முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.107.திருக்கொடிமாடச்செங்குன்றூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.107.திருக்கொடிமாடச்செங்குன்றூர்

1.107.திருக்கொடிமாடச்செங்குன்றூர்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்கு நாட்டிலுள்ளது. திருச்செங்கோடு என வழங்குகின்றது.
சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர்.
தேவியார் - அர்த்தநாரீசுவரி.
1152 |
வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் பந்தண வும்விரலா கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் அந்தண னைத்தொழுவார் |
1.107.1 |
விரிக்கப் பெற்ற பூணநூல் திகழும் திருமார்பினனாய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.
1153 |
அலைமலி தண்புனலோ டரவஞ் மலைமகள் கூறுடையான் குலைமலி தண்பாழில்சூழ் கொடிமாடச் தலைமக னைத்தொழுவார் |
1.107.2 |
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு பாம்பினையும், சடையின்கண் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம் தவிர்வர்.
1154 |
பாலன நீறுபுனை திகழ்மார்பிற் ஏல மலர்க்குழலா கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் நீலநன் மாமிடற்றான் |
1.107.3 |
பால் போன்று வெள்ளிய திருநீற்றைப் புனைந்து விளங்கிய மார்பினோடு பல்வகை வளையல்களையும் பாங்குறப் புனைந்த கையினளாய், மணம் கமழும் நறுமலர்களைச் சூடிய கூந்தலினளாகிய உமையம்மை ஒரு பாகமாக அமைந்த கோலத்தோடு அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய நீல நன்மாமிடற்றானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே நீதியாகும்.
1155 |
வாருறு கொங்கைநல்ல மடவாள் காருறு கொன்றையொடுங் சீருறு மந்தணர்வாழ் கொடிமாடச் நீருறு செஞ்சடையான் |
1.107.4 |
கச்சணிந்த தனங்களை உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின்கண் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு சிறப்புப் பொருந்திய அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய கங்கையணிந்த செஞ்சடையனாய் விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல் நீதியாகும்.
1156 |
பொன்றிக ழாமையொடு புரிநூல் பன்றியின் கொம்பணிந்து குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் மின்றிகழ் செஞ்சடையான் |
1.107.5 |
திருமகள் விளங்கும் திருமாலாகிய ஆமையினது ஓட்டினோடு முப்புரிநூல் திகழும் மார்பின்கண் நல்ல பன்றியின் கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே மெய்ப் பொருளாகும்.
1157 |
ஓங்கிய மூவிலைநற் சூல தாங்கிய கங்கையொடு கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் பாங்கன தாள்தொழுவார் |
1.107.6 |
மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின்கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும்.
1158 |
நீடலர் கொன்றையொடு
நிமிர்புன் வாட லுடைதலையிற் கோடல் வளம்புறவிற் கொடிமாடச் சேடன தாள்தொழுவார் |
1.107.7 |
கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்க, வெண்மையான புலால் நீங்கிய தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய், வெண்காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய பெருமை உடையோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந்தொழியும்.
1159 |
மத்தநன் மாமலரும் மதியும்வளர் தொத்தலர் செஞ்சடைமேல் கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் தத்துவ னைத்தொழுவார் |
1.107.8 |
செஞ்சடைமீது நல்ல ஊமத்த மலரையும் இளமதியையும் கொத்தாக அலரும் கொன்றை மலருடன் ஒருசேரநெருங்கச் சூடிப் பூங்கொத்துக்கள் அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றங்கள் இலராவர்.
1160 |
செம்பொனின் மேனியனாம்
பிரமன்றிரு அம்பவ ளத்திரள்போ கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் நம்பன தாடொழுவார் |
1.107.9 |
சிவந்த பொன்போன்ற மேனியினன் ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு பவளத் திரள் போல ஒளி வடிவினனாய் ஓங்கிநின்ற மூல காரணனும், கொம்புகளாகக் கிளைத்து நெருங்கிய மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் நாசமாகும்.
1161 |
போதியர் பிண்டியரென்
றிவர்கள் ஓதிய கட்டுரைகேட் கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் வேதிய னைத்தொழநும் |
1.107.10 |
போதி மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக்காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள் யாவும் அழியும்.
1162 |
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் தலைமக னாகிநின்ற கொலைமலி மூவிலையான் கொடிமாடச் நலமலி பாடல்வல்லார் |
1.107.11 |
அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும் தலைமகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், கொல்லும் தொழிலில் வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடிய, நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 105 | 106 | 107 | 108 | 109 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கொடிமாடச்செங்குன்றூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொடிமாடச், செங்குன்றூரில், செங்குன்றூர், எழுந்தருளிய, சூழ்ந்த, விளங்கும், பொருந்திய, வினைகள், அணிந்து, குளிர்ந்த, உமையம்மை, பொழில்கள், கழலணிந்த, திருவடிகளைத், தொழுபவர்களின், வினையாய, கொன்றை, திருவடிகளை, தொழுவார், கழலேத்தல், னைத்தொழுவார், திகழும், பாகமாகக், பொழில், நிறைந்த, வும்பொழில்சூழ், மமர்ந்தருளிக், தாள்தொழுவார், திருச்சிற்றம்பலம், ளொருபாக, திருமுறை, கையில், வடிவான, கொத்தாக, வினையான, மரத்தை, வழிபடும், நாசமாகும், அலரும், சிவந்த, சூழப்பட்ட, தண்பொழில்சூழ், வானில், செஞ்சடையான், பூங்கொத்துக்கள், சிவபிரானைத், திருக்கொடிமாடச்செங்குன்றூர், சடையின்கண், அலைகள், தடுமாற், றறுப்பாரே, நீதியே, போன்று, அலைமலி, சிவபிரானின், திகழ்மார்பி, நீதியாகும், பாகமாக, ஏத்துதலே, பன்றியின்