ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
நான்காவது - யாப்பதிகாரம்
201. |
யாப்புற நலமெலா மிணைந்தவோர் சட்குணன் காப்புற வடிதொழீஇக் காட்டுதும் யாப்பே. |
4.1 முதலோத்துச் செய்யுளுறுப்பு
202. |
சிரைமுதல் யாப்புறச் சேருயிர்க் குடல்போ லுரைமுதல் யாப்புற வுணர்பொருட் குடலாச் சிறப்பிற் செய்வன செய்யு ளாமவை யுறுப்பியன் மரபுமூன் றுரைப்ப விளங்கும் | 203. |
எழுத்தசை சீர்தளை யடிதொடை யாறும் வழுத்திய செய்யுண் மருவுறுப் பெனவே. |
அசையிலக்கணம் வருமாறு
204. |
அசையே நேர்நிரை யாமிரு வகைய நெடிறனிக் குறின்மெய் நிகழ்குறி னேரா யிணைக்குறில் குறினெடி லிவைநிரை யசையே. |
சீரிலக்கணம் வருமாறு
205. |
நேரே நிரையே யசைச்சீ ரிரண்டென நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை யீரசை யியற்சீ ரீரிரண் டிவற்றோ டீற்றுறு நேர்நிரை யிருநான் குரிச்சீர் நேரிறும் வெண்சீர் நிரையிறும் வஞ்சிச்சீர் நாலசை பொதுச்சீர் நானான் கென்ப. | 206. |
பொதுச்சீ ரிறுதியு முரிச்சீ ரிறுதியுந் தளைக்கொக்கு மசைச்சீ ரியற்சீ ரனைத்தே பொதுச்சீர் வெள்ளையுட் புணரா வுக்குற ளல்லன கலியு மகவலுஞ் சேரா வஞ்சியு ளனைத்தும் வரினு மோரடி யெல்லையு ளொன்றுமே லிணையிற் றொடரா. |
தளையிலக்கணம் வருமாறு
207. |
தளையாஞ் சீர்தம்முட் டலைப்படுங் கட்டே யவையேழ் வகைய வாகு மவற்று ளாசிரியத் தளையா மியற்சீ ரொன்றல். | 208. |
வெண்டளை யென்பது வெண்சீ ரொன்றலு மியற்சீர் விகற்பமு மெனவிரு வகைத்தே. | 209. |
கலித்தளை வெண்சீர் கலந்த விகற்பமே. | 210. |
வஞ்சித் தளையாம் வஞ்சிக் குரிச்சீ ரொன்றலு மொன்றா தொழுகலு மென்ப. |
அடியிலக்கணம் வருமாறு
211. |
அடியென்ப தளைத்த வஞ்சீரா நடையவை குறளடி யிருசீர் சிந்தடி முச்சீ ரளவடி நாற்சீ ரைஞ்சீர் நெடிலடி கழிநெடிலடி யைந்தே கடந்த சீரிவற்று ளெண்சீர் மிக்கடி யெனிற்சிறப் பன்றே. |
தொடையிலக்கணம் வருமாறு
212. |
தொடையென்ப தீரடி தொடுப்ப தாமவை யடைமுதன் மோனை யந்த மியைபே யிடையே யெதுகை யெதிர்மொழி முரணள பெடையே யளபா மெனவை வகையே. | 213. |
மோனைக் கினமே அஆஐஔவும் இஈஎஏவும் உஊஒஓவும் சதவும் ஞநவும் மவவுமெனவே. | 214. |
எதுகை யென்ப வியைபன மொழிகண் முதலெழுத் தளவொத்து முதலொழித் தொன்றுத மூன்றா மெழுத்தொன்ற லாசினந் தலையா கிடைகடை யாறு மெதுகை வகையே. | 215. |
தலையா கெதுகை தலைச்சீர் முழுதுற லிடைகடை யவ்வவ் வெழுத்தொன் றுவதே. | 216. |
மோனை முதலடி முதல்வரி னடியே யிணைவ திணையே யிடைவிடல் பொழிப்பே யிறுவ தோரூஉ வீறென் றொழிவது கூழை முதலயல் குன்றன் மேற்கதுவா யீற்றய லொன்றொன் றாதெனிற் கீழ்க்கதுவா யெல்லா மொன்று வதெனின் முற்றென்ப. | 217. |
அந்தாதி யடிக்கடை யாதி யாத லிரட்டை முழுதோ ரிறையடிக் கியவடி செந்தொடை தொடையொன்றுஞ் சேரா வடியே. | 218. |
அடியினைப் பொழிப்பொரூஉக் கூழை மேற்கீழ்க் கதுவாய் முற்றென வெட்டொடு மோனை யியைபே யெதுகை முரணே யளபே யெனவைந் துறழ வெண்ணைந் தாகி யடியந் தாதி யிரட்டைச் செந்தொடை யெனவிம் மூன்று மியையத் தொடையும் விகற்பமு மெண்ணைந் தொருமூன் றென்ப. |
முதலாமோத்துச்செய்யுளுறுப்பு - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்