முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.075.திருவெங்குரு
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.075.திருவெங்குரு
1.075.திருவெங்குரு
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
திருவெங்குரு என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
809 |
காலைநன்மாமலர் கொண்டடிபரவிக் ஓலமதிடமுன் னுயிரொடுமாள மாலைவந்தணுக வோதம்வந்துலவி வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த |
1.075.1 |
வைகறைப் பொழுதில், சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி, கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்து வந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான், மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிருந்தருள்கின்றான்.
810 |
பெண்ணினைப்பாக
மமர்ந்துசெஞ்சடைமேற் பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் மண்ணினைமூடி வான்முகடேறி விண்ணளவோங்கி வந்திழிகோயில் |
1.075.2 |
உமையம்மையை இடப்பாகமாக விரும்பி ஏற்று, செஞ்சடைமேல் பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து, பண் வகைகளை அழகாகப் பாடி ஆடியவராய்ச் சென்று, மகளிரிடம் பலியேற்கும் பரமராகிய எம் அடிகளார், ஊழிக் காலத்தில் உலகை மூடி வான்முகடு வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல் நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி மீள நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப்பதியுள், வீற்றிருந்தருள்கிறார்.
811 |
ஓரியல்பில்லா வுருவமதாகி காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் நேரிசையாக வறுபதமுரன்று வேரிகளெங்கும் விம்மியசோலை |
1.075.3 |
தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மை காண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால் தேன் எங்கும் விம்மி வழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.
812 |
வண்டணைகொன்றை வன்னியுமத்த கொண்டணிசடையர் விடையினர்பூதங் பண்டிகழ்வாகப்பாடி யொர்வேதம் வெண்பிறைசூடி யுமையவளோடும் |
1.075.4 |
வண்டுகள் சூழும் கொன்றை மலர், வன்னி இலை, ஊமத்தம் மலர், வில்வம், எருக்கம்பூ ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும், விடை ஊர்தியரும், பூத கணங்கள் கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் விளங்க ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகியவரும், தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் உமையம்மையாரோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கிறார்.
813 |
சடையினர்மேனி நீறதுபூசித் கடைதொறும்வந்து பலியதுகொண்டு படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று |
1.075.5 |
சடைமுடியினராய்த் திருமேனியில் வெண்ணீறு பூசியவராய், தக்கை என்னும் இசைக் கருவியை வைத்துக் கட்டியுள்ள துணிமூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடுகள் தோறும் வந்து பலியேற்று, தம்மைக் கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோலத்தோடு மழுப்படையைக் கையில் ஏந்தியவராய் விளங்கும் பெருமானார், பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்து அருள் செய்யும் குறிப்பினராய், விடையூர்தியோடு பூத கணங்கள் சூழ வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் வந்து வீற்றிருந்தருள்கிறார்.
814 |
கரைபொருகடலிற் றிரையதுமோதக் உரையுடைமுத்த மணலிடைவைகி புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள் விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும் |
1.075.6 |
கரையை அலைக்கும் கடலின் திரைகள் மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் முத்துக்களை ஈனப் புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணல் இடையே தங்கி ஓங்கிய வானத்தின் இருளை முற்றிலும் துரத்தி ஒளி செய்ய, எண் திசைகளிலும் பரவி நிறைந்த வேதங்களைப் போற்றும் அந்தணர்கள் நன்மை விளைக்கும் வேள்விகளைப் புரிய, அவ்வேள்விகளின் ஆகுதியால் எழும் மணம் மிக்க புகை வானை மறைத்துத் தோன்றும் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் பெருமான் உமையம்மையாரோடு வீற்றிருந்தருள்கின்றார்.
815 |
வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல் நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி |
1.075.7 |
கொடி போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த மதகளிற்றை அது மயங்குமாறு விரைந்து பிடித்து அதனை உரித்து அம்மையின் அச்சத்தைப் போக்கியவரும், விரிந்த பொழிலிடையே அமைந்த அழகிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர்க்கு நல்லறங்களை உரைத்து, யோக நிலையில் ஞானமாத்திரராய் வீற்றிருக்க, திருமால் பிரமர் தம் கடுஞ்சொற்களால் நலிவுற்று மலர்க்கணை தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு வில்லையுடைய காமன் எரிந்து பொடிபடுமாறு விழித்தவரும் ஆகிய சிவபிரானார் விரும்பி வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.
816 |
பாங்கிலாவரக்கன்
கயிலையன்றெடுப்பப் ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங் வேங்கைபொன்மலரார் விரைதருகோயில் |
1.075.8 |
நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப் பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவரும், அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்த மலர், கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.
817 |
ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ் ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக் வேறெமையாள விரும்பியவிகிர்தர் |
1.075.9 |
கங்கை நதியைச் சடையிற் சூடிய எம் தலைவராகிய சிவபிரானாரின் அடிமுடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரமர்கள் சேற்று நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும், முடியினைக் காண அன்னமாய்ப் பறந்து சென்றும் தம் செயல் அழிந்தனர். அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியரும், நெற்றிக்கண்ணரும், விண்ணவர் கைகளால் தொழுது ஏத்த அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பியவரும் ஆகிய அவ்விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.
818 |
பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர் ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக் வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர் |
1.075.10 |
துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரைமலர் போன்றவளாகிய தாட்சாயணியின் பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.
819 |
விண்ணியல்விமானம்
விரும்பியபெருமான் நண்ணியநூலன் ஞானசம்பந்த பண்ணியல்பாகப் பத்திமையாலே விண்ணவர்விமானங் கொடுவரவேறி |
1.075.11 |
வானளாவிய விமானத்தை விரும்பி, வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள் வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும், பண்ணிசையோடும், பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து, அதன்கண் வீற்றிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெங்குரு - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், வெங்குருமேவியுள், வெங்குரு, வீற்றிருந்தாரே, சீகாழிப், பதியில், வீற்றிருந்தருள்கிறார், விரும்பி, விளங்கும், கொண்டு, சிவபிரானார், திருவெங்குரு, அணிந்த, கணங்கள், வேதங்களைப், உமையம்மையாரோடு, வெண்ணீறு, எழுந்தருளியுள்ளார், விரும்பியவிகிர்தர், திருமால், வீற்றிருந்தருள்கின்றார், விளித்து, அமர்ந்து, சென்றும், மலர்களின், சூழ்ந்து, ஆகியவற்றை, சோலைகள், முன்னே, கைகளால், திருமுறை, திருச்சிற்றம்பலம், சூழ்ந்த, உமையம்மையை, சீகாழிப்பதியில், கொன்றை, வண்டுகள், அவனுக்கு, உயர்ந்து, உமையம்மை, வில்வம்