முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.107.திருக்கேதீச்சரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.107.திருக்கேதீச்சரம்

2.107.திருக்கேதீச்சரம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கேதீச்சுவரர்.
தேவியார் - கௌரிநாயகியம்மை.
2627 |
விருது குன்றமா மேருவில் நாணர பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் |
2.107. 1 |
வெற்றிக்கு அடையாளமாக, பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி அனல் எரியை அம்பாகக் கொண்டு பொருது முப்புரங்களை எரித்த சிவபிரான் பற்றிநின்று உறையும் பதியாக அடியவர் எந்நாளும் கருதுகின்ற ஊர், ஆரவாரிக்கின்ற கடலால் சூழப்பட்ட, மணம் கமழும் பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் கருதி வழிபாடு செய்யாநின்ற திருக்கேதீச்சரமாகும். அதனைக் கைதொழின் கடுவினைகள் நம்மை அடையா.
2628 |
பாடல் வீணையர் பலபல சரிதையர் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் ஈட மாவது விருங்கடற் கரையினில் கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் |
2.107. 2 |
வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர். பற்பலவான புராண வரலாறுகளைக் கொண்டவர். எருது உகைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர். அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர். அவருக்குரிய இடம், கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத கேதீச்சரம் ஆகும். அதனைத் தொழ இடர்வினைகெடும்.
2629 |
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் |
2.107.3 |
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். பிறை தவழ் சடையின. திருநீற்றை விரும்பிப்பூசி. கழலும் சிலம்பும் ஆர்க்க ஆடுபவர். பாடுபவர், உண்ணும் இச்சை உடையவர் போல வீடுகள்தோறும் இடும் பிச்சைக்கு உழல்பவர். அவ்விறைவர் எழுந்தருளிய உயரிய மாதோட்டத்தில் விளங்கும் கேதீச்சரத்தை அடைபவரை இருவினைகள் அடையா.
2630 |
பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் |
2.107. 4 |
திருநீறணிந்த திருமேனியர். புலித்தோலை உடுத்தவர். விரிந்த கையினில் ஏந்திய கூரிய முத்தலைச்சூலத்தை உடையவர். முப்புரி நூல் அணிந்தவர். மறித்துவரும் அலைகளைக் கொண்ட கடல் சூழ்ந்த மாதோட்ட நகரில் எழுந்தருளி விளங்கும் அடிகள். அவர் விரும்பி எழுந்தருளிய கேதீச்சரத்தை அன்புகொண்ட மனத்தராய் வணங்கும் அடியவர்மேல் பற்றித் திரண்டு வரும் வினைகள் நீங்கிப்போகும்.
2631 |
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம் வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம் அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் |
2.107.5 |
மிகவும் நல்லவர். ஞானம் நன்கு உடையவர். தம்மை அடைந்தவர்கட்கு அருளிய வல்லவர். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பிறத்தல் இறத்தல் இல்லாதவர. நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட மாதோட்டத்து எல்லையில்லாத புகழை உடைய எந்தையாகிய அவரது கேதீச்சரத்தை இரவும் பகலும் நினைந்து போற்றித் துன்பம் குற்றம் அற்றவர்களாய் அவ் அரனடியினை தொழும் அன்புடையவரே அடியவர் ஆவர்.
2632 |
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் மாழை யங்கயற் கண்ணிபா லருளிய வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே |
2.107. 6 |
பெருமை பொருந்திய நீண்ட சடையின்கண் பெருந்திருவினளாகிய கங்கையை மறைத்து வைத்து, தம் திருமேனியின் ஒரு பாகமாகிய அழகிய கயல் போலும் கண்ணினள் ஆகிய உமையம்மைபால் கருணை காட்டும் இயல்பினராகிய இறைவர் வாழைத் தோட்டங்களில் பழுத்த பழங்களை உண்ண மந்திகள் களிப்புற்று மருவிய மாதோட்டத்தில், பன்றியின் வெண்மையான கொம்பினை அணிந்துள்ள அகன்ற மார்பினராய்க் குடி கொண்டு வாழும் இடமாகக் கொண்டு கேதீச்சரத்தில் பிரியாது உறைகின்றார்.
2633 |
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே |
2.107.7 |
முற்காலத்தில் நால்வர்க்கு அறம் உரைத்தருளிப் பல உலகங்களிலும் பிறந்துள்ள உயிர்களின் வாழ்க்கைக்குரிய ஊழை அமைத்தருளிய நாதனார், கடல் சூழ்ந்த இவ்வுலகிலுள்ளோர் கண்டு கைதொழுமாறு விரும்பி உறையும் கோயில், வண்டுகள் பண்ணிசைக்கும், சிறந்த மலர்கள் நிறைந்த பொழில்களில் மயில்கள் நடனமாடும் மாதோட்டத்தின்கண் தொண்டர்கள் நாள்தோறும் துதிக்க அருள் புரியும் கேதீச்சரமாகும்.
2634 |
தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே |
2.107. 8 |
தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன்முடி, தோள் ஆகியன அழகிழக்குமாறு அடர்த்துப் பின் அவனது பாடல்கேட்டு அருள்செய்த தலைவனார், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரை அடைந்து அன்பர்கள் இறைஞ்சி வழிபடும் கேதீச்சரத்து உள்ளார்.
2635 |
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் மேவி நாடிநின் அடியிணை காண்கிலா மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் |
2.107.9 |
மா, கமுகு, வாழை ஆகியன செறிந்த மாதோட்ட நன்னகரில் நிலையாக, தேவியோடும் அழகிய கேதீச்சரத்து விளங்கும் எம்பெருமானே! தாமரை மலரில் உறையும் நான்முகனும், கடல் வண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து ஓடியும் உன் திருவடி இணைகளைக் காணாதவாறு உயர்ந்து நின்ற உன் திறமை யாதோ? இஃது எதிர் நிரல் நிறை.
2636 |
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய மத்த யானையை மறுகிட வுரிசெய்து தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே |
2.107.10 |
புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர். மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தவர் ஆகிய, மாதோட்டத்துள் பாலாஒவியின் கரைமேல் விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடையுங்கள்.
2637 | மாடெ லாமண
முரசெனக் கடலின தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத் நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் பாட லாயின பாடுமின்ப த்தர்கள் |
2.107. 11 |
அருகிலெல்லாம் மணமுரசு ஒலிப்பதுபோலக் கடல் ஒலி நிரம்பப் பெற்றமாதோட்டத்தில், வலிய ஏற்றினை உடைய தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழி நாட்டினர்க்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய இப்பாமாலையைப் பக்தர்களே! பாடி வழிபடுமின். பரகதி பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கேதீச்சரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மாதோட்டத், தீச்சரம், விளங்கும், கொண்டு, உடையவர், மாதோட்டம், மாதோட்ட, மாதோட்டத்தில், பொருந்திய, நிறைந்த, கேதீச்சரத்து, கேதீச்சரத்தை, உறையும், விரும்பி, மந்திகள், மருவிய, தலைவனார், போர்த்தவர், யானையை, தீச்சரத், நாதனார், திருமுறை, கடலால், சூழப்பட்ட, அடியவர், யடையாவே, கைதொழக், பாடுபவர், கொண்டவர், எழுந்தருளிய, பொருது, திருச்சிற்றம்பலம், திருக்கேதீச்சரம், சூழ்ந்த