முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.092.திருநெல்வேலி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.092.திருநெல்வேலி

3.092.திருநெல்வேலி
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
3788 | மருந்தவை
மந்திர மறுமைநன் அருந்துயர் கெடுமவர் நாமமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி |
3.092.1 |
நல்ல நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக. அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும். மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும். மறுமையில் நற்கதி தரும். மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும். போக்கமுடியாத துன்பத்தைப் போக்கும். அத்திரு நாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க, நெருங்கியுள்ள, பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர் ஆவார்.
3789 | என்றுமோ
ரியல்பின ரெனநினை சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் துன்றுதண் பொழினுழைந் தெழுவிய தென்றல்வந் துலவிய திருநெல்வேலி |
3.092.2 |
நெருங்கிய குளிர்ந்த சோலையில் நுழைந்து, செழித்து வளர்ந்துள்ள தாழம்பூவில் படிந்து தென்றல் காற்று வந்து வீசுகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் எப்போதும் ஒரே தன்மையுடையவர் என்று நினைப்பதற்கு முடியாதவர் ஆவர். அவர் இடபவாகனத்திலேறிச் செடிச்சியர் போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் சென்று பிச்சை ஏற்கும் இயல்பும் உடையவர். அவரை வழிபடுவீர்களாக.
3790 | பொறிகிள
ரரவமும் போழிள நெறிபடு குழலியைச் சடைமிசைச் கிறிபட நடந்துநற் கிளிமொழி செறிபொழி றழுவிய திருநெல்வேலி |
3.092.3 |
புள்ளிகளையுடைய பாம்பையும், ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலை யுடையவனையும் சடைமீது சுற்றி அணிந்து, வெண்மையான திருநீற்றைப் பூசி, பிறர் மயங்கும் வண்ணம் நடந்து, நல்ல கிளி போலும் இனிமையான சொற்களைப் பேசும் தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை வசப்படுத்தும் சிவபெருமான், நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வர் ஆவார். அவரை வழிபடுவீர்களாக.
3791 | காண்டகு
மலைமகள் கதிர்நிலா பூண்டநா கம்புறங் காடரங் ஈண்டுமா மாடங்கண் மாளிகை தீண்டிவந் துலவிய திருநெல்வேலி |
3.092.4 |
நெருங்கிய பெரிய மாடங்களிலும், மாளிகைகளிலும், மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திர மண்டலத்தைத் தொட்டு அசைகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான், தரிசிப்பதற்கு இனிய மலை மகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால் புன்முறுவல் செய்து அருகிலிருந்தருளவும், பாம்பை ஆபரணமாக அணிந்து ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு நடனமாடுதலை விரும்புபவர். அவரை வழிபடுவீர்களாக.
3792 | ஏனைவெண்
கொம்பொடு மெழில்திகழ் கூனல்வெண் பிறைதவழ் சடையினர் ஆனினல் ஐந்துகந் தாடுவர் தேனில்வண் டமர்பொழிற் றிருநெல்வேலி |
3.092.5 |
தேன்பருக வண்டுகள் அமர்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் பன்றியின் கொம்புடன், அழகிய ஊமத்த மலரையும், இளம் பாம்பையும், வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும், அணிந்த சடைமுடி உடையவர். கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர். கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர். பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியத்தால் திருமுழுக்காட்டப்படுபவர். அரிய வேதங்களை அருளியவர்.
3793 | வெடிதரு
தலையினர் வேனல்வெள் பொடியணி மார்பினர் புலியத வடிவுடை மங்கையோர் பங்கினர் செடிபடு பொழிலணி திருநெல்வேலி |
3.092.6 |
புதர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான், மண்டையோட்டை மாலையாக உடையவர். சினமிகு வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். விரிந்த சடையுடையவர். திருவெண்ணீறு அணிந்த மார்பினர். புலித்தோலாடை அணிந்தவர். கோபம் பொங்கும் பாம்பை அணிந்தவர், அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளை மயங்கும்படி செய்தவர். அவரை வழிபடுவீர்களாக.
