முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.052.திருவாலங்காடு
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.052.திருவாலங்காடு

7.052.திருவாலங்காடு
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - ஊர்த்துவதாண்டவேசுவரர்.
தேவியார் - வண்டார்குழலியம்மை.
530 |
முத்தா முத்தி தரவல்ல சித்தா சித்தித் திறங்காட்டுஞ் பத்தா பத்தர் பலர்போற்றும் அத்தா ஆலங் காடாஉன் |
7.052.1 |
இயல்பாகவே கட்டில்லாதவனே, கட்டுற்ற உயிர்கட்கெல்லாம் வீடளிக்கவல்ல, அரும்புகின்ற மெல்லிய தனங்களை யுடையாளாகிய உமையவளது பாகத்தையுடையவனே, சித்திகளை எல்லாம் உடையவனே, அச்சித்திகளை அடையும் வழியைக் காட்டுகின்ற சிவபெருமானே, தேவர்களாகிய விலங்குகட்டுச் சிங்கம் போல்பவனே, அடியார்களுக்குப் பற்றாய் உள்ளவனே, அன்புடையார் பலரும் போற்றும் கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் என்றும் உள் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
531 |
பொய்யே செய்து புறம்புறமே மெய்யே வந்திங் கெனையாண்ட பையா டரவம் அரைக்கசைத்த ஐயா ஆலங் காடாஉன் |
7.052.2 |
மனத்தொடு பொருந்தாத செயல்களையே செய்து, அதனால் உனக்கு மிகவும் சேய்மையிலே திரிவேனாகிய என்னை, அங்ஙனம் அகன்றொழியாதவாறு தடுத்து இவ்வுலகில் நேரே வந்து என்னை ஆட்கொண்ட மெய்ம்மையுடையவனே, மெய்ம்மை யுடையவர்க்கு மெய்ப்பொருளாய் உள்ளவனே, படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை அரையிற் கட்டிய கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழவேன்.
532 |
தூண்டா விளக்கின் நற்சோதீ பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும் பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் ஆண்டா ஆலங் காடாஉன் |
7.052.3 |
தூண்ட வேண்டாது ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே, வணங்குவாரது துன்பத்தை நீக்குபவனே, எலும்பையே அணியாகப் பூண்டவனே, முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்த அறவுருவினனே, முன்பு செய்யப்பட்ட, அழுந்துதற்கு இடமான வினைகளாகிய அவற்றை நீக்கியருளுகின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
533 |
மறிநே ரொண்கண் மடநல்லார் அறிவே யழிந்தேன் ஐயாநான் பறியா வினைக ளவைதீர்க்கும் அறிவே யாலங் காடாஉன் |
7.052.4 |
தலைவனே, கருமைபொருந்திய கண்டத்தையுடையவனே, தீர்க்க இயலாத வினைகளையெல்லாம் தீர்த்தருளுகின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற அறிவு வடிவானவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே, அடியேன், மான்போலும் ஒளிபொருந்திய கண்களையுடைய, இளைய, அழகிய மாதா ஆசையாகிய வலையில் அகப்பட்டு, அறிய வேண்டுவன வற்றை அறியாது, அறிவு அடியோடே கெட்டேன்; அவ்வாறே இனியுங் கெட்டொழியாது, உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
534 |
வேலங் காடு தடங்கண்ணார் மாலங் காடி மறந்தொழிந்தேன் பாலங் காடீ நெய்யாடீ ஆலங் காடா உன்னுடைய |
7.052.5 |
மாணிக்கம் போல்பவனே, முத்துப் போல்பவனே, மரகதம் போல்பவனே, பால் முழுக்கு ஆடுபவனே, நெய் முழுக்கு ஆடுபவனே, விரிந்த புல்லிய சடையை யுடையவனே, பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் வேல்போலும், பெரிய கண்களையுடைய மாதராசையாகிய வலையில் அகப்பட்டு, உன்னாற் சொல்லப்பட்ட நெறியை மறந்து, மயக்கம் மிகுந்து என்னையே மறந்தொழிந்தேன்; இனி அவ்வாறு இராது, என்றும் உன் அடியார்க்கு அடியனாகியே வாழ்வேன்.
