ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
2.4 நான்காமோத்து இடைச்சொல்லியல்
130. |
இடைச்சொற் றனிநிலை யின்றி முன்பின் வினைபெயர் சேர்ந்து வேற்றுமை சாரியை வினையொப் புருபுகளும் விளங்குதம் பொருளவு மிசைநிறைப் பனவு மசைநிறைப் பனவுங் குறிப்பு மெனவெண் கூற்றவை யென்ப. | 131. |
ஏயென் னிடைச்சொல் லீற்றசை தேற்றமெண் வினாப்பிரி நிலையிசை நிறையென வாறே. | 132. |
ஓபிரிப் பசைநிலை யொழிவெதிர் மறைவினாத் தெளிவு கழிவு சிறப்பென வெட்டே. | 133. |
எனவென்ப துவமை யெண்குணம் வினைபெய ரிசைக்குறிப் பியலு மென்று மினைத்தே. | 134. |
உம்மையே யெதிர்மறை யெச்சமுற் றளவை சிறப்பைய மாக்கந் தெளிவென வெட்டே. | 135. |
வரைப்படு மெண்ணும் வையகத் தில்லவும் வினைப்படி னும்மை வேண்டுஞ் செவ்வெண் ணீற்றின் வேண்டு மெச்ச வும்மையே. | 136. |
எண்வகை யெட்டனுள் ஏசெவ்வெண் ணென்றா எனாநான்குந் தொகைபெறு மெனவொடு வும்மை நான்குந் தொகாமை நடக்கவும் பெறுமே யென்றென வொடுமூன்று மெஞ்சிடத் தனவுமாம். | 137. |
அத்தந்தி லன்றம்ம வாங்கரோ வாமா விட்டிகுங் குரைகா விருந்தின் றோருஞ் சின்றந் தானின் றுதில்பிற பிறக்கு மன்மா மன்னோ மாதுயா மாதோ போலும் போமெனப் பொதுவசை முப்பதே யித்தை யத்தை யாழிக மதிமானார் மோமியா வாழிய முன்னிலை யசைபத்தே. |
நான்காமோத்து இடைச்சொல்லியல் - முற்றிற்று
2.5 ஐந்தாமோத்து உரிச்சொல்லியல்
138. |
உரிச்சொல் லென்ப வுரியபற் குணசொல் லாகிப் பெயர்வினை யணைந்து வருமே. | 139. |
அறிவரு ளாசை யச்ச மான நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மைய னினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி துனிவழுக் காறன் பெளிமை யெய்த்த றுன்ப மின்ப மிளைமை மூப்பிகல் வென்றி பொச்சாப் பூக்க மறமத மறவியினைய வுடல்கொ ளுயிர்க் குணந் துய்த்தறுஞ்ச றொழுத லணித லுய்த்திலாதி யுடலுயிர்த் தொழிற் குணம். | 140. |
பல்வகை வடிவிரு நாற்றமை வண்ண மறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம். | 141. |
தோன்றன் மறைதல் வளர்தல் சுருங்க னீங்க லடைத னடுங்க லிசைத்த லீத லின்னன விருபொருட் டொழிற்குணம். | 142. |
இருதினை மூவிட நான்மொழி யைம்பா லறுதொகை யெழுவழு வுருபுக ளெட்டே தொகாநிலை யொன்பது தொகைநிலை யாறு முப்பொழு திருசொல் லாகு பெயரே பகுபதஞ் சுட்டு வினாவே வினையின் மூவகை முற்று மிருவகை யெச்சமும் வினைக்குறிப் பிடையுரி விதித்திவை முத்தமிழ் மொழி யெனத் தெளிந்த முன்னோர் வழியிவண் விளக்கிய வண்சொற் றொகையே. |
ஐந்தாமோத்து உரிச்சொல்லியன் - முற்றிற்று
இரண்டாவது - சொல்லதிகாரம் முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்