ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
2.3.2 இரண்டாவது - ஏவல்வியங்கோள்
113. |
ஏவ லொருமைக் கியலு மாய்திமோ வேவற் பன்மைக் கீர்தீர் மின்மினீ ரிருமைக் கோரோவிடத் தாகுங் குவ்வே. | 114. |
எதிர்மறை யேவற் கேலே அல்லே அன்மோ அற்க வாகு மொருமை ஆமின் அன்மின் அற்பீர் பன்மை. | 115. |
"ஈதா கொடுவெனு மூன்ற்று முறையே யிழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை." | 116. |
வியங்கோ ளியலும் விகுதிக் கவ்விய யவ்வொடு ரவ்வொற்று மிவையெங்கு மேற்பன "வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய் யேகலு முரித்தஃ தேகினு மியல்பே." |
2.3.3 மூன்றாவது - ஈரெச்சம்
117. |
எச்சமே தொழில்பொழு தென்றிவை தோன்றி யிடம்பா றொன்றா தெஞ்சிய வினையென விவற்றுட் பெயர்சேர்ந் தியலும் பெயரெச்சம் வினையொடு புணர்வது வினையெச் சம்மே. | 118. |
உம்மீற்ற வெச்சத் தீறு மீற்றய லுயிரு முயிர்மெய்யு மொழிதலாஞ் செய்யுட் கும்முந் தாதலு மொக்கு மென்ப. | 119. |
வினையெச் சங்கொள் விகுதி இ உ உவ்வோ டெனவும் ஊபுஆ விறப்பே அஇரு கருத்தா வணையி னிகழ்வே யொருகருத் தாவு மோரிடத் திரண்டு மியைஅ வன்றி இல்இன் இயஇயர் வான்பான் பாக்கு வரும்பொழு தாம்பிற. | 120. |
எனவொழித் தொழிந்த விறப்பெச் சத்தும் வான்பான் பாக்கென வருமூன் றற்கு மேற்கு மொருகருத்தா விரண்டும் பிறவே. | 121. |
எதிர்மறை யெச்சத் தியலும் விகுதி யாமலா தாமை யாவென நான்கே. | 122. |
வால்தரல் மூவிட மருவுதற் குரிய செலல் கொடை சேரும் படர்க்கை யொன்றே. |
மூன்றாவது - ஈரெச்சம் - முற்றிற்று
2.3.4 நான்காவது - வினைக்குறிப்பு
123. |
வினைக்குறிப் பென்ப வினைபோல விகுதி பெற்றிடம் பாற்கும் பெயர்ப்பகு பதமே. | 124. |
வினைக்குறிப் பொன்றன்பால் விகுதி துவ்விஃதே வலிமிகத் துறுடுவாம் ஐர யவ்வுமல் வின்னு மளவு முறையீற்ற பெயர்க்கே அவ்விறு மெல்லாம் பலவின் பாற்கே. | 125. |
வினைக்குறிப் பெஞ்சி யீற்றகரம் பொதுவே. | 126. |
அன்மை வினைக்குறிப் பணையுந் திரிபொரு ளன்றுமே லதுவறி னான்றாந் தூக்கி னின்றி யன்றி யென்றெஞ்சும் இயாப்பி னுவ்வு மாமாயி னுறுவலி யியல்பே. | 127. |
வழுவா முரிமை மயங்கிக் கெடினவை யிடம்பா றிணைபொழு திறைவினா மரபேழே. | 128. |
ஐயந் திணைபா லணையும் பொதுவே. | 129. |
சிறப்பணி நடையாற் றிணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணுத னெறியே. |
நான்காவது - வினைக்குறிப்பு - முற்றிற்று
மூன்றாமோத்து வினைச்சொல்லியல் - முற்றிற்று
மூன்றாமோத்து வினைச்சொல்லியல் - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்