3794 | அக்குலா
மரையினர் திரையுலா தக்கனார் வேள்வியைச் சாடிய புக்கதோர் புரிவினர் வரிதரு திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி |
3.092.7 |
வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசைக்கின்ற சோலைகளையுடைய, எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிய திரு நெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வராகிய சிவபெருமான், சங்குமணிகளைக் கட்டிவிளங்கும் இடையினையுடையவர். அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய தலைவர். அவரை மதியாது தக்கன் செய்த யாகத்தை அழித்த திறமையையுடையவர். செவ்வொளி படரும் சடையினர். அவரை வழிபடுவீர்களாக.
3795 | முந்திமா
விலங்கலன் றெடுத்தவன் உந்திமா மலரடி யொருவிர கந்தமார் தருபொழின் மந்திகள் சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி |
3.092.8 |
நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற, பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமை மிகுந்த கயிலை மலையை அந்நாளில் பெயர்ந்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நகநுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.
3796 | பைங்கண்வா
ளரவணை யவனொடு தங்கணா வருளென வவரவர் சங்கநான் மறையவர் நிறைதர திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி |
3.092.9 |
பசுமையான, வாள்போன்ற ஒளிபொருந்திய கூரிய கண்களையுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமாலுடன், குளிர்ந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பிரமனும் முழுமுதற் பொருளான இறைவனைக் காணமுடியாமல், அழகிய கண்களையுடைய பெருமானே அருள்புரிக என்று அவரவர் தாம்தாம் அறிந்த முறையில் வணங்கும் வண்ணம் விளங்கும் சிவபெருமானே, அந்தணர்கள் ஒன்றுகூடி நால் வேதங்களைப் பாடவும், பெண்கள் நடனமாடவும், மாத விழாக்களும், நாள் விழாக்களும் நிறைந்துள்ள திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராவார். அவரை வழிபடுவீர்களாக.
3797 | துவருறு
விரிதுகி லாடையர் அவருறு சிறுசொலை யவமென கவருறு கொடிமல்கு மாளிகைச் திவருறு மதிதவழ் திருநெல்வேலி |
3.092.10 |
மருதந்துவரில் தோய்ந்த மஞ்சட் காவிஆடை அணியும் புத்தர்களும், வேடநெறி நில்லாத சமணர்களும் கூறுகின்ற புன்மொழிகளைப் பயனற்றன என்று நினையுங்கள். எம் தலைவராகிய சிவபெருமான், கண்டார் மனங்களைக் கவர்கின்ற, கொடி விளங்கும் மாளிகையின் நிலா முற்றத்தில் மயில்கள் நடமாட, அதனைக் காணத் தேவர்களும் வருகின்ற, சந்திரன் தவழ்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வம் ஆவார். அவரை வழிபடுங்கள்.
3798 | பெருந்தண்மா
மலர்மிசை யயனவ திருந்துமா மறையவர் திருநெல்வேலி பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் |
3.092.11 |
பெரிய, குளிர்ந்த, சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனைப் போன்றவர்களான தாம் விரும்பும் கல்வியினால் மனம் பண்பட்ட, சிறந்த வேதங்களை உணர்ந்த அந்தணர்களை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமானைப் போற்றி, பொருந்திய நீர் நிலைகள் நிரம்பிய சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாமாலைகளைப் பாடிப் பரவசத்துடன் ஆட, போக்க முடியாத வினைகளெல்லாம் அழிந்து போகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வேலி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருநெல்வேலி, திருநெல்வேலியில், சிவபெருமான், வீற்றிருந்தருளும், வழிபடுவீர்களாக, செல்வர், செல்வர்தாமே, உடையவர், அருட்செல்வரான, குளிர்ந்த, வண்ணம், நெருங்கிய, வீற்றிருந்தருளுகின்ற, சிறந்த, விளங்கும், புலித்தோலை, தாமரைப்பூவில், விழாக்களும், தன்மையுடைய, அணிந்த, கொல்லும், ஆடையாக, உடுத்தவர், அருட்செல்வராகிய, சோலைகளையுடைய, மறையவர், மார்பினர், கண்களையுடைய, வேதங்களை, அணிந்தவர், சோலைகள், மரங்கள், பசுமையான, அருட்செல்வர், சோலையில், போக்கும், திருமுறை, திருச்சிற்றம்பலம், செடிச்சியர், துலவிய, சூழ்ந்த, பாம்பை, சடையினர், முனிவர்களின், தாருகாவனத்து, பாம்பையும், அணிந்து, வண்டுகள்