நற்றிணை - 88. குறிஞ்சி
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை? வருந்தல்; வாழி!- தோழி!- யாம் சென்று உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- |
5 |
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி, நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது, கண்ணீர் அருவியாக அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. |
10 |
தோழீ ! நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ எதன்பொருட்டு மயங்குகின்றனை ? அவ்வண்ணம் வருந்தாதே கொள்! நீடுவாழ்வாயாக !; இத்துன்பத்தை அவர்பால் நாம்¢ சென்று கூறிவிட்டு வருதும் என்னுடன் எழுவாயாக! புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாங்கு உருகி உகுதல் அஞ்சுவல் பொருந்திய அலைகளையுடைய கடல் நீரால் விளைந்த உப்புக் குவடு மழையின்கண் அகப்பட்டாற் கரைந்தொழிதல் போல நீ உள்ளம் உருகியொழிதலுக்கு யான் அஞ்சா நிற்பேன்; தம் தலைவன் நம்மிடத்துச் செய்த கொடுமையை நினைந்து; அவருடைய பழங்கள் உதிர்கின்ற குன்றுகள்; நம்பாற் பெரிதும் அன்புடைமையாலே தம் வருத்தத்தை அடக்கிக் கொள்ள மாட்டாதே தங்கண்ணீர் அருவியாகப் பெருகும்படி அழாநிற்கும்; அதனை உவ்விடத்தே பாராய் ! அவர் மட்டும் இரங்குபவர் அல்லர்;
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - நல்லந்துவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கடல், அஞ்சுவல், உகுதல், அவர், உருகி, செய்த, அதனை, பெயற்கு, தோழி, சென்று, விளை, அமுதம், யாம்