முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.099.திருக்கோடிகா
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.099.திருக்கோடிகா

2.099.திருக்கோடிகா
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்.
தேவியார் - வடிவாம்பிகையம்மை.
2539 |
இன்றுநன்று நாளைநன் பொன்றுகின்ற வாழ்க்கையைப் மின்றயங்கு சோதியான் கொன்றைதுன்று சென்னியான் |
2.099. 1 |
இன்றையநாள் நல்லது. நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந்தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள். மின்னல் போன்ற ஒளியினனும், வெண்மதி, கங்கை, கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக.
2540 |
அல்லன்மிக்க வாழ்க்கையை நல்லதோர் நெறியினை வில்லையன்ன வாணுதல் கொல்லைவெள்ளை யேற்றினான் |
2.099. 2 |
அல்லல் மயமான வாழ்க்கையை விரும்பியிராது நீர் நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப் புறப்படுவீர்களாக. வில் போன்ற ஒளி பொருந்திய நுதலை உடையவளும், வெண்மையான வளையல்களை அணிந்தவளுமாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முல்லை நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2541 |
துக்கமிக்க வாழ்க்கையின் தக்கதோர் நெறியினைச் அக்கணிந் தரைமிசை கொக்கிற கணிந்தவன் |
2.099. 3 |
துக்கம்மிகுந்த வாழ்க்கையினால் வரும் இளைப்பை நீக்கி, நீர் தக்கதொரு நெறியை அடைய வாருங்கள். அரைமிசை என்பு மாலையை அணிந்தவனாய், கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள்.
2542 |
பண்டுசெய்த வல்வினை உண்டுமக் குரைப்பனா மண்டுகங்கை செஞ்சடை கொண்டுகந்த மார்பினான் |
2.099. 4 |
முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் முழுவதும் அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு அதனை உங்கட்குக் கூறுகிறேன். விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக. செஞ்சடையில் கங்கையைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2543 |
முன்னைநீர்செய் பாவத்தான் தின்னநீரி டும்பையின் பொன்னைவென்ற கொன்றையான் கொன்னவிலும் வேலினான் |
2.099. 5 |
முற்பிறவியில் நீர், செய்த பாவத்தால் சிவமூர்த்தியின் திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித் துயருறுகின்றீர்களே, புறப்படுவீர்களாக. பொன்னையும் வென்ற அழகிய கொன்றைசூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பினனும், கொல்லும் தன்மை வாய்ந்த வேலிகனை உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2544 |
ஏவமிக்க சிந்தையோ பாவமெத் தனையுநீர் காவன்மிக்க மாநகர் கோவமிக்க நெற்றியான் |
2.099. 6 |
பெருமையற்ற உலகவாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்பு மாலையை அணிகலனாகப் பூண்டு, பொன் போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2545 |
ஏணழிந்த வாழ்க்கையை மாணழிந்த மூப்பினால் பூணல்வெள் ளெலும்பினான் கோணல்வெண் பிறையினான் |
2.099. 7 |
பெருமையற்ற உலக வாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்புமாலையை அணிகலனாகப் பூண்டு, பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2546 |
மற்றிவாழ்க்கை மெய்யெனும் பற்றிவாழ்மின் சேவடி வெற்றிகொள் தசமுகன் குற்றமில் வரையினான் |
2.099. 8 |
இவ்வாழ்க்கையை மெய்யென்று கருதும் எண்ணத்தை விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி வாழ்வீர்களாக. வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற கயிலை மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2547 |
மங்குநோ யுறும்பிணி செங்கண்மால் திசைமுகன் வெங்கண்மால் விடையுடை கொங்குலாம் வளம்பொழிற் |
2.099. 9 |
வாழ்வை மங்கச் செய்யும் நோய்க்குக் காரணமான வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் கேளுங்கள். செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற்கியலாத பெருமையனும், வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக.
2548 |
தட்டொடு தழைமயிற் பட்டுடை விரிதுகிலி விட்டபுன் சடையினான் கொட்டமைந்த வாடலான் |
2.099. 10 |
தட்டோடு, தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும், பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும். தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவபிரானின் கோடிகாவை அடைவீர்களாக.
2549 |
கொந்தணி குளிர்பொழிற் செந்தழ லுருவனைச் அந்தணர் புகலியு பந்தன தமிழ்வல்லார் |
2.099.11 |
பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை, சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 97 | 98 | 99 | 100 | 101 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோடிகா - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோடிகாவு, சேர்மினே, அடைவீர்களாக, திருக்கோடிகாவை, சிவபிரான், வாழ்க்கையை, வெண்மையான, புறப்படுவீர்களாக, உறையும், மூப்பினால், சடைமுடியில், சிவபிரானின், உடையது, நினைத்திருந்து, வருந்துதற்கு, முன்னரே, மாண்பு, அணிகலனாகப், வெண்பிறையைச், பொழில், சூழ்ந்த, வளைந்த, திகழும், இன்பம், பூண்டு, வருவீர்களாக, மாலையை, வெண்மதி, நல்லது, வாருங்கள், போதுமின், வாழ்க்கையைப், திருமுறை, திருச்சிற்றம்பலம், திருக்கோடிகாவைச், நெறியை, நீங்கள், வாடலான், வினைகள், திருக்கோடிகா, உமையம்மையை, பாகமாகக், பெருமையற்ற