இலக்கணச் சுருக்கம்
17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும்
பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.
அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.
-----
--
தேர்வு வினாக்கள்
1. இலக்கண நூலாவதியாது?
2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?
3. எழுத்தாவது யாது?
4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்?
5.உயிரெழுத்துக்கள் எவை?
6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
7.குற்றெழுத்துக்கள் எவை?
8. நெட்டெழுத்துக்கள் எவை?
9. மெய்யெழுத்துக்கள் எவை?
10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 11. வல்லெழுத்துக்கள் எவை?
12.மெல்லெழுத்துக்கள் எவை?
13. இடையெழுத்துக்கள் எவை?
14. சுட்டெழுத்துக்கள் எவை?
15. வினாவெழுத்துக்கள் எவை?
16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும்.
17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை?
18. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை?
உயிர்மெய்க் குற்றெழுத்து எப்படி தொண்ணுறாகும்?
உயிர்மெய் நெட்டெழுத்து எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத்தாறாகும்?
உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் வல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
உயிர்மெய் மெல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
உயிர்மெய் யிடையெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
18. ஆய்தவெழுத்தாவது எது?
19. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?
-----
எழுத்துக்களின் மாத்திரை
20. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.
ஊயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின ளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.
மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
21. உயிரெழுத்துக்குள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். ஆவ்வுகரத்திற்கு குற்றியலுகரமென்றும் பெயராம்.
22. குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளிளிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும்.
ஆக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத்தொடர்கின்ற அயலெழுத்தின் வகையiனாலே, நெடிற் றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரம், என ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பல வெழுத்து மொழியாகியும் வரும்.
உதாரணம்.
நாகு, ஆடு | நெடிற்றொடர்க்குற்றியலுகரம் |
எஃகு, கஃசு | ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் |
வரகு, பலாசு | உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் |
கொக்கு, கச்சு | வன்றொடர்க் குற்றியலுகரம் |
சங்கு, வண்டு | மென்றொடர்க் குற்றியலுகரம் |
அல்கு, எய்து | இடைத்தொடர்க்குற்றியலுகரம் |
-----
23. தனிக்குற்றறெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும், மெல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம்.
உதாரணம். நகு, கொசு, கடு, அது, கணு, திரு, வழு: பூணு, வாரு, உருமு, கதவு, நெல்லு, கொள்ளு.
24. குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.
உதாரணம்.
நாகு + யாது = | நாகியது |
எஃகு + யாது = | எ.கியாது |
வரகு + யாது = | வரகியாது |
கொக்கு + யாது = | கொக்கியாது |
சங்கு + யாது = | சங்கியாது |
அல்கு + யாது = | அல்கியாது |
25. பாட்டில் ஓசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக்களுள்ளும், ஒற்றையெழுத்துக்குள்ளும், சிலசில, தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும், அவிவுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் பெயராம்.
26. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயினும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற நெட்டெழுத்துக்களேழுமாம். ஆளபெடுகின்ற நெட்டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும்.
உதாரணம்.
ஆஅடை, | ஈஇடு, | ஊஉமை, | ஏஎடு, |
ஐஇயம், | ஓஒடு, | ஒளஉவை, | பலாஅ. |
உதாரணம்.
எழுதல் - எழூஉதல்,
வரும் - வரூஉம்,
குரி - குரிஉஇ
-----
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 45 | 46 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலக்கணச் சுருக்கம், Ilakkana Surukkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்