் மன்னன் குலநாவ பாடவல் லபர மன்னடி நாடவல் லதொண்டன் ஆரூரன் பாடவல் லார்பர லோகத் |
7.018.10 |
பகைவர்க்கு அவர் வணங்கும் அரசனும், மேன்மை பொருந்திய திருநாவலூர்க்குத் தலைவனும், நன்மையையுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யுமாற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன், தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப்பதிகத்தைப் பாடவல்லவர், மேலான உலகத்தில் சென்று தங்குதல் பொருளன்று. (மிக எளிதாம்)
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேள்விக்குடி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இவர்க்கு, அறிந்தோமேல், காட்படோமே, நாம்இவர்க், ஆட்படோமே, தறிந்தோமேல், எங்கள், தலைவர், இவற்றையெல்லாம், பன்றிப்பின், ராய்அங்கோர், செல்வர், மல்லவர், சென்று, என்றும், கோமானாகிய, பாடவல், மந்திரம், னுக்கும், அல்லர், என்னும், ஆயிரம், அறிந்தோமாயின், இவற்றை, அன்றியும், அதுவன்றி, திருச்சிற்றம்பலம், ஆட்படா, காப்பது, திருமுறை, திருவேள்விக்குடி, பாடுவர், உடையவர்