முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.068.திருக்கடம்பூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.068.திருக்கடம்பூர்

2.068.திருக்கடம்பூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடேசுவரர்.
தேவியார் - சோதிமின்னம்மை.
| 2200 | வானமர்
திங்களு நீரு தேனமர் கொன்றையி னானைத் கானம ரும்பிணை புல்கிக் தானமர் கொள்கையி னானைத் |
2.068.1 |
வானிற் பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத் தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும் ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.
| 2201 | அரவினொ
டாமையும் பூண்டு விரவுந் திருமுடி தன்மேல் பரவுந் தனிக்கடம் பூரிற் இரவும் பகலும் பணிய |
2.068. 2 |
பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு, அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து அழகிய முடிமீது பொருந்திய வெண்பிறையைச்சூடிப் பலராலும் விரும்பிப் பரவப் பெறும் சிறந்த கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று அண்ணலின் திருவடிகளை இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம்.
| 2202 | இளிபடு
மின்சொலி னார்க தௌபடு கொள்கை கலந்த ஒளிதரு வெண்பிறை சூடி புலியத ளாடை புனைந்தான் |
2.068. 3 |
இளி என்னும் இசை இனிமையும் சொல்லினிமையும் உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர் ஆகுதி வேட்கும் கடம்பூரில் ஒளிபொருந்திய வெண்பிறைசூடி உமையம்மையோடு உடனாய்ப் புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை நாம் போற்றுவோம்.
| 2203 | பறையொடு
சங்க மியம்பப் கறையுடை வேல்வரிக் கண்ணார் மறையொலி கூடிய பாடன் பிறையுடை வார்சடை யானைப் |
2.068. 4 |
பறை சங்கம் முதலிய ஒலிக்கப் பலவகையான கொடிகள் கட்டிய மாடவீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த கடம்பூரில் வேதஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறைசூடிய நீண்ட சடையை உடைய பெருமானைப் பேண வல்லவர் பெரியோர் ஆவர்.
| 2204 | தீவிரி
யக்கழ லார்ப்பச் நாவிரி கூந்தனற் பேய்கள் காவிரி கொன்றை கலந்த பாவிரி பாடல் பயில்வார் |
2.068.5 |
தீப்போலும் சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக் கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க நடனம் ஆடுபவனும் கொன்றை மாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய சிவபெருமானது கடம்பூரை அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப் பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர்.
| 2205 | தண்புன
னீள்வய றோறுந் கண்புணர் காவில்வண் டேறக் பெண்புனை கூறுடை யானைப் பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே. |
2.068. 6 |
குளிர்ந்த நீர்நிறைந்த வயல்களில் முளைத்த தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகிமகிழவும், கண்கவரும் சோலைகளில் வண்டுகள் மொய்க்க மலர்கள் தேன்பிலிற்றவும் அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய் விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார் பாவம் இல்லாதவராவர்.
| 2206 | பலிகெழு
செம்மலர் சாரப் கலிகெழு வீதி கலந்த ஒலிதிகழ் கங்கை கரந்தா புலியத ளாடையி னான்றன் |
2.068. 7 |
சிவபூசகர்கள் பூசைக்கு வேண்டு செம்மையான மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலிநிறைந்த வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை முடியில் மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய் விளங்கும் பெருமான் புகழைப் போற்றுதலே பொருள் உடைய செயலாகும்.
| 2207 | பூம்படு
கிற்கயல் பாயப் காம்படு தோளியர் நாளுங் மேம்படு தேவியொர் பாக தேம்படு மாமலர் தூவித் |
2.068. 8 |
அழகிய நீர் நிலைகளில் கயல்கள் பாய, அதனால் பறவை இரிந்தோட விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய் விளங்குவோனும் புறங்காட்டில் ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து மாதொருபாகனே! எம்மானே! எனக்கூறி மலர்தூவித் தொழத் தீயனகெடும.
| 2208 | திருமரு
மார்பி லவனுந் இருவரு மாயறி வொண்ணா கருவரை காலி லடர்த்த மருவிய பாடல் பயில்வார் |
2.068. 9 |
திருமகள் மருவிய மார்பினனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு எரியுருவான ஈசனும் கரியமலைபோன்ற இராவணனைக் காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து, பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார் வானுலகம் பெறுவர்.
| 2209 | ஆடை
தவிர்த்தறங் காட்டு சோடைக ணன்னெறி சொல்லார் வேடம் பலபல காட்டும் காடதனினட மாடுங் |
2.068.10 |
ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை உடுத்து அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச் சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பல்வேறு வடிவங்களைக் கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும் கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.
| 2210 | விடைநவி
லுங்கொடி யானை கடைநவி லுங்கடம் பூரிற் நடைநவின் ஞானசம் பந்தன் படைநவில் பாடல் பயில்வார் |
2.068.11 |
விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள காழிமாநகரில் தோன்றிய நன்னடை உடைய ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர்.
திருச்சிற்றம்பலம்
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடம்பூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பூரில், கடம்பூரில், பயில்வார், மகிழும், விளங்கும், மருவிய, பெருமான், லான்கடம், கண்ணுத, மகளிர், அடைந்து, கொன்றை, கடம்பூரை, பொருந்திய, காட்டில், பெருமானைப், பாடல்கள், மிலாரே, யானைப், பாடல்களைப், பழியொடு, பெருமானது, பகலும், லுங்கடம், எழுந்தருளிய, னானைத், வார்சடை, திருமுறை, திருச்சிற்றம்பலம், பூண்டு, விரும்பிப், உடுத்து, புலியத, திருக்கடம்பூர், இரவும், பூரிற், சேர்நெடு

