இலக்கணச் சுருக்கம்

லகர ளகர வீற்றுப் புணர்ச்சி
149. லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
பாற்குடம் அருட்பெருமை - வேற்றுமை
வேற்படை அருட்செல்வம் - பண்புத்தொகை
வேற்கண் வாட்கண் - உவமைத் தொகை
குயில்கரிது பொருள் பெரிது - எழுவாய்
கால்கை பொருள்புகழ் - உம்மைத்தொகை
பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.
----
150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைதொகையிலும், ஒரு கால் இயல்பாகவும், ஒரு காற்திரியவும் பெறும்.
உதாரணம்.
கல் குறிது
முள் சிறிது கற்குறிது
முட்சிறிது எழுவாய்
அல் பகல்
உள் புறம் அட்பகல்
உட்புறம் உண்மைத்தொகை
நொல், செல், கொள், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நெற்கடிது, செற்கடிது, கெற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த்தெர்டரிலும் உறழாது திரிதே வரும்.
செல் - மேகம், கொல் - கொல்லன்
உறழ்ச்சியாவது ஒரு கால் இயல்பாகியும், ஒரு கால் விகாரப்பட்டும் வருதல். உறாழ்ச்சி எனினும், விகற்ப்ப வினுமெனினும் ஓங்கும்.
கற்கரித்தான், கட்குடித்தான் எனத்தனிக் கூற்றெழுத்தை சார்ந்h ல ள க்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது. திரிந்தே நிற்கும்.
----
151 அல்வழி வேற்றுமை இரண்டினும் லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும்.
உதாரணம்.
அலவழி வேற்றுமை
கற்றீது கற்றீமை
முட்டீது முட்டீமை
---
152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும்.
உதாரணம்.
கற்றீது கஃறீது
முட்டீது முஃடீது
---
153. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுந் கெடும்.
உதாரணம்.
வேறீது வாடீது
தோன்றறீயன் வேடீயன் எழுவாய்த் தொடர்
தோன்றாறொடராய் வேடீயை - விளித்தொடர்
காறலை தாடலை - உம்மைத்தொகை
உண்பறமியேன் வந்தாடேவி - வினைமுற்றுத் தொடர்
பயிறோகை அருடேவன் - வினைத்தொகை
குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் - மலை, தாரை - கண்
வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.
நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.
---
154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கல் - கன்ஞெரிந்தது கன்ஞெரி
வில் - வின்னீண்டது வின்னீட்சி
புல் - புன்டாண்டது புன்மாட்சி
முள் - முன்ஞெரிந்நது முண்ஞெரி
புள் - புண்ணீண்டது புண்ணீட்சி
கள் - கண்மாண்டது கண்மாட்சி
155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
வேனன்று வேனன்மை
பொருணன்று பொருணன்மை
156. லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம்
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கல்யாது கலயாப்பு
விரல்வலிது விரல்வன்மை
முள்யாது முள்யாப்பு
வாள்வலிது வாள்வன்மை
- தேர்வு வினா
149. லகர ளகரங்களின் முன் இரு வழியினும் வல்லினம் வரின், எப்படிப் புணரும்?
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, எப்படியாம்?
150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வல்லினம் வரின், எவ்விடங்களில் ஒரு கால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும்?
எச் சொற்களின் ஈற்று லகரவொற்று, வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிற்றிரிந்தே வரும்? உறழ்ச்சியாவது யாது? தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்து இயல்பேயாமோ?
151. இரு வழியினும் லகரத்தின் முன் வருந் தகரம் எப்படியாம்?
152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்துக் றடக்களாதலன்றி வேறு திரிபு பெறுமோ?
153. தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, கெடுதல் எங்கும் இல்லையோ? தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, எங்கே கெடாது திரிந்து நிற்கும்?
லளக்கள் வேற்றுமையிற் கெடுதல் எங்கும் இல்லையோ?
உயர்திணைப்பெயாPற்று லளக்கள் வேற்றுமையில் வருந் தகரந் திரிந்த விடத்து எப்படியாம்?
154. லளக்களின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படியாம்?
155. தனிக்குற்றெழுத்தைச் சாராத லளக்கள் இரு வழியினும் வரும் நகரந் திரிந்த விடத்து, எப்படியாம்?
156. லளக்களின் முன் இரு வழியினும் இடையினம் வரின் எப்படியாம்?
-----
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

