முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - பரபக்கம்
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

|
கருவி யெல்லாம் நானெனவே கருதல் பந்தம் அக்கருத்தை ஒருவ முத்தி யுண்டாகும் உள்ளம் வித்தாம் செய்தியினால் மருவும் மாயா காரியங்கள் அவித்தை மாய வேமாயை பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே. |
231 |
|
ஆன கன்ம அநுட்டயங்கள் அந்தக் கரண சுத்திதரும் ஊன மின்றி அச்சுத்தி ஞான மதனை உண்டாக்கும் ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்தும் நான்பிறந்தால் வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே. |
232 |
|
தானே தானாய் அநுபோகம் தன்னில் தன்னை அநுபவித்திட்(டு) ஊனே உயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி நானே பிரமம் எனத்தௌ¤யும் ஞானம் பிரம ஞானமே. |
233 |
|
சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமையுணர்ந்தால் போற்றி அதுநீ யானாயென் றறைவ தல்லால் பொருளின்றே தேற்று மிதனைத் தௌ¤யாதாச் தௌ¤யப் பஞ்ச ஆதநமேல் ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றுவரால். |
234 |
மாயாவாதி மத மறுதலை
| ஏகம் நானென இயம்பி இப்படி அறிந்து முத்தியடை மின்னென, மோக மானஉரை சோகம் இன்பொடு முடிந்தி டாதுமல டாகிய, பாக மானது கருங்க லின்தசை பறித் தழுங்கரிய குஞ்சியின், தாக மார்பசி தவிர்க்க வாயிடை கொடுத்ததென் றுரைசெய் தன்மையே. |
235 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 59 | 60 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், தன்னை, தௌ¤, மாயா, இலக்கியங்கள், மின்றி

