முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.094.திருவாழ்கொளிபுத்தூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.094.திருவாழ்கொளிபுத்தூர்

2.094.திருவாழ்கொளிபுத்தூர்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
| 2486 |
சாகை யாயிர முடையார் ஈகை யார்கடை நோக்கி தோகை மாமயி லனைய வாகை நுண்டுளி வீசும் |
2.094. 1 |
வாகை மரங்கள் நுண் துளி சொரியும் வாழ்கொளிபுத்தூர் இறைவர் வேதப்பிரிவுகளான சாகைகள் பலவற்றை அருளியவர். சாமகானம் பாடுபவர். கொடுப்பவர் இல்லங்கட்குச் சென்று இரக்கும் வேடங்கள் கொள்பவர். மயில் போன்ற சாயலையும் துடி போன்ற இடையையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர்.
| 2487 |
எண்ணி லீரமு முடையா கண்ணு மாயிர முடையார் பெண்ணு மாயிர முடையார் வண்ண மாயிர முடையார் |
2.094. 2 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், எண்ணற்ற வகைகளில் அன்பு காட்டுபவர். இவர் அறங்களைப் பெற்றோர் பலராவர். இவர் ஆயிரங்கண், கைகளை உடையவர். சக்தியின் அம்சமாகப் பலவற்றை உடையவர். பெருமைகள் பல உடையவர். இவர் வண்ணமும் பலவகைப்படுவனவாகும்.
| 2488 |
நொடியொ ராயிர முடையார் வடிவு மாயிர முடையார் முடியு மாயிர முடையார் வடிவு மாயிர முடையார் |
2.094. 3 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், நுட்பமான கால அளவுகளாய் விளங்குபவர். மிகவும் நுண்மையானவர். அவர் பார் வையும் பலவேறு வகைப்பட்டவை. பல்வேறு வண்ணங்கள் கொண்டவர். பல்வாய முடிகளை உடையவர், உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். பல்வேறு வடிவங்கள் கொண்டவர்.
| 2489 |
பஞ்சி நுண்டுகி லன்ன குஞ்சி மேகலை யுடையார் அஞ்சும் வென்றவர்க் கணியார் வஞ்சி நுண்ணிடை யுடையார் |
2.094. 4 |
வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர், பஞ்சினால் இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர். சடைமுடியில் ஆடையைத்தரித்தவர். பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு அடையாளமாகக் கொண்டவர். ஐம்பொறிகளை வென்றவர்க்கு அணிமையில் இருப்பவர். ஆனைத்தோல் போர்த்தவர்.
| 2490 |
பரவு வாரையு முடையார் விரவு வாரையு முடையார் அரவம் பூண்பது முடையார் வரமு மாயிர முடையார் |
2.094. 5 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர். தம்மோடு அன்பு கலந்து ஒன்றாகுபவரையும் உடையவர். பிரமனது வெள்ளிய தலையோட்டில் பலிகொள்பவர். அரவம் பூண்டவர். ஆயிரம் பேருடையவர். வரங்கள் பல அருள்பவர்.
| 2491 |
தண்டுந் தாளமுங் குழலுந் கொண்ட பூதமு முடையார் கண்டு கோடலு மாயார் வண்டு வாழ்பதி யுடையார் |
2.094. 6 |
கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு, தாளம், குழல், தண்ணுமை ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர். பல்வேறு கோலங்கள் கொண்டவர். காணுதற்கும் காட்சிக்கும் அரியவர்.
| 2492 |
மான வாழ்க்கைய துடையார் தான வாழ்க்கைய துடையார் ஞான வாழ்க்கைய துடிடயார் வான வாழ்க்கையை துடையார் |
2.094. 7 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், பெருமை பொருந்திய வாழ்க்கையர். தம்மோடு மலைந்த அசுரர்களின் மும்மதில்களை அழித்தவர். அருட் கொடை வழங்கும் இயல்புடையவர். தவத்தோடு நாம் பரவ ஞானவாழ்வு அருள்பவர். நள்ளிருளில் அரமகளிர் நின்று ஏத்த வானநாட்டு வாழ்வினை உடையவர்.
| 2493 |
ஏழு மூன்றுமொர் தலைகள் வேழ்வி செற்றதும் விரும்பி கேழல் வெண்பிறை யன்ன வாழி சாந்தமு முடையார் |
2.094. 8 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், பத்துத்தலைகளை உடைய இராவணனைத் துன்புறுமாறு அடர்த்தவர். தக்கன் செய்த வேள்வியைச் செற்றவர். பலப்பல விருப்புடையவர். வெண்பிறை போன்ற பன்றிக் கொம்பை மணி மிடற்றில் தரித்தவர். சாந்தம் அணிந்தவர்.
| 2494 |
வென்றி மாமல ரோனும் என்று மேத்துகை யுடையார் முன்றின் மாமலர் வாச மன்றி லாடல துடையார் |
2.094. 9 |
வாழ்கொளிபுத்தூர் இறைவர், தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் விரிந்த கடலிடைத்துயிலும் திருமாலும் நாள்தோறும் துதித்து வணங்கப் பெறுபவர். இமையவர் துதித்தலை விரும்பி வானளாவிய மலர் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த தில்லைமன்றில் ஆடுபவர்.
| 2495 | மண்டை கொண்டுழல் தேரர் குண்டர் பேசிய பேச்சுக் துண்ட வெண்பிறை சூடிச் வண்டு வாழ்பொழில் சூழ்ந்த |
2.094. 10 |
மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும் தேரர், அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதீர். ஒளிமிக்க பிறை சூடி, திருநீற்றுப் பொடி பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் போற்றுவீராக.
| 2496 | நலங்கொள்
பூம்பொழிற் காழி வலங்கொள் வெண்மழு வாளன் இலங்கு வெண்பிறை யானை நலங்கொள் சிந்தைய ராகி |
2.094. 11 |
நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண்மழுவை ஏந்தி விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் நலந்தரும் சிந்தையராய் நன்னெறி எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 92 | 93 | 94 | 95 | 96 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாழ்கொளிபுத்தூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முடையார், வாழ்கொளி, வாழ்கொளிபுத்தூர், புத்தூ, ருளாரே, இறைவர், உடையவர், கொண்டவர், துடையார், யுடையார், வாழும், சூழ்ந்த, வெண்பிறை, விரும்பி, வாழ்க்கைய, வாரையு, பல்வேறு, வுடையார், இமையவர், திருச்சிற்றம்பலம், திருமுறை, நலங்கொள், நன்னெறி, நற்றமிழ், பொழில், பலவற்றை, உமையம்மையை, நுண்ணிய, ஆயிரம், தம்மோடு, வண்டுகள், அருள்பவர், திருவாழ்கொளிபுத்தூர்

