முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.059.திருவாரூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.059.திருவாரூர்

7.059.திருவாரூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
603 |
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் இன்ன தன்மையன் என்றறி வொண்ணா அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி |
7.059.1 |
எனக்குப் பொன்னையும், மெய்யுணர்வையும், வழங்குபவனும், அவை வாயிலாக உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் சேர்ப்பிக்கின்றவனும், அதன்பின் யான் அவ்வின்பங்களை நுகரும்பொழுது செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக்கொள்பவனும், பின்னர்ப் பிழைகளே வாராதவாறு அருள்செய்பவனும், இன்ன தன்மையை உடையவன் என்று வரையறுத்து உணர ஒண்ணாத எங்கள் தலைவனும், எனக்கு எளிவந்த பெருமானும் ஆகிய, அன்னங்கள் தங்கியுள்ள வயல்களை யுடைய பண்ணைகளையுடைய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!
604 |
கட்ட மும்பிணி யுங்களை வானைக் விட்ட வேட்கைவெந் நோய்களை வானை பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை |
7.059.2 |
மனத்துன்பத்தையும் உடல்நோயையும் ஒழிக்கின்றவனும், கூற்றுவனை அழித்த காலை உடையவனும், துறக்கப்பட்ட ஆசை மீள வந்து எழுதலாகிய கொடிய துன்பத்தைப் போக்குபவனும், கூடினால் பின்பு பிரிதற்கு இயலாதவனும், வந்த பழிச் சொல்லும், வரக் கடவ பழிச்சொல்லும் வாராது ஒழியும்படி அருள்செய்பவனும், அட்ட மூர்த்தங்களை யுடையவனும் ஆகிய, மலர்கள் தேனோடு மலர்கின்ற சோலைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!
605 |
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக் பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப் ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை ஆர்க்கின் றகட லைமலை தன்னை |
7.059.3 |
மேகங்களையுடைய மலைமேல் மழையாய் நின்று பொழிபவனும், நூல்களுக்கெல்லாம் பொருளாய் அவற்றுட் பொருந்தி நின்று, காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும், பகலாகியும் இரவாகியும் இருப்பவனும், ஓசையைக் கேட்கின்ற செவியாகியும், சுவையை உணர்கின்ற நாவாகியும், உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும், ஒலிக்கின்ற கடலாகியும், மலையாகியும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!
606 |
செத்த போதினில் முன்னின்று நம்மைச் வைத்த சிந்தையுண் டேமன முண்டே முத்தன் எங்கள்பி ரானென்று வானோர் அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை |
7.059.4 |
நாம் செத்தபொழுது சிலர் வந்து கூடி நம்மை இகழ்வதற்கு முன்னே, நமக்கு இறைவன் கொடுத்த கருத்து உளதன்றோ! நெஞ்சு உளதன்றோ! அறிவு உளதன்றோ! நாம் செய்த புண்ணியத்தின் பயன் உளதன்றோ! அவற்றால் தேவர்கள், 'இயல்பாகவே பாசம் இல்லாதவன்' என்றும், 'எங்கள் தலைவன்' என்றும் வணங்க நிற்கின்ற, முதுகில் திமிலையுடைய எருதையுடையவனும், யாவர்க்கும் தந்தையும், என் தந்தைக்குத் தலைவனும், எமக்குத் தலைவனும் ஆகிய திருவாரூர் இறைவனை நாம் நினையாது மறத்தலும் இயலுமோ!
607 |
செறிவுண் டேல்மனத் தால்தௌ வுண்டேல் மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல் பொறிவண் டியாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை அறிவுண் டேஉட லத்துயி ருண்டே |
7.059.5 |
நன்மையைத்தரும் கல்வியும், அதன்பயனாகிய உள்ளத்தௌவும், அதன்பயனாகிய இறைவன் பற்றும் நமக்கு உள்ளன என்றால், அவற்றோடே இறப்பும், மறுபிறப்பும், வாழ்நாளை இடைமுரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால், இவற்றையெல்லாம் அறிகின்ற அறிவும். அவ்வறிவின்வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின், புள்ளிகளையுடைய வண்டுகள் யாழின் இசைபோல ஒலிக்கின்ற, பொன்போலும் கொன்றை மலர்க் கண்ணியை, பொன்போலும் சடைமேற் சூடிய திருவாரூர் இறைவனை நாம் மறத்தலும் இயலுமோ!
608 |
பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று மௌள நின்றவர் செய்வன வெல்லாம் வள்ளல் எந்தமக் கேதுணை யென்று அள்ள லங்கழ னிப்பழ னத்தணி |
7.059.6 |
எங்கும் பொள்ளல்களாய் உள்ள இவ்வுடம்பை உறுதி என்று கொண்டு, செல்வமும், படைகளும், இன்பமுமாய் நிற்கின்றவர்கள் செய்கின்ற மயக்கங்களையெல்லாம் நம்மிடத்து வாராதவாறு விலக்குகின்ற, நன்னெறியாய் உள்ளவனாகிய, தேவர்கள் நாள்தோறும், 'வள்ளல்' என்றும், 'எங்களுக்குத் துணை' என்றும் சொல்லித் துதிக்கின்ற, சேற்றையுடைய கழனிகளையுடைய பண்ணையிடத்ததாகிய அழகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!
