முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.002.திருவலஞ்சுழி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.002.திருவலஞ்சுழி

2.002.திருவலஞ்சுழி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
1480 | விண்டெ
லாமல ரவ்விரை வண்டெ லாம்நசை யால்இசை தொண்டெ லாம்பர வுஞ்சுடர் பண்டெ லாம்பலி தேர்ந்தொலி |
2.002. 1 |
மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1481 | பாரல்
வெண்குரு கும்பகு வாரல் வெண்டிரை வாயிரை மூரல் வெண்முறு வல்நகு ஊரல் வெண்டலை கொண்டுல |
2.002.2 |
நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளி பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பினராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுவதும் சென்று திரிந்து பலி ஏற்கக் காரணம் யாதோ? சொல்வீராக.
1482 | கிண்ண
வண்ணமல ருங்கிளர் வண்ண நுண்மணன் மேலனம் சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் விண்ண வர்தொழ வெண்டலை |
2.002. 3 |
கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1483 | கோடெ
லாநிறை யக்குவ மாடெ லாமலி நீர்மண சேடெ லாமுடை யீர்சிறு நாடெ லாமறி யத்தலை |
2.002.4 |
கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களி