535 |
எண்ணார் தங்கள் எயில்எய்த கண்ணாய் உலகங் காக்கின்ற பண்ணார் இசைக ளவைகொண்டு அண்ணா ஆலங் காடாஉன் |
7.052.6 |
உன்னை மதியாதவரது மதில்களை அழித்த என் தந்தையே, என் தந்தைக்கும் பெருமானே, உலகத்திற்குக் கண்ணாய் நின்று அதனைக் காக்கின்ற முதல்வனே, குற்றமில்லாதவனே, பண்பொருந்திய இசைகளைக் கொண்டு பலரும் துதிக்கின்ற பழையனூர்த் தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
536 |
வண்டார் குழலி உமைநங்கை விண்டார் புரங்கள் எரிசெய்த பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் அண்டா ஆலங் காடாஉன் |
7.052.7 |
வண்டுகள் நிறைந்த கூந்தலையுடையவளாகிய 'உமை' என்னும் நங்கைதன் பாகத்தையுடையவனே, கங்கைக்குக் கணவனே, பகைத்தவரது ஊர்களை எரித்த இடப வாகனனே, வேத நெறியை உடையவனே, முன்பு செய்யப்பட்ட, அழுந்துதற்கு இடமான வினைகள் பலவற்றையும் தீர்க்கின்ற கடவுளே, பழையனூரை விரும்புகின்ற தேவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
537 |
பேழ்வாய் அரவின் அணையானும் தாழா துன்றன் சரண்பணியத் பாழாம் வினைக ளவைதீர்க்கும் ஆள்வாய் ஆலங் காடாஉன் |
7.052.8 |
பெரிய வாயையுடைய பாம்பாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும், பெரிதாகிய தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் விரைவில் உனது முதன்னையை உணர்ந்து உன் திருவடிகளை வணங்குமாறு, தீப்பிழம்பாய் நின்ற மெய்ப் பொருளானவனே, உயிர், பயனின்றிக் கெடுதற்கு ஏதுவான வினைகளை தீக்குகின்ற கடவுளே, பழையனூரை ஆள்கின்றவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
538 |
எம்மான் எந்தை மூத்தப்பன் பெம்மான் ஈமப் புறங்காட்டிற் பன்மா மலர்க ளவைகொண்டு அம்மா ஆலங் காடாஉன் |
7.052.9 |
என் தந்தை, என் தந்தைக்கு முன்னோனாகிய தந்தை முதலாக இருவகை ஏழ் தலைமுறைகளில் எங்களை அடிமை கொண்டுள்ள பெருமானே சுடுகாடாகிய புறங்காட்டில் பேய்களோடு ஆடல் செய்பவனே, பல சிறந்த மலர்களைக்கொண்டு பலரும் வணங்குகின்ற, பழையனூர்க்குத் தலைவனே, திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே, அடியன், என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன்.
539 |
பத்தர் சித்தர் பலர்ஏத்தும் அத்தன் ஆலங் காடன்றன் சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச் |
7.052.10 |
அடியார் பலரும், சித்தர் பலரும் துதிக்கின்ற கடவுளும், பழையனூரை விரும்பிய தலைவனும், ஆகிய திருவாலங்காட்டு இறைவனது அடிமைத் திறத்தின் கண்ணே அன்புடையவராய், சித்தர்களும் தங்கள் சித்தத்திலே மறவாது வைத்துள்ள புகழையுடைய அடியானாகிய நம்பியாரூரனது இம் மெய்யுணர்வுத் தமிழ்ப் பாடல்களாகிய பத்தினையும் பாடி ஆடுவோர், சிவபெருமானது திருவடியையே எஞ்ஞான்றும் வணங்கி வாழ்பவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாலங்காடு - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கடியேன், திருவாலங்காட்டில், அடியார்க்கு, எழுந்தருளியிருப்பவனே, காடாஉன், வாழ்வேன், அடியேனாகியே, னடியார்க், பழையனூரை, என்றும், பலரும், அடியேன், கடவுளே, தலைவனே, விரும்புகின்ற, னூர்மேய, போல்பவனே, தங்கள், சித்தர், பழையனூர், பெருமானே, ளவைதீர்க்கும், கண்ணாய், முழுக்கு, ஆடுபவனே, நெறியை, ஏத்தும், மலர்மேல், அடிமைத், வினைகள், துதிக்கின்ற, ளவைகொண்டு, மறந்தொழிந்தேன், காக்கின்ற, செய்யப்பட்ட, திருச்சிற்றம்பலம், செய்து, பத்தர், பாகத்தையுடையவனே, உள்ளவனே, உடையவனே, திருமுறை, திருவாலங்காடு, கண்களையுடைய, வலையில், அழுந்துதற்கு, முன்பு, சிறந்த, அழித்த, அகப்பட்டு