முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - சுபக்கம்
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்

|
சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச் சத்திதா னாதி யாகும் தரும்வடி வான வெல்லாம் சத்தியும் சிவமு மாகும் சத்திதான் சத்த னுக்கோர் சத்தியாம் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே. |
166 |
|
சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும் உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும் பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும் தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே. |
167 |
|
தனுகரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடென்(று) அணுவினோ டெல்லா மாகி அடைந்திடுந் தத்து வங்கள் இனிதறிந் திவைநி விர்த்தி முதல்கலை யிடத்தே நீக்கி நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன். |
168 |
|
எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக் கென்னில் தொல்லாய கன்மமெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின் நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. |
169 |
|
ஒன்றதாய் அநேக சத்தி யுடையதாய் உடனாய் ஆதி அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்களிம்பேய்ந்(து) என்றும்அஞ் ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே. |
170 |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 65 | 66 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சத்திதான், யாகும், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, ஈன்றும், இலக்கியங்கள், சிவமு

