முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - பரபக்கம்
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

இச்சைவெறுப் பியற்றலின்பத் துன்பம் ஞானம் நச்சிநுகர்ந் தொரு பழத்தின் இனங்கண்டு முன்பு மெச்சவெறுப் பாதிகளும் இப்படியே யாகும் நிச்சய கர்த் தாஒருவ னுளனென்று நல்லோர் |
126 |
எப்பொருட்டும் இரந்தரமாய் இடங்கொடுத்து நீங்கா ஒப் பில்குணஞ் சத்தமதாய் வாயுவாதி உதித்தொடுங்க செப்பிடுங்கா லம்பொழுது நாளாதி யாகித் தப்பில்குணக் குக்குடக்குத் தெற்குவடக் காதி |
127 |
காரியமாய் உலகெலாம் இருத்த லாலே கடாதிகள்போல் ஆரியமாய் அறம் பொருளோ டின்பவீ டெல்லாம் கூரியராய் உள்ளவர்கள் ஓதஓதிக் கொண்டுவர சீரியபே ரறிவுடையோன் செப்ப வேண்டும் |
128 |
மரங்களுயி ரல்லவென்று மறுத்துச் சொன்னாய் திரங்குநீர் பெறாதொ ழியிற் பெறிற்சிரத்தை சேரும் உரங்கொள்வ தூண்பெறிற் சோரும் ஊன்பெரு றாவேல் கரத்சினை முட்டைகட்கு வாயிலின்று வாயில் |
129 |
ஒருமரத்தின் உயிரொன்றேல் கொம்பொசித்து நட்டால் கருமரத்தின் வித்துவேர் கொம்புகொடி கிழங்கு தருபிறப்புச் சராயுசங்கள் சநந மும்பெற் றாற்போல் பெருநிலத்தில் காலிலார் நடப்பரோ பேதாய் |
130 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 59 | 60 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், மரங்களுயி, வென்னில், லாலே, இலக்கியங்கள், வேண்டும்