ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
ஐந்தாவது - அணியதிகாரம்
301. |
கலையணிச் செல்வன் கமலச் சேவடி தலையணி புனைந்து சாற்றுது மணியே. | 302. |
அணியெனச் சொல்பொரு ளாமிரண் டவற்றுள் வேற்றுரை வரக்கெடு மணிசொல் லணியுரை மாற்றினுந் தோன்றிய வணிபொரு ளணியே. |
5.1. முதலோத்துச் சொல்லணியியல்
302. |
சொல்லணி மறிநிலை மிகலெஞ்ச லொப்பென் றொல்லணித் தொகுதி யொருநான் கென்ப. |
5.1.1. முதலாவது - மறிநிலையணி
304. |
மறிநிலை யுரிமை மாறணி யாயவை குணமுதல் காரணங் குறிப்பொழுக் கமைந்தே. | 305. |
பொருள்கோளு மறிநிலை போல்வன வாமவை யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண் டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட் டடிமறி மாற்றென வாகுமெட் டென்ப. | 306. |
யாற்றுப் புனலே யடிதொறும் பொருளற வேற்றடி நோக்கா விளம்பலி னாகும். | 307. |
மொழிமாற் றென்ப மொழிகடம் பயன்படும் வழிபெயர்த் தோரடி வரையுட் கொளலே. | 308. |
நிரனிறை யாநிரை நிறீஇய பெயர்வினை யிரண்டும் வேறடுக்கி யெதிரினும் வைத்த நிரையினும் பொருளே நேர்த லென்ப. | 309. |
பூட்டுவில் லென்ப பூட்டிய விற்போற் பாட்டிரு தலையொரு பாற்பொருள் கொளலே. | 310. |
தாப்பிசை முதற்கடைத் தன்பொரு டருமொழி யாப்பிசை யிடையே யியம்புத லென்ப. | 311. |
அளைமறி பாப்பே யந்த மொழிமற் றுளவிடத் துய்த்துத்தன் னுரைப்பொருள் கொளலே. | 312. |
கொண்டுகூட் டென்ப கொள்பொருட் கேற்ப விண்டடி பலவினும் வினைகொண் மொழியே. | 313. |
அடிமறி மாற்றே யடிபெயர் பொருளவு மடியிட மாறினு மழியாப் பொருளவும். |
5.1.2. இரண்டாவது - சொன்மிக்கணி
314. |
சொன்மிக் கணியென்ப சொன்மறி தாலவை மடக்கிசை யந்தாதி யடுக்கென மூன்றே. | 315. |
மடக்கணி யோர்மொழி மடங்கி வரலவை யிடையிடு முதல்கடை யிருவழி மடக்கு மிடையிடா மடக்கு மெனநால் வகையே. | 316. |
இசையந் தாதியே யீற்றுச் சொன்மீண் டிசைபெற வுருபுவே றெனினு மியைதலே. | 317. |
அடுக்கணி யொருபொருட் கடுக்கிய திரிசொ லடுக்கி வைப்ப தடுக்கணி யெனப்படும். |
5.1.3. மூன்றாவது - சொல்லெஞ்சணி
318. |
எஞ்சணி யென்ப வெளிதுணர் பலமொழி துஞ்சில் சிறப்பிற் றோன்றா தொழித்தலே. | 319. |
பெயர்வினை யும்மைசொற் பிரிப்பென வொழியிசை யெதிர்மறை யிசைக்குறிப் பெஞ்சணி பத்தே. |
5.1.4. நான்காவது - சொல்லொப்பணி
320. |
ஒப்பணி திரிபியை பொழுகிசையியைபிசை தப்பில் சமமெனத் தகுநால் வகையே. | 321. |
திரிபியை பொருமொழி சேர்பல் லுருபு முருபொன் றணைபல வுரையு மென்ப. | 322. |
ஒழுகிசைச் சீரொத் தொழுகிய செய்யுள்போல் வழுவில வியற்றமிழ் வருதலு மாகும். | 323. |
இயைபிசை சொல்லுரு பீற்றிலொத் தாதலே. | 324. |
சமமென்ப மாத்திரை தவுதல் வேற்றெழுத் தொன்றுற லன்றி யொன்றிய சொல்லே மற்றவற் றிளமா மாத்திரைச் சுருக்கந் திரிப தாதி சேர்ந்தன பிறவே. | 325. |
சொல்லணி மறிநிலை யைந்துங்கோ ளெட்டுஞ் சொன்மிக் கணிமூன்றுஞ் சொல்லெஞ் சணிபத்துஞ் சொல்லொப் பணிநான்குந் தொகையா றைந்தே. |
முதலோத்துச் சொல்லணியியன் - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்