முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.077.திருமாணிகுழி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.077.திருமாணிகுழி

3.077.திருமாணிகுழி
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கமேனியீசுவரர்.
தேவியார் - மாணிக்கவல்லியம்மை.
3624 | பொன்னியல்
பொருப்பரையன் மங்கையொரு வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் கன்னியிள வாளைகுதி கொள்ளவிள மன்னியிள மேதிகள் படிந்துமனை |
3.077.1 |
சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, வரப்பின்மேல் இளவள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில், இள வாளை மீன்கள் துள்ளிப்பாய, இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும், நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும்.
3625 | சோதிமிகு நீறதுமெய் பூசியொரு மாதர்மனை தோறுமிசை பாடிவசி தாதுமலி தாமரை மணங்கமழ கோதமலி வேலைபுடை சூழுலகி |
3.077.2 |
ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திரு மேனியில் உத்தூளணமாகப் பூசி, தோலை ஆடையாக அணிந்து, தெருக்களில் பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம் வீசுவதும், வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடையதும், கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற திருமாணிகுழி என்பதாம்.
3626 | அம்பனைய
கண்ணுமை மடந்தையவ கம்பமத யானையுரி செய்தவர வம்புமலி சோலைபுடை சூழமணி உம்பரவர் கோனகர மென்னமிக |
3.077.3 |
அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச, கோபமுடைய, தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க சோலைகளையுடையதும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும்.
3627 | நித்தநிய
மத்தொழில னாகிநெடு சித்தம தொருக்கிவழி பாடுசெய கொத்தலரமலர்ப்பொழிலி னீடுகுல டொத்தவரி வண்டுக ளுலாவியிசை |
3.077.4 |
நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம் பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒரு முகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலம், கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும்.
3628 | மாசின்மதி
சூடுசடை மாமுடியர் நாசமது செய்துநல வானவர்க வாசமலி மென்குழன் மடந்தையர்கண் ஊசன்மிசை யேறியினி தாகவிசை |
3.077.5 |
சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர். வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள், மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணிகுழி ஆகும்.
3629 | மந்தமலர்
கொண்டுவழி பாடுசெயு வந்தவொரு காலனுயிர் மாளவுதை சந்தினொடு காரகில் சுமந்துதட உந்துபுனல் வந்துவயல் பாயுமண |
3.077.6 |
மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சந்தன மரங்கள், கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும்.
3630 | எண்
பெரிய வானவர்க ணின்றுதுதி உண்பரிய நஞ்சுதனை யுண்டுலக பண்பயிலும் வண்டுபல கெண்டிமது ஒண்பலவி னின்கனி சொரிந்துமண |
3.077.7 |
எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதி செய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண்ணிசை பாடுகின்ற வண்டுகள், பல மலர்களையும் கிளறி, தேனருந்த, வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும்.
3631 | எண்ணமது
வின்றியெழி லார்கைலை திண்ணிய வரக்கனை நெரித்தருள் பண்ணமரு மென்மொழியி னார்பணை ஒண்ணுதன் மடந்தையர் குடைந்துபுன |
3.077.8 |
கயிலைமலையின் பெருமையையும், சிவ பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது, கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ் நெரித்து, பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண் போன்று மென்மொழி பேசபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும், பவளம் போன்ற வாயையும், அழகிய ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும் திருமாணிகுழி ஆகும்.
3632 | நேடுமய
னோடுதிரு மாலுமுண ஏடுலவு திங்கண்மத மத்தமித மாடுலவு மல்லிகை குருந்துகொடி னூடுலவு புன்னைவிரை தாதுமலி |
3.077.9 |
பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும், உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவ பெருமான். அவர்தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர். எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம்.
3633 | மொட்டையம
ணாதர்முது தேரர்மதி முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய் மட்டைமலி தாழையிள நீர்முதிய ஒட்டமலி பூகநிரை தாறுதிர |
3.077.10 |
மொட்டைத் தலையுடைய சமணர்களும், பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள். முயன்று செய்த வினைகளே பயன்தரும். அதற்குக் கர்த்தாவேண்டா என்று சொல்பவர்கள் அவர்கள். உருட்டிய வழி உருளும். முட்டை போல் தமக்கென ஓர் உறுதி இல்லாத, அவர்கள் சொன்ன சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும், பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும்.
3634 | உந்திவரு
தண்கெடில மோடுபுனல் அந்திமதி சூடியவெம் மானையடி சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும் முந்தியிசை செய்துமொழி வார்களுடை |
3.077.11 |
பல பொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும் கெடிலநதி சூழ்ந்த உதவிமாணிகுழியின் மீது, மாலைக்காலப் பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமாணிகுழி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருமாணிகுழி, மாணிகுழியே, வீற்றிருந்தருளும், சிவபெருமான், தலமாவது, நிறைந்த, பெண்கள், சிறந்த, வண்டுகள், கொண்டு, பெருமான், நாயகனாகிய, சிவலோக, மலர்களையும், மல்லிகை, அவர்கள், கமழும், நறுமணம், விழுந்து, வானவர்க, நறுமணமிக்க, சடையில், சேருதவி, திருச்சிற்றம்பலம், திருமுறை, தாதுமலி, அணிந்து, லோகனிடமாம், போன்று, என்பதாம், மலர்கள், பாடுதவி