முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.099.திருக்குற்றாலம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.099.திருக்குற்றாலம்
1.099.திருக்குற்றாலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர்.
தேவியார் - குழல்வாய்மொழியம்மை.
1069 |
வம்பார்குன்றம் நீடுயர்சாரல் கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் அம்பானெய்யோ டாடலமர்ந்தா நம்பான்மேய நன்னகர்போலும் |
1.099.1 |
நம்மவர்களே! காணுந்தோறும் புதுமையைப் பயக்கும் குன்றங்களையும், நீண்டுயர்ந்த மலைச்சாரலையும், அழகிய வண்டுகள் யாழ் போல் ஒலிக்கும் வளர்ந்த வேங்கை மரங்களின் கிளைகள் அடர்ந்த சோலைகளையும் உடைய குற்றாலம், இனிய பால் நெய் ஆகியவற்றோடு நீராடலை விரும்புபவனாய் விரிந்த கொன்றை மலர்களைச் சூடிய நம்பனாகிய சிவபெருமான் எழுந்தருளிய நன்னகராகும்.
1070 |
பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் கொடிகளோடுந் நாள்விழமல்கு கடிகொள்கொன்றை கூவிளமாலை அடிகண்மேய நன்னகர்போலும் மடியீர்காள். |
1.099.2 |
அடியவர்களே! திருநீறு பூசித் தொண்டர்கள் பின்னே வரவும், புகழ் சிறக்கவும், கொடிகளை ஏந்தியவர்களாய் அன்பர்கள் முன்னால் செல்லவும், நாள்தோறும் விழாக்கள் நிகழும் நகர் குற்றாலமாகும். இவ்வூர் மணம் கமழும் கொன்றை வில்வமாலை ஆகியவற்றை விரும்பும் அடிகளாகிய சிவபிரானார் எழுந்தருளிய நன்னகராகும்.
1071 |
செல்வமல்கு செண்பகம்வேங்கை கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் வில்லினொல்க மும்மதிலெய்து நல்கும்நம்பா னன்னகர்போலுந் |
1.099.3 |
நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதும் ஆகிய குற்றாலம், வில்லின் நாண் அசைய அதன்கண் தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினை மாசுகள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.
1072 |
பக்கம்வாழைப் பாய்கனியோடு கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் அக்கும்பாம்பு மாமையும்பூண்டோ நக்கன்மேய நன்னகர்போலும் |
1.099.4 |
மலையின் பக்கங்களில் எல்லாம் முளைத்த வாழை மரத்தின் கனிகளோடு தேன் ஒழுகும் பலாவின் பழங்களும் மாமரக் கிளைகளில் பழுத்த புத்தம் புதிய நறுங்கனிகளும் ஆய முக்கனிகளும் அவ்வம்மரங்களில் தொங்கும் குற்றால நகர், என்புமாலை, பாம்பு, ஆமை ஆகியவற்றைப் பூண்டு கையில் அனலை ஏந்தி விளங்கும் சிவபிரான் மேவிய நன்னகராகும்.
1073 |
மலையார்சாரன் மகவுடன்வந்த குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் இலையார்சூல மேந்தியகையா சிலையான்மேய நன்னகர்போலுஞ் |
1.099.5 |
இறைவனுக்குக் கைத்தொண்டு புரியுமவர்களே! தன் குட்டிகளோடு மலையின் சாரலுக்கு வந்த மடமந்தி வாழை மரக் குலைகளில் பழுத்த இனிய கனிகளை வயிறு புடைக்கத் தின்னும்குற்றாலம். இலை வடிவமான சூலத்தை ஏந்திய கையினனும், மும்மதில்களையும் எய்து அழித்த வில்லாளனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.
1074 |
மைம்மாநீலக் கண்ணியர்சாரன் கொய்ம்மாவேன லுண்கிளியோப்புங் கைம்மாவேழத் தீருரிபோர்த்த பெம்மான்மேய நன்னகர்போலும் |
1.099.6 |
பெரியீரே! மிகக் கரிய பெரிய நீலமலர் போன்ற கண்களை உடைய குறமகளிர், மலைச்சாரல்களில் விளைந்த தினைப் புனங்களில் கொய்யத்தக்க பருவத்திலுள்ள பெரிய தினைக்கதிர்களை உண்ண வரும் கிளிகளை அங்குள்ள மணிகளை வாரி வீசியோட்டும் குற்றாலம், கைம்மா எனப்பெறும் யானையின் தோலைப் போர்த்த கடவுளும் எம் தலைவனுமாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.
