முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.039.திருக்ஷேத்திரக்கோவை
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.039.திருக்ஷேத்திரக்கோவை

2.039.திருக்ஷேத்திரக்கோவை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர், வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி, மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித் தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
1884 | ஆரூர்தில்லை
யம்பலம் வல்லந்நல்லம் கூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி நீரூர்வய னின்றியூர் குன்றியூருங் பேரூர்நன் னீள்வய னெய்த்தானமும் |
2.039. 1 |
பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர் தில்லையம்பலம் முதலானதலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக் கொண்டிரு. உனக்குப் பெரும் பயன் விளையும்.
1885 | அண்ணாமலை
யீங்கோயு மத்திமுத்தா கண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம் பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான் எண்ணாயிர வும்பகலு |
2.039. 2 |
அண்ணாமலை ஈங்கோய்மலை முதலான தலங்களை விரும்பி இரவும் பகலும் எண்ணின் துன்பக்கடலை நீந்தற்குக் காரணமாய் அமையும்.
1886 | அட்டானமென்
றோதிய நாலிரண்டு எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங் மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன் சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா |
2.039. 3 |
இறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு விரும்புவாயாக.
1887 | அறப்பள்ளி
யகத்தியான் பள்ளிவெள்ளைப் உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி |
2.039. 4 |
நெஞ்சமே! கோயில் எனப் பொருள் தரும் பள்ளி என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பல விளையும்.
1888 | *
* * * * * * * * * ஆறைவட மாகற லம்பரையா றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர் சேறைதுலை புகலூ ரகலா திவைகாதலித் தானவன் சேர்பதியே. |
2.039. 5 |
சிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழையாறை மாகறல் முதலான தலங்களாகும். அவற்றைச் சென்று தொழுவீர்களாக.
1889 | மனவஞ்சர்மற்
றோடமுன் மாதராரு இனவஞ்சொ லிலாவிடை மாமருது கனமஞ்சின மால்விடை யான்விரும்புங் தனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின் |
2.039. 6 |
வஞ்சமனத்தவர் போயகல மதிகூர் மாதர்கள் வாழும் ஆலவாய் இடைமருது முதலான தலங்கள் நமக்குப் புகலி டமாவன எனநினைமின். அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும்.
1890 | மாட்டூர்மடப்
பாச்சி லாச்சிராம காட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங் கோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங் * * * * * * * * |
2.039. 7 |
மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம் முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள்.
1891 | *
* குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம் போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென் காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ |
2.039. 8 |
திருப்பரிதிநியமம், திருப்புறம்பயம் முதலான தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக.
1892 | நெற்குன்றமோத்
தூர்நிறை நீர்மருக நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த சொற்கென்றுந் தொலைவிலா தாழனுறையுங் |
2.039. 9 |
நெற்குன்றம், ஓத்தூர் முதலியதலங்களை எண்ணி மகிழ்வாயாக.
1893 | குத்தங்குடி
வேதி குடிபுனல்சூழ் அத்தங்குடி தண்டிரு வண்குடியு நித்தன்னிம லனுமை யோடுங்கூட புத்தர்புறங் கூறிய புன்சமணர் |
2.039. 10 |
குத்தங்குடி, வேதிகுடி முதலான குடிஎன முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பன என்று எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர்கூறும் பொய்மொழி களை விட்டு அத்தலங்களை நினைந்துய்மின்.
1894 |
அம்மானை யருந்தவ மாகிநின்ற கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக் இம்மாலையீ ரைந்து மிருநிலத்தி விம்மாவெரு வாவிரும்பும் மடியார் |
2.039.11 |
தலைவனும் அரிய தவவடிவாக விளங்கும் தேவர் முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து கொய்யத் தக்கனவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் செறிந்த கொச்சையம் பதிக்குத் தலைவனாகிய சிவஞான சம்பந்தன் பாடிய இப்பதிகப்பாமாலையை நிலவுலகில் இரவும் பகலும் நினைந்து விம்மியும் அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர், நிறைந்த நல்லூழ் உடையவராவர். மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்ஷேத்திரக்கோவை - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முதலான, உறையும், தலங்கள், குத்தங்குடி, சிவபிரான், இரவும், தலங்களை, பகலும், நெஞ்சமே, நினைந்து, மதிகூர், குன்றங், முடியும், விளையும், வாதவூர், வாரணாசி, மாட்டூர், திருச்சிற்றம்பலம், திருமுறை, குணவாயில், நெற்குன்றம், திருக்ஷேத்திரக்கோவை, உனக்குப், சொல்லிக், நற்குன்றம், அண்ணாமலை