சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஐக்கியவாதி சங்கற்ப நிராகரணம்
பெத்த நிலை
முத்தி யென்ப தெவனோ சுத்த வறிவெனிற் பாசஞ் செறியா மாயை யுருவிரு வினையால் வருமிரு வினையு முருவா லன்றி மருவா திவற்றீன் முந்திய தேதோ வந்தணை வதற்கோ ரேது வேண்டுந் தானியல் பென்னின் வீடுற் றவரினுங் கூடக் கூடு மீங்கிவை நிற்க நீங்காக் கருவிகள் கொண்டறி வறியக் கண்டது மன்றி மருவிய வுருவு துயில்பெறுங் காலைச் சிறுபொறித் தறுகட் கறையணற் சுடிகைத் துத்திக் கடுவுட் டுளையெயிற் றுரகக் கொத்தயல் கிடப்பினுங் குவைதரு நவமணி யொருபாற் றுதையினும் பெருகார் வத்தினோ டச்சமு மணுகாக் கொச்சமை யென்னே கருவி யாவும் பிரிவுறு நிலையேற் பொறிபுல னாதி குறைவற நிறைந்து காட்சிய தளிக்கு மூட்சியின் முன்னர்க் கொடுத்தோ ராழி விடுத்தவர் நாடிக் கொள்வோர்க் காணா துள்கி மீண்டுழித் தந்தவர் கண்டாங் கந்தமி லதனைத் தருக வென்னும் பெருமதி பிறக்கும தறிவி லாமையென் றனையது மலமாக் குறிகொ ளாள ரறைகுவ ரன்றே |
முத்தி நிலை மறுப்பு
அறிவிற் கறீவு செறியவேண் டின்றே யுண்மையி லிருமையு மொளியே யெனிலொரு தன்மை யாகமுன் சாற்றின ரிலரே முன்பு நன்றுட னொன்றிய காலை யின்ப மெய்துதற் கிலதுயி ராதலி னீயலை பொருத மாயா வாதி யாயினை யமையு மருணிலை கேண்மதி |
பாடாணவாதி சங்கற்பம்
பெத்த நிலை
மூல மலத்தாற் சாலு மாயை கருமத் தளவிற் றருமுரு விறைவன் செறிந்தி பயனு நுகர்ந்திடு முயிர்க ளிருளுறு மலத்திற் பருவரற் படுதலி னிடையிரு நோக்குந் தடைபட் டோரிற் றுயருறு மதனாற் செயிருறு துன்பம் |
முத்த நிலை
கொத்தை மாந்த ருய்த்துறுந் துயில்போற் காட்சி யென்னக் காணாத் துயர மாட்சியை முத்தி யெனவகுத் தனரே |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நிலை, சங்கற்ப, நூல்கள், நிராகரணம், சாத்திரங்கள், சித்தாந்த, முத்தி, மாயை, பெத்த, இலக்கியங்கள்