ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்

3.3 மூன்றாவது - விரிவு
| 162. |
விரிவென வணிவழி விரித்த தன்பொரு டெரியவைக் கட்செலச் செப்புத லென்ப. |
3.4 நான்காவது - தொகையுந்துணிவும்
| 163. |
ஒருங்கு முன்விரித் துரைத்தவை மீண்டு சுருங்கக் காட்ட றொகை யென்றாகும். | 164. |
பன்மனந் துணியவுட் படுத்த றுணிவாந் துன்னிய வணித்தொகைத் துணிவிற் குரித்தே. |
3.5. ஐந்தாவது - உரிமை
| 165. |
எப்பொரு ளெவ்வழி யியம்பினு மதற்கதற் குரிய வுரைப்ப துரிமையாங் கால மிடம் பண்பொழுக்கிறை யெனவைங் கூற்றே. காலவுரிமை | 166. |
காலமே பருவம் பொழுதென விரண்டாய்ப் பருவங் கார்கூதிர் பனிமுன்பின் வசந்த மெரிமுதிர் வேனி லென்றிரு மூன்றே. | 167. |
கார்காலத் துரிமை கார்க்கா லுருட்டிய வாடையே கோப மயிலே கேகயங் கோடல் செங்காந்தள் கொன்றை கூதாளந் தண்டிமி லுயவை தளவு கடம்பஞ்சனி வெண்குருந் தலர்தலே வியங்கங் கிளிகுயி னீங்கலே நீர்மல ரேங்க லென்ப. | 168. |
கூதிர்க் குரிமை கூதிரே குருகே வோதிமங் குரண்ட மொண்மாதிச் சகோர முதுவளை ஞண்டூ ருநத்து வத்த னீரே தெளீத னீர்மீன் சனித்தல் காரே சூற்கொளல் பாரிசா தஞ்சந் தாராம் பித்திகை மந்தார நாணன் முற்றலர்ந் துவத்தலே மற்றுயிர் நைதலே, | 169. |
முன்பனிக் குரிமை துன்பனிக் கடறருங் கொண்டல் வீசலுங் கூண்டசை சிதகன் மண்டிருட் கூகைகூன் மனமகிழ்ந் தொலித்தலு மாந்தருச் சாமந்த மல்ர்தலு மிலந்தை தீங்கனி யுதிர்த்தலுந் தீயெனக் குன்றி காய்ந்தலு நெல்லொடு கரும்பு முற்றலுமாம். | 170. |
பின்பனிக் குரிமை பேசுங் காலை யுலவை வீசலை யுளபல புறவினம் வலிது கூய்க்கான வாரணங் களித்தலே கோங்கில வலர்தலே குரவ நெடும்பனை | 171. |
தீங்கனி யுதவலே சிதப்பரி வெடித்தலே. வசந்தத் துரிமை வசந்தற் றேரெனுந் தென்றலே வண்டினஞ் சிறுகிளி பூவை யன்றிலே குயிலிவை யகமகிழ்ந் தார்த்தலே மாங்கனி யுதிர்தலே தேங்கய மலரொடு வகுளந் தாழை வழைசெண் பகம்பிற முகிழினி தவிழ்த்தலே முன்கா ரிடைக்களி மிகுவன் மயின்முதன் மெலிதலே யென்ப. | 172. |
வேனிற் குரிமை கானிற் றூசெழக் கோடையே வீசக் குறுகப் பேய்த்தேர் காடையே வலியான் கம்புள் காகஞ் சிரவ மொலித்தல் புருண்டி சிந்தூரம் பாடலம் பூத்தல் பாலைக் கனியொடு கோடர நாவல் குலிகங் காய்த்த னீரலகன் மற்றுயிர் சீரலகிச் சோரலே. | 173. |
பொழுதென மாலைக் கெழுயாமம் வைகறை யெற்றோற்ற நண்பக லெற்பா டெனவாறே மாலைக் குரிமை மலர்த லுற்ப லம்புள் சோலைசேர்ந் தொலித்தல் சுரபி கரைத றுன்னடைத் தாமரை சுளித்தெனக் கூம்பல் கன்னடங் காம்போதி தனியப் பாடலே யாமத் துரிமை யாகரி பாடலே யூமன் சகோர முவரி யுவத்தலே காம மநினதங் கரவென் றிவையே வைகறைக் குரிமை வாரணங் கூவன் மெய்யெனக் கனாவுறன் மீனொளி குன்றல் வாமமீ னுதித்தன் மாதவர் வாழ்த்த லிராமகலி யுடனிந் தோளம் பாடலே விடியற் குரிமை விலங்கொடு மற்றுயிர் கடிமகிழ்ந் தெழுச்சி கானொடு கமலம் விரிபூ மலர்தல் வெண்பனி துளித்த றெரிபூ பாளந்தே சாட்சி பாடலே நண்பகற் குரிமை நயத்தல் கோகம் வெண்டே ரோடன் மேதி நீராடல் பண்டிசை சாரங் கம்பாட லென்பவே வெற்பாட் டுரிமை வெற்பானி ழனீளல் வானஞ் சிவத்தன் மறியினங் குதித்தல் கானமாய்க் காபி கலியாணி பாடலே. இடவுரிமை | 174. |