1075 |
நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த கோலமஞ்ஞை பேடையொடாடுங் காலன்றன்னைக் காலாற்காய்ந்த சூலபாணி நன்னகர்போலுந் |
1.099.7 |
தொழுது வணங்கும் அடியவர்களே! நீலமலரும் நெய்தல் மலரும் பூத்த தண்ணியவான சுனைகள் சூழ்ந்ததும், நீண்டுவளர்ந்துள்ள சோலைகளில் அழகிய ஆண் மயில்கள் தத்தம் பெண் மயில்களோடு களித்தாடுவதுமாகிய குற்றாலம், காலனைக் காலால் கடிந்த கடவுளும் சூலத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய எம் சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.
1076 |
போதும்பொன்னு முந்தியருவி கூதன்மாரி நுண்துளிதூங்குங் மூதூரிலங்கை முட்டியகோனை நாதன்மேய நன்னகர்போலுந் |
1.099.8 |
நம்மவர்களே! அருவிகள் மலர்களையும் பொன்னையும் உந்திவந்து இரு புறங்களிலும் குளிர்ந்த மழை போல் நுண்மையான துளிகளை உதிர்க்கும் குற்றாலம், தன் தகுதிக்கு மேலே செயற்பட்ட இலங்கை நகரின் புகழ் பெருக்கி ஆளும் அரசனாகிய இராவணனைத் தண்டித்த சிவபிரான் எழுந்தருளிய நல்ல நகராகும்.
1077 |
அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப குரவம்பாவை முருகமர்சோலைக் பிரமன்னோடு மாலறியாத பரமன்மேய நன்னகர்போலும் |
1.099.9 |
பணியும் தொண்டர்களே! பாம்பின் வாயில் அமைந்த வளைந்த கூரிய பற்களை ஒப்ப அரும்பீன்று குரவ மரங்கள் பூத்துள்ள பாவை போன்ற மலர்களின் மணம் தங்கியுள்ள குற்றாலம், பிரமன் மால் அறியாப் பெரியோனாகிய எம் பரமன் மேவியுள்ள நன்னகராகும்.
1078 |
பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் இருந்துண்டேரு நின்றுண்சமணு அருந்தண்மேய நன்னகர்போலு |
1.099.10 |
அடியவர்களே! பெரிய தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன் பெண் வண்டை விரும்பிக் கூடி குருந்த மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும் குற்றாலம், இருந்துண்ணும் புத்தர்களும், நின்று உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய தண்ணியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும்.
1079 |
மாடவீதி வருபுனற்காழி கோடலீன்று கொழுமுனைகூம்புங் நாடவல்ல நற்றமிழ்ஞான பாடல்பத்தும் பாடநம்பாவம் |
1.099.11 |
மாடவீதிகளையுடையதும் ஆற்று நீர்வளம் மிக்கதுமான சீகாழிப் பதிக்கு மன்னனும் பலராலும் நாட வல்லவனுமான நற்றமிழ் ஞானசம்பந்தன் செங்காந்தள் மலர்களை ஈன்று அவற்றின் கொழுவிய முனையால் கை குவிக்கும் குற்றாலத்து இறைவர் மேல் பாடிய பாடல்கள் பத்தையும் பாடப் பாவம் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 97 | 98 | 99 | 100 | 101 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குற்றாலம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குற்றாலம், நன்னகராகும், சிவபிரான், நன்னகர்போலும், எழுந்தருளிய, நமரங்காள், எழுந்தருளியுள்ள, நம்மவர்களே, அடியவர்களே, பழுத்த, கையில், கடவுள்ளெம், நன்னகர்போலுந், கடவுளும், மலையின், மடமந்தி, மடியீர்காள், திருச்சிற்றம்பலம், திருமுறை, வேங்கை, கொன்றை, திருக்குற்றாலம், மும்மதில்களையும்