ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
வஞ்சிப்பாவிலக்கணம்வருமாறு
237. |
வஞ்சிக் கோசை வழங்குந் தூங்கலே தன்சீர் தன்றளை தவிர்ந்து பிறபெறுங் குறளடி சிந்தடி கொண்டு மூவடி குறையா மூன்றன் மேற்கூறில் பெருகத் தனிச்சொல்லு மகவலுந் தழுவலோ டிறுமே. |
மருட்பாவிலக்கணம் வருமாறு
238. |
மருட்பா வெள்ளை வந்தபின் னகவ லீற்றின் மருளு மியல்புடைத் தென்ப. |
பாவினம்வெண்டுறையிலக்கணம்வருமாறு
239. |
துறைதாழிசை விருத்தந் தூக்கின மூன்றனுன் வெண்செந் துறைகுறள் வெண்பா வினமாய்ச் சீர்தளை யடியெலாஞ் சேர்ந்து விரவினு மொத்தடி யிரண்டா யொழுகு மற்ற வெண்டுறை யன்னவை விரவினு மூன்றடி யாதி யேழடி யந்தமா யீற்றிற் சிலவடி தஞ்சீர் சிலகுறைந் திறுமே. |
ஆசிரியத்துறையிலக்கணம் வருமாறு
240. |
ஆசிரி யத்துறை யளவி சீர்வரு மடிநான் கீற்றய லாதி குறைநவு மிருவழி யிடைமடக் கினவுநால் வகைய. |
கலித்துறையிலக்கணம் வருமாறு
241. |
கலித்துறை நெடிலடி நான்கொத் தவற்று ளிடைநேர் வெண்சீ ரியற்சீர் முதனான் கிடைநிரை வெண்சீ ரிறுதிச்சீர் மோனையாய்க் கடையே கொண்டிறுங் கட்டளைக் கலித்துறை. |
வஞ்சித்துறை யிலக்கணம் வருமாறு
242. |
வஞ்சித் துறைகுற ளடிநான் கொத்ததே. |
தாழிசை யிலக்கணம் வருமாறு
243. |
குறட்டா ழிசையொலி குன்றுங் குரளு மத்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவுமாம் வெண்டா ழிசையெனில வெண்சிந் தியல்போ லண்டாப் பிறதளை யணைந்து வருமே. | 244. |
அகவற் றாழிசை யடிமூன் றொத்தவா யடுக்கிய மூன்றுமொன் றாகியும் வருமே. | 245. |
கலித்தா ழிசையே கடையடி மிக்குமற் றடியெனைத் தாகியு மளவொத் தொவ்வா தொருமூன் றடுக்கியு மொன்றுமாய் வருமே. | 246. |
வஞ்சித தாழிசை வருங்குற ளடிநான் காகித்தான் மூன்றா யடுக்குமோர் பொருளே. |
விருத்த விலக்கணம் வருமாறு
247. |
விருத்த மென்ப விரவிய வெல்லாச் சீரு மடியுஞ் சிதையாக் கொளினு மவையொத் தனவா யடிநான் கணையுமே மாவிளங் காயே வஞ்சிச்சீ ரிடையும் பொதுச்சீ ரிடையும் புணர்மா விளமிவை யொப்ப வரிற்சீ ரொப்புமை யாகும். | 248. |
விருத்த விகற்பம் விளக்கிய காலை வஞ்சி சிந்தடி வருங்கவி யளவடி யடிதொறுந் தனிச்சொ லணைவது வெள்ளை யகவல் கழிநெடி லடிகொள் விருத்தமே. | 249. |
சந்த விருத்தந் தம்முளொத் தெழுத்தசை வந்தொலி பற்றி வருமுள பிறவே. | 250. |
பத்திய மென்ப பாவொடு பாவினங் கத்திய மமைபோற் கலையல் லனவே வண்ண மென்ப வலிமெலி யிடையொழு கெண்ணுருட் டெனமுடு கேந்த றூங்க லகைப்புப் புறப்பாட் டகப்பாட் டளபு பாவு நலிபு தரவு வொரூஉக் குறினெடில் சித்திரங் கூறுபா டிருபதே. |
இரண்டாமோத்துச் செய்யுளியன் - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்