குறிஞ்சி பாலை முல்லை மருத நெய்த லைந்திணைக் கெய்திய பெயரென வரையே சுரமே புறவே பழனந் திரையே யவையவை சேரிடந் தானு நிரையே யைந்திணை நிலமெனப் படுமே. | 175. |
தெய்வஞ் செல்வர் சேர்குடி புள்விலங் கூர்நீர் பூமர முணாப்பறை யாழ்பண் டொழிலெனக் கருவி ரெழுவகைத் தாகும். | 176. |
குறிஞ்சிக் கருப்பொருள் குமரன் றெய்வமே வெறியணிப் பொருப்பன் வெற்பன் சிலம்பன் குறத்தி கொடிச்சி குறவர் கானவர் குறத்தியர் கிளிமயின் மறப்புலி குடாவடி கறையடி சீயஞ் சிறுகுடி யருவி நறுஞ்சுனை வேங்கை குறிஞ்சி காந்த ளாரந் தேக்ககி லசோக நாகம் வேர லைவனந் தோரை யேனல் கறங்கிசைத் தொண்டகங் குறிஞ்சியாழ் குறிஞ்சி வெறிகொ ளைவனம் வித்தல் செறிகுரற் பைந்தினை காத்தல் செந்தே னழித்தல் செழுங்கிழங் ககழ்தல் கொழுஞ்சுனை யாடலே. | 177. |
பாலைக் கருப்பொருள் பகவதி தெய்வமே காளை விடலை மீளி யெயிற்றி யெயின ரெயிற்றியர் மறவர் மறத்தியர் புறாப்பருந் தெருவை செந்நாய் குறும்பு குழிவறுங் கூவல் குராஅ மராஅ வுழிஞை பாலை யோமை யிருப்பை வழங்குகதி கொண்டன செழும்பதி கவர்ந்தன பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சமம் பகலிற் சூறை பரிவெழுந் தாடலே. | 178. |
முல்லைக் கருப்பொருள் முராரி தெய்வமே தொல்லைக் குறும்பொறை நாடன் றோன்றன் மடியாக் கற்பின் மனைவி கிழத்தி யிடைய ரிடைச்சிய ராய ராய்ச்சியர் கான வாரண மான்முயல் பாடி குறுஞ்சுனை கான்யாறு குல்லை முல்லை நிறங்கிளர் தோன்றி பிறங்கவர்ப் பிடவங் கொன்றை காயா மன்றலங் குருந்தந் தாற்றுக் கதிர்வரகு சாமை முதிரை யேற்றுப் பறைமுல்லை யாழ்சா தாரி சாமை வரகு தரமுடன் வித்த லவைகளை கட்ட லரிதல் கடாவிடல் செவிகவர் கொன்றைத் தீங்குழ லூதன் மூவின மேய்த்தல் சேவினந் தழுவல் குரவை யாடல் குளித்தல் கான்யாறே. | 179. |
மருதக் கருப்பொருள் வாசவன் றெய்வமே விருதமை யூரன் வெண்டார் கிழவன் கெழுதகு கற்பிற் கிழத்தி மனைவி யுழவ ருழத்தியர் கடையர் கடைச்சியர் மழலை வண்டான மகன்றி னாரை யன்னம் போதா நன்னிறக் கம்புள் குருகு தாரா வெருமை நீர்நாய் பெருகிய சிறப்பிற் பேரூர் மூதூர் யாறு மனைக்கிண ரிலஞ்சி தாமரை நாறிதழ்க் கழுநீர் நளிமலர்க் குவளை காஞ்சி வஞ்சி பூஞ்சினை மருதஞ் செந்நெல் வெண்ணெ லந்நெல் லரிகிணை மன்றன் முழவ மருதயாழ் மருத மன்றணி விழாக்கொளல் வயற்களை கட்ட றோயதல் கடாவிடல் பொய்கையா றாடலே. | 180. |
நெய்தற் கருப்பொரு ணீராள் வருணனே மொய்திரை சேர்ப்பன் முன்னீர் புலம்பன் பரத்தி நுளைச்சி பரதர் பரத்தியர் நுளையர் நுளைச்சிய ரளவர ளத்தியர் காக்கை சுறவம் பாக்கம் பட்டின முவர்நீர்க் கேணீ கவர்நீர் நெய்தல் கண்டகக் கைதை முண்டக மடம்பு கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல் புலவுமீ னுப்பு விலைகளிற் பெற்றன நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்த லுணக்கல் விற்றல் குணக்கட லாடலே. | 181. |
இடனெனப் படுவது மலைநா டியாறே. |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

