இலக்கணச் சுருக்கம்

167. ஒத்து நடத்தலாவது, ஒரேழுத்து நின்றவிடத்து
அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வறுமாறு
:-
அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உ-ம்-
அகம் - அகன்
முகம் - முகன்
நிலம் - நிலன்
நலம் - நலன்
மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
பசல்
மஞ்சு
மயல் பைசல்
மைஞ்சு
மையல் மொழி முதலில் ஒத்து நடந்தது
அமச்சு
இலஞ்சி
அரயர் அமைச்சு
இலைஞ்சி
அரையர் மொழியிடையில்
ஒத்து நடந்தது
ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
நணடு
நெண்டு
நமன் ஞண்டு
ஞெண்டு
ஞமன் மொழி முதலில் ஒத்து நடந்தது
ஐந்நூறு
மைந்நின்ற கண் ஐஞ்ஞ10று
மைஞ்ஞின்ற கண் ஐகாரத்தின் பின்
ஒத்து நடந்தது
சேய்நலூர்
செய்நின்ற சேய்ஞலூர்
செய்ஞ்ஞின்ற நீலம் யகரத்தின் பின் ஒத்து நடந்தது
ஒரொவிடத்து அஃறிணைப் பெயாPற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
சாம்பல் - சாம்பர்
பந்தல் - பந்தர்
குடல் - குடர்
அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
அரும்பு - அரும்பர்
கரும்பு - கரும்பர்
கொம்பு - கொம்பர்
வண்டு - வண்டர்
ஒரோவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
அலமருகுயிலினம் - அளமருகுயிலினம்
பொள்ளாமணி - பொல்லாமணி
---
168. தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.
உதாரணம்.
யாது - யாவது
குன்றி - குன்றம்
செல் உழி - செல்வுழி
விண் அத்து - விண்வத்து
----
169. திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம்.
உதாரணம்.
மாகி - மாசி
மழைபெயின் விளையும் - மழைபெயில் வியையும்
கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு
உயர்திணைமேலே - உயர்திணை மேன
---
170. கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம்.
உதாரணம்.
யாவர் - யார்
யார் - ஆர்
யானை - ஆனை
யாடு - ஆடு
யாறு - ஆறு
எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.
---
171. நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம்.
உதாரணம்.
பொழுது - போழ்து
பெயர் - பேர்
---
172. நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம்.
உதாரணம்.
வைசாகி - வைகாசி
நாளிகேரம் - நாரிகேளம்
மிஞிறு - ஞிமிறு
சிவிறி - விசிறி
தசை - சதை
இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும்.
உதாரணம்.
கண்மீ - மீகண்
நகர்ப்புறம் - புறநகர்
புறவுலா - உலாப்புறம்
இன்முன் - முன்றில்
பொதுவில் - பொதியில்
முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின.
- தேர்வு வினாக்கள்
165.இப்படி விதியினால் விகாரப்பட்டு வருவனவன்றி, விதியின்றி விகாரப்படுவனவும் உளவோ? அவை எத்தனை வகைப்படும்?
166. மருவி வழங்குதலாவது யாது?
167. ஒத்து நடத்தலாவது யாது? 168. தோன்றலாவது யாது?
169. திரிதலாவது யாது?
170. கெடுதலாவது யாது? 171. நீளலாவது யாது?
172. நிலை மாறுதலாவது யாது?
இந்நிலை மாறுதல் எழுத்துக்கே யன்றிச் சொற்களுக்கும் உண்டோ?
சொன்னிலை மாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்?
புணரியல் முற்றிற்று
எழுத்ததிகாரம் முற்றுப் பெற்றது.
எழுத்ததிகாரம் முற்றுப் பெற்றது.
இரண்டாவது: சொல்லதிகாரம்
2.1. பெயரியல்
173. சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.
- தேர்வு வினா
173. சொல்லாவது யாது?
திணை
174. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும்.
திணை- சாதி, உயர்தணை - உயர்வாகிய சாதி, அஃறிணை - உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே திணை என்னும் பண்புப் பெயர், ஆகு பெயராய்ப் பண்பியை உணர்த்தி நின்றது. சாதி பண்பு, சாதியையுடைய பொருள் பண்பி.
---
175. உயர்தணையாவன, மனிதரும், தேவரும், நரகரும் ஆகிய மூவகைச் சாதிப் பொருள்களாம்.
---
176. அஃறிணையாவன, மிருகம், பறவை முதலிய உயிருள்ள சாதிப் பொருள்களும், நிலம், நீர், முதலிய உயிரல்லாத சாதிப் பொருள்களுமாம்.
- தேர்வு வினாக்கள்
174. அக்கருத்தின் நிகழ் பொருள் எத்தனை வகைப்படும்?
திணையென்பதற்கு பொருள் என்ன?
உயர்திணையென்பதற்கு பொருள் என்ன? அஃறிணையென்பதற்கு பொருள் என்ன?
இங்கே திணையென்னும் பண்புப் பெயர் எதனை உணர்த்தி நின்றது.
175. உயரிதிணையாவன யாவை?
176. அஃறிணையாவன எவை?
பால்
177. உயர்திணை, ஆண்பால், பெண்பால், பலர்பால், என மூன்று பிரிவுடையது.
உதாரணம்.
அவன், வந்தான் - உயர்திணையாண்பால்
அவள், வந்தாள் - உயர்திணைப் பெண்பால்
அவர், வந்தார் - உயர்திணைப் பலர்பால்
பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண் பன்மையும், பெண்டீர், மங்கையர் முதலிய பெண்பன்மையும், மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும், அடக்கி நின்றது.
---
178. அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது.
உதாரணம்.
அது, வந்தது - அஃறிணையொன்றன்பால்
அவை, வந்தன - அஃறிணைப் பலர்பால்
- தேர்வு வினாக்கள்
177. உயர்திணை எத்துணைப் பிரிவையுடையது?
பலர்பால் என்றது எவைகளை அடக்கி நின்றது?
178. அஃறிணை எத்துணைப் பிரிவையுடையது?
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

