முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.020.திருக்கோளிலி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.020.திருக்கோளிலி

7.020.திருக்கோளிலி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோளிலிநாதர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
199 |
நீள நினைந்தடியேன் உனை வாளன கண்மடவா ளவள கோளிலி எம்பெருமான் குண்டை ஆளிலை எம்பெருமான் அவை |
7.020.1 |
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, வாள்போலுங் கண்களையுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன். அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை; அடியேன், எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன்; வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
200 |
வண்டம ருங்குழலாள் உமை விண்டவர் தம்புரமூன் றெரி தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் அண்டம தாயவனே அவை |
7.020.2 |
வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகி, 'உமை' என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே, பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எத்த எங்கள் அந்தணனே, தௌந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, உலகெலாம் ஆகியவனே, அடியேன் குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; ஆதலின், அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளை யிட்டருள்.
201 |
பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட மாதர்நல் லார்வருத்தம் மது கோதில் பொழில்புடைசூழ் குண்டை ஆதியே அற்புதனே அவை |
7.020.3 |
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, எல்லார்க்கும் முன்னவனே, யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே, நீ, உன் திருமேனியில் பாதியிற்றானே, 'உமை' என்னும் ஒரு மாதராளை வைத்தாய்; அதுவன்றி, விரிந்த சடையின்கண், 'கங்கை' என்னும் மற்றொரு மாதராளையும் வைத்தாய்; ஆதலின், நீயும் நற்பண்புடைய பெண்டிர் தம் வாழ்க்கை முட்டுற்றவிடத்து அடையும் வருத்தத்தினது தன்மையை நன்குணர்வாயன்றே? அதனால் உன்னை வேண்டுகின்றேன்; அடியேன் குற்றம் இல்லாத சோலைகள் புடைசூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
202 |
சொல்லுவ தென்உனைநான் தொண்டை புல்கி இடத்தில்வைத்தாய்க் கொரு கொல்லை வளம்புறவிற் குண்டை அல்லல் களைந்தடியேற் கவை |
7.020.4 |
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என் உளது? நீ, கொவ்வைக்கனிபோலும் வாயினையுடைய, 'உமை' என்னும் நங்கையை முன்பு மணந்து, பின்பு இடப்பாகத்திலே வைத்தாய்; அது காரணமாக உன்னை ஒரு தூற்றுதல் செய்தார் எவரேனும் உளரோ? இல்லை ஆதலின், எனக்கு நீ என் இல்வாழ்க்கைக்கு உரியதனைச் செய்தாலும் உன்னைத் தூற்றுவார் ஒருவரும் இல்லை. அடியேன், சில நெற்களை, கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலம் சூழ்ந்த குண்டையூரிற் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அடியேனுக்கு அந்த அல்லலை நீக்கி, அவற்றை அங்குச் சேர்த்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
203 |
முல்லை முறுவலுமை ஒரு பல்லயர் வெண்டலையிற் பலி கொல்லை வளம்புறவிற் றிருக் அல்லல் களைந்தடியேற் கவை |
7.020.5 |
முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே, சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே, கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, அடியேன், குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. ஆதலின் அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி, அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
204 |
குரவம ருங்குழலாள் உமை நங்கைஓ பங்குடையாய் நீயும் அறிதியன்றே யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் அட்டித் தரப்பணியே. |
7.020.6 |
குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய 'உமை' என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே, பாம்பைக் கட்டியுள்ளவனே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே, நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே? அவள் பொருட்டு, அடியேன், குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை அவள் பாற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
205 |
எம்பெரு மான்உனையே நினைந் வம்பம ருங்குழலாள் ஒரு செம்பொனின் மாளிகைசூழ் திருக் அன்பது வாய்அடியேற் கவை |
7.020.7 |
மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒருபாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே, செம்பொன்னாலியன்ற மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, அடியேன் குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. எம் தலைவனாகிய உன்னையே எப்பொழுதும் நினைந்து துதிக்கும் தொழிலுடையேன் யான்; வேறுயாரை வேண்டுவேன்! என்னிடத்து அன்புடையையாய், அவற்றை அங்குச் சேர்த்து உதவ. நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
206 |
அரக்கன் முடிகரங்க ளடர்த் பரக்கும் அரவல்குலாள் பர குரக்கினங் கள்குதிகொள் குண்டை இரக்கம தாய்அடியேற் கவை |
7.020.8 |
இராவணனது தலைகளையும், கைகளையும் நெரித்திட்ட எங்கள் முதற்கடவுளே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே. அகன்ற அல்குலையுடையாளாகிய என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்தமாட்டாது மெலிகின்றாள்; அவள் பொருட்டு, அடியேன், சோலைகளில் குரங்குக் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்ற குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; நீ இரக்கமுடையையாய், அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
207 |
கண்டில ராய்அவர்கள் கழல் தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் அண்டம தாயவனே யவை |
7.020.9 |
முற்காலத்திலே உன் அளவைக்காணப் புகுந்த திருமாலும் பிரமனும் அன்னமாய் விண்ணிற்பறந்து ஓடியும், ஏனமாய் மண்ணைப் பிளந்து நுழைந்தும் தங்களால் ஆமளவும் முயன்றும் அதனைக் காணாதவர்களேயாக, இன்றும் நின் திருவடி அவர்களால் காணுதற்கு அரிதேயாய கடவுளே, தௌந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பொருமானே, எல்லா உலகமும் ஆனவனே, அடியேன், குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அவற்றை அங்குச் சேர்த்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
208 |
கொல்லை வளம்புறவிற் றிருக் நல்லவர் தாம்பரவுந் திரு நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந் அல்லல் களைந்துலகில் அண்டர் |
7.020.10 |
கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை, நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான், தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி, மனம் பொருந்திப் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாடவல்லவர், இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி, அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோளிலி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நெல்லுப், பெற்றேன், அவைகளை, எனக்கு, திருக்கோளிலியில், அடியேன், தரப்பணியே, அட்டித், எவர்க்கேனும், கட்டளையிட்டருள், சேர்ப்பிக்க, அங்குச், எழுந்தருளியிருக்கின்ற, எம்பெருமானே, கோளிலி, குண்டையூரிற், எம்பெருமான், யூர்ச்சில, அவற்றை, என்னும், சேர்ப்பித்து, குண்டை, சேர்த்து, ஆதலின், முல்லை, இல்லத்திற், வைத்தாய், சூழ்ந்த, நங்கையை, நீக்கி, குண்டையூரிலே, வளங்களையுடைய, ருங்குழலாள், பொருட்டு, நீயும், கொல்லை, அல்லல், வளம்புறவிற், திருக், களைந்தடியேற், உமையவளை, எப்பொழுதும், நினைந், பொருந்தியுள்ள, கூந்தலையுடைய, நிலத்தையுடைய, கடவுளே, அடியேனுக்கு, றிருக், பாகத்தில், கொல்லையின், ஒருபாகத்தில், உன்னையே, வேண்டுவேன், பங்குடையாய், வாழ்க்கையை, இல்லாள், திருமுறை, திருச்சிற்றம்பலம், எழுந்தருளியிருக்கும், தெண்டிரை, நீர்வயல்சூழ், நீரையுடைய, வயல்கள், அறிதியன்றே, அலைகளையுடைய, எங்கள், தாயவனே, திருக்கோளிலி, உடையவனே, சோலைகள்