முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.076.திரு இலம்பையங்கோட்டூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.076.திரு இலம்பையங்கோட்டூர்

1.076.திரு இலம்பையங்கோட்டூர்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சந்திரசேகரர்.
தேவியார் - கோடேந்துமுலையம்மை.
820 |
மலையினார்பருப்பதந்
துருத்திமாற்பேறு நிலையினானெனதுரை தனதுரையாக கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ |
1.076.1 |
கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந்தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறி வரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண்மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?
821 |
திருமலர்க்கொன்றையா
னின்றியூர்மேயான் நிருமலனெனதுரை தனதுரையாக கருமலர்க்கமழ்சுனை நீண்மலர்க்குவளை இருமலர்த்தண்பொய்கை யிலம்பையங்கோட்டூ |
1.076.2 |
அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன். திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள் புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்த கையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ?
822 |
பாலனாம்விருத்தனாம்
பசுபதிதானாம் காலனாமெனதுரை தனதுரையாகக் நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய ஏலநாறும்பொழி லிலம்பையங்கோட்டூ |
1.076.3 |
பால வடிவோடும், விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் பெறுபவன். முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். கையில் விளங்கும் எரியை ஏந்திய கடவுள். அத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும், ஏலமணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ?
823 |
உளங்கொள் வாருச்சியார்
கச்சியேகம்ப விளம்புவானெனதுரை தனதுரையாக குளம்புறக்கலைதுள மலைகளுஞ்சிலம்பக் இளம்பிறைதவழ்பொழிலிலம்பையங்கோட்டூ |
1.076.4 |
உள்ளத்தில் தியானிப்பவர்களின் முடிமீது விளங்குபவன் கச்சியேகம்பன். ஒற்றியூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் விளங்கும் தலைவன். என்னுடைய உரைகளாகத் தன்னுரைகளை வெளியிடுபவன். கங்கை வெள்ளத்தைத் தனது விரிந்த சடைமிசைத் தாங்கிய விமலன். அத்தகையோன். கலைமான்கள் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை அழுத்தித் துள்ளவும், மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிரொலிக்கவும், வளமையான கொடிகள் வளர்ந்த வில்வ மரங்கள் முழுதும் படியவும் அமைந்துள்ள, இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கவர்ந்து கொள்வது நீதியோ!
824 |
தேனுமாயமுதமாய்த்
தெய்வமுந்தானாய்த் வானுமாமெனதுரை தனதுரையாக கானமான்வெருவுறக் கருவிரலூகங் ஏனமானுழிதரு மிலம்பையங்கோட்டூ |
1.076.5 |
தேன், அமுது ஆகியன போல இனிப்பவனாய். தெய்வம் தானேயானவன். தீ, நீர், வாயு, வான், மண் ஆகிய ஐம்பூத வடிவினன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். உடலில் வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக் கொண்டு திரிபவன். மான்கள் அஞ்சும்படி கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு காட்டில் உகளும் பாறைகளையுடைய கடுமையான மலைச்சாரலில் பன்றிகளும் காட்டுப் பசுக்களும் திரியும் இலம்பையங்கோட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என் அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ?
825 |
மனமுலாமடியவர்க் கருள்புரிகின்ற தனமிலானெனதுரை தனதுரையாகத் புனமெலாமருவிக ளிருவிசேர்முத்தம் இனமெலாமடைகரை யிலம்பையங்கோட்டூ |
1.076.6 |
தங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்யும் அடியவர்க்கு அருள்புரிதற் பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும்பொருட்டுப் பலி ஏலாதவன். வீடு பேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லாதவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன். தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைத் தாங்கியுள்ள தலைவன். அத்தகையோன் தினைப்புனங்களில் பாய்ந்து வரும் அருவிகள் அரிந்த தினைத்தாள்களில் ஒதுங்கிய முத்து பொன் மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ?
