நற்றிணை - 89. முல்லை
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர், திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி, நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள், இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் |
5 |
அகல் இலை அகல வீசி, அகலாது அல்கலும் அலைக்கும் நல்கா வாடை, பரும யானை அயா உயிர்த்தாஅங்கு, இன்னும் வருமே- தோழி!- வாரா வன்கணாளரோடு இயைந்த |
10 |
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே! |
தோழீ ! கீழ்க்காற்றுச் செலுத்துகையினாலே ஆகாயத்திற் செறிவுற்று அலையிலுள்ள பிசிர்போல மலையினுச்சியை விருப்பத்தோடு ஏறி; ஒழுங்காக அமைந்து நிறைவுற்ற நிரம்பிய சூலையுடைய கரிய மேகம்; மிக்க மழையைப் பெய்தொழிந்த மழை அழிந்த கார்ப்பருவத்தின் இறுதியில்; மிக்க முன்பனிப் பருவத்தில் மயிர்கள் அமைந்த உழுந்தின் அகன்ற இலைகளெல்லாம் சிதையும்படி வீசி; நம்மை விட்டு நீங்காது நாள்தோறும் வருத்துகின்ற அன்பு செய்யாத வாடைக் காற்றானது; இதுகாறும் வாராதிருந்த வன்கண்மையுடைய தலைவரோடு ஒருபடியாயமைந்த துன்பத்தைச் செய்யும் மாலைப் பொழுதையும் வருத்தத்தையும் முற்பட விட்டுக்கொண்டு; பருமம் பூண்ட யானையானது தன் அயர்ச்சியாலே பெருமூச்சு விட்டாற்போல அவர் வந்த பிறகு இன்னும் வாராநிற்குமோ ? அங்ஙனம் வந்தாலும் யாதொரு தீங்கையுஞ் செய்யாதுகாண் !;
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - இளம் புல்லூர்க் காவிதி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 87 | 88 | 89 | 90 | 91 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மிக்க, தோழி, இன்னும், வீசி, உழுந்தின்