609 |
கரியா னைஉரி கொண்டகை யானைக் வரியா னைவருத் தம்களை வானை குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம் கரியா னைஅடி யேற்கௌ யானை |
7.059.7 |
கையையுடையதாகிய யானையினது தோலை உரித்த கையை உடையவனும், இரண்டு கண்களுக்கு மேலாக மற்றொரு கண்ணையுடையவனும், அழகையுடையவனும், அடைந்தாரது வருத்தங்களைப் போக்குபவனும், வேதத்தை உடையவனும், சிறந்த பிறையைச் சூடுதற்கு உரியவனும், உலகத்தில் உள்ள உயிர்கட்கெல்லாம் விளக்காய் உள்ளவனும். தன்னை விரும்பி நினைந்து அடையாதவர்கட்கு அரியவனும், அடியேற்கு எளியவனும் ஆகிய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!
610 |
வாளா நின்று தொழும்அடி யார்கள் நாணா ளும்மல ரிட்டுவ ணங்கார் கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன் ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன் |
7.059.8 |
யாதும் வருந்தாமலே நின்று வணங்குகின்ற அவன் அடியார்கள் வானுலகத்தை ஆளுதலாகிய பெருஞ்செல்வத்தைப் பெற்று விடுகின்ற செய்தியைக் கேட்டபின்பும், சிலர், அவனை நாள்தோறும் மலர் தூவி வணங்குகின்றிலர். அங்ஙனம் வணங்குகின்ற நம்மை அவன் இம்மையிலேயே நன்கு புரத்தலையும் அறிகின்றாரிலர். ஆயினும், யான், எனக்கேயன்றி என் கிளைகளுக்கும் அவன் துணையாவான் என்று கருதி, அவனையே உறவாகக் கொண்டு, அவனுக்குப் பணிபுரிந்து நிற்கின்றேன்; அன்றியும், பலரையும் அவனுக்கு ஆளாகுமாறு முன் நின்று அழைக்கின்றேன்; ஆதலின், யான் அவனை மறத்தலும் இயலுமோ!
611 |
விடக்கை யேபெருக் கிப்பல நாளும் கடக்கிலேன்நெறி காணவு மாட்டேன் இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச் தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை |
7.059.9 |
எல்லா நாள்களிலும் ஊனைப் பெருக்கவே முயன்று, அது காரணமாக எழுந்த ஆசையால் உளதாகிய துன்பத்தைக் கடக்கமாட்டாமலும், கடந்து நன்னெறியை உணரமாட்டாமலும், பசியால் கண்குழிந்து வந்து இரப்பவர் கையில் ஒன்றையும் இட மாட்டாமலும் உள்ள யான், பரத்தலையுடைய அலைகளைக் கொண்ட கங்கையாகிய நீரையுடைய சடையை யுடையவனும், உமையாளைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் அடக்கினவனும் ஆகிய, அழகிய தாமரைப் பொய்கைகளையுடைய தாமரைப் பொய்கைகளையுடைய திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ!
612 |
ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட பட்டி யைப்பக லையிருள் தன்னைப் கட்டி யைக்கரும் பின்தௌ தன்னைக் செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ |
7.059.10 |
என்னை, வழக்கிட்டு ஆட்கொண்டு அதன்பின் கோயிலுள் சென்று மறைந்த, நண்பகற் போது போலும் ஒளியுடையவனும், நஞ்சையுடைய பாம்பைக் கட்டியுள்ள உடையை உடையவனும், பகலாயும் இரவாயும் உள்ளவனும், தன்னை நினைப்பவரது உள்ளமாகிய தாமரையில் ஊறுகின்ற தேனாய் உள்ளவனும், கரும்பின் சாறும் அதன்கட்டியும் போல்பவனும், தேவர்மீது வைத்த அன்பினால், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும், வேதத்தில் வல்லவனும் ஆகிய, செல்வத்தையுடைய திருவாரூர் இறைவனை, யான் மறத்தலும் இயலுமோ!
613 |
ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம் காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை ஆரூ ரைம்மறத் தற்கரி யானை ஆரூ ரன்னடி நாயுரை வல்லார் |
7.059.11 |
'பரவை' என்பவள் முன்னிலையாக, எல்லா உலகங்கட்கும் தலைமையுடைய ஓர் ஊர் என்று சொல்லத் தக்க ஊராய், தான் அவளுடன் கூடி வாழ்ந்து மறத்தற்கியலாததாய் அமைந்துவிட்ட திருவாரூர் இறைவனை, கார் காலத்தில் பூக்கின்ற, மணங்கமழுங் கொன்றைமாலையை அணிந்த முடியையுடையவனாகிய அப்பெருமானது திருப்பெயரைக் கொண்ட அவன் அடிக்கீழ்க் கிடக்கும் நாய் போலும் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பதிகத்தைப் பாட வல்லவர், அமரலோகத்தில் வாழ்பவராதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இறைவனை, மறக்கலு, மறத்தலும், இயலுமோ, திருவாரூர், நின்று, என்றும், உடையவனும், உளதன்றோ, தலைவனும், தாமரைப், உள்ளவனும், செய்கின்ற, அதன்பயனாகிய, என்றால், வுண்டேல், தந்தையும், பொன்போலும், தேவர்கள், கொன்றை, கொண்டு, கின்றேன், வணங்குகின்ற, ஆட்கொண்டு, தன்னைக், கெல்லாம், நாள்தோறும், வள்ளல், பொய்கைகளையுடைய, போலும், திருவார&, காண்கின்ற, அதன்பின், வாராதவாறு, அருள்செய்பவனும், தன்மையை, னத்தணி, ரப்பணிப், திருமுறை, திருச்சிற்றம்பலம், பானைப், எங்கள், வானைக், லாம்பொரு, ளாய்உடன், ஒலிக்கின்ற, நமக்கு, யுடையவனும், போக்குபவனும், தற்கரி, வார்த்தை, அழித்த, இறைவன்