826 |
நீருளான்றீயுளா னந்தரத்துள்ளா ஊருளானெனதுரை தனதுரையாக பாருளார்பாடலோ டாடலறாத ஏருளார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ |
1.076.7 |
நீர், தீ, ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும் ஊர்களை இடமாகக் கொண்டவன். தன்னுடைய உரைகளை என்னுடையனவாக வெளிப்படுத்தியவன். தனித்த ஒரு வெள்ளேற்றை உகந்து ஏறி வருபவன். அத்தகையோன், மண்ணக மக்களின் பாடல் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி செய்து பாடும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ?
827 |
வேருலாமாழ்கடல் வருதிரையிலங்கை ஆருலாமெனதுரை தனதுரையாக வாருலாநல்லன மாக்களுஞ்சார ஏருலாம்பொழிலணி யிலம்பையங்கோட்டூ |
1.076.8 |
நிலத்தின் வேர் வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்ட கைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலைவன். அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ?
828 |
கிளர்மழைதாங்கினா
னான்முகமுடையோன் உளமழையெனதுரை தனதுரையாக வளமழையெனக்கழை வளர்துளிசோர இளமழைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூ |
1.076.9 |
ஆயர்பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும், நான்முகனும், கீழே அகழ்ந்து சென்று அடியையும், மேலே பறந்து சென்று முடியையும் அளந்தறியமுடியாதவாறு அழலுருவாய் ஓங்கி நின்றவன். மனத்தால் அழைத்தற்குரியனவாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். அத்தகையோன், வளமான மழை போல, மூங்கிலில் தேங்கிய பனி நீர், காற்றால் பொழிவதும், மலைப் பாம்புகள் ஊர்வதும், அழகிய மணிகள் மாலை போல நிறைந்து தோன்றுவதும், மேகக் கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்ந்தான். இது முறையோ?
829 |
உரிஞ்சனகூறைக ளுடம்பினராகி பெருஞ்செல்வனெனதுரை தனதுரையாகப் கருஞ்சினைமுல்லைநன் பொன்னடைவேங்கை இருஞ்சுனைமல்கிய விலம்பையங்கோட்டூ |
1.076.10 |
ஆடைகளை உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களாகிய பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த் திரிபவன். பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன், பெரிதான அரும்புகளை உடைய முல்லையும், பொன் போன்று மலரும் வேங்கையும், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வண்டுகளும், தேனீக்களும் முரலும் பெரிய சுனைகளும், நிறைந்து காணப்படும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு, என் எழிலைக் கவர்தல் முறையோ?
830 |
கந்தனைமலிகனை கடலொலியோதங் நந்தியாருறைபதி நான்மறைநாவ எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் |
1.076.11 |
மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறை பதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்கு இனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீது பாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு இலம்பையங்கோட்டூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொண்டு, இலம்பையங்கோட்டூரைத், உரைகளை, இருப்பிடமாகக், முறையோ, தன்னுடைய, உரைகளாக, னெழில்கொள்வதியல்பே, எழிலைக், வெளிப்படுத்தியவன், அத்தகையோன், தனதுரையாக, தலைவன், ரிருக்கையாப்பேணியென், கவர்ந்து, லிலம்பையங்கோட்டூ, பொழில்கள், திரியும், கவர்தல், ரிருக்கையாப், விளங்கும், யிலம்பையங்கோட்டூ, இறைவன், அணிந்து, சூழ்ந்த, என்னுடைய, கொள்வது, மலர்கள், நிறைந்து, சூழ்ந்ததுமான, வண்டுகள், பூக்கும், விண்ணவரோடும், அவனைத், சென்று, பேணியென், தவழும், பொருந்திய, என்னும், தரிசிக்க, திரிபவன், ஞானசம்பந்தன், உறைபவன், இடமாகக், தலங்களில், எழுந்தருளியிருப்பவன், வெளிப்படுத்தி, கொள்வதியல்பே, தேறியநிமலன், திருமுறை, திருச்சிற்றம்பலம், நீறணிந்தேறுகந், திருநீறு, ஆனேற்றில், அழகைக், வடிவோடும், கையில், கமழும், இலம்பையங்கோட்டூர், மகிழ்வோடு, நிமலன், நிறைந்த, ஏந்திய