முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 3.திருவண்டப் பகுதி
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 3.திருவண்டப் பகுதி

3.திருவண்டப் பகுதி
(தில்லையில் அருளயது)
இணைக் குறள் ஆசிரியப்பா
(தில்லையில் அருளயது)
இணைக் குறள் ஆசிரியப்பா
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் | 5 |
சிறிய ஆகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து | 10 |
எறியது வளியின் கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போன் காக்கும் கடவுள், காப்பவை காப்போன், கரப்பவை கருதாக் | 15 |
கருத்துடைக் கடவுள், திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும் அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு | 20 |
மதியில் தண்மை வைத் தோன், திண்திறல் தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன், மேதகு காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட | 25 |
மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று எனைப் பல கோடி எனைப் பல பிறவும் அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று முன்னோன் காண்க, முழுதோன் காண்க தன்நேர் இல்லோன் தானே காண்க | 30 |
ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க கானம் புலியுரி அரையோன் காண்க நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன் இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க | 35 |
அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க பரமன் காண்க, பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க, அநேகன் காண்க சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க | 40 |
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையில் படுவோன் காண்க ஒருவன் என்றும் ஒருவன் காண்க விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க | 45 |
இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க அரிய அதில் அரிய அரியோன் காண்க மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க | 50 |
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க யாவரும் பெற உறும் ஈசன் காண்க | 55 |
தேவரும் அறியாச் சிவனே காண்க பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க கண்ணால் யானும் கண்டேன் காண்க அருள்நனி சுரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க | 60 |
புவனியல் சேவடி தீண்டினன் காண்க சிவன் என யானும் தேறினன் காண்க அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க | 65 |
பரமா னந்தம் பழம் கட லதுவே கருமா முகிலில் தோன்றித் திருவார் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய | 70 |
வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட | 75 |
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் கேதக் குட்டம் கையற வோங்கி இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் | 80 |
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து | 85 |
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் | 90 |
திருச்சிற்றம்பலம்
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
3.திருவண்டப் பகுதி - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விரிந்தோன், ஒருவன், யானும், கண்டேன், எழுந்து, திசைதிசை, நினைதொறும், அனைத்து, பழையோன், படைப்போன், காப்போன், கடவுள், வைத்தோன், சமயத்து, பெரியோன்