நற்றிணை - 86. பாலை
அறவர், வாழி- தோழி! மறவர் வேல் என விரிந்த கதுப்பின் தோல பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக் கை வல் வினைவன் தையுபு சொரிந்த |
5 |
சுரிதக உருவின ஆகிப் பெரிய கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை நல் தளிர் நயவர நுடங்கும் முற்றா வேனில் முன்னி வந்தோரே! |
தோழீ, வீரர் கையிலுள்ள வேற்படைபோல விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய சிவதை வெள்ளி வட்டிலைப் போல மலரா நிற்கும் கடிய முன்பனியையுடைய அற்சிரக்காலத்து; நாம் நடுங்குமாறு பிரிந்து பின்பு; அழகு பொருந்தக் கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக்கற்களை இட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதக மென்னும் அணிபோன்ற வடிவினவாகி; பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலர; ஈங்கையின் நல்ல தளிர்கள் கண்டார்க்கு விருப்பம் வருமாறு நுடங்கா நிற்கும் முதிராத இளவேனிற் காலத்து; இன்று நம்மைக் கருதி வந்தாராகலின் நம் தலைவர் அறநெறி தவறுநரல்லர் காண்; அவர் நெடுங்காலம் வாழ்வாராக !;
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - நக்கீரர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிற்கும், பெரிய, சுரிதக, விரிந்த, தோழி