முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.106.திருஊறல்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.106.திருஊறல்

1.106.திருஊறல்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
சுவாமிபெயர் - உமாபதீசுவரர்.
தேவியார் - உமையம்மை.
1143 |
மாறி லவுணரரணம் மவைமாயவோர் நீறெழ வெய்தவெங்கள் தேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல் ஊற லமர்ந்தபிரா |
1.106.1 |
தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.
1144 |
மத்த மதக்கரியை மலையான்மக மெத்த வுரித்தவெங்கள் தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் ஒத்தல ருங்கழனித் |
1.106.2 |
மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதெனவினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.
1145 |
ஏன மருப்பினொடு மெழிலாமையும் கானமர் மான்மறிக்கைக் வான மதிதடவும் வளர்சோலைகள் ஊன மறுத்தபிரான் |
1.106.3 |
பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
1146 |
நெய்யணி மூவிலைவே னிறைவெண்மழு கையணி கொள்கையினான் மையணி கண்மடவார் பலர்வந் உய்யும் வகைபுரிந்தான் |
1.106.4 |
நெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள்புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.
1147 |
எண்டிசை யோர்மகிழ
வெழின்மாலையும் சண்டி தொழவளித்தான் கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள் உண்டபி ரானமருந் |
1.106.5 |
எட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
இப்பதிகத்தின் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.6 |
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
1148 |
கறுத்த மனத்தினொடுங்
கடுங்காலன்வந் மறுக்குறு மாணிக்கருள செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு ஒறுத்தருள் செய்தபிரான் |
1.106.8 |
சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவர வந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
1149 |
நீரின் மிசைத்துயின்றோ
னிறைநான் தேரும் வகை நிமிர்ந்தான் பாரின் மிசையடியார் பலர்வந் ஊரு மரவசைத்தான் |
1.106.9 |
கடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.
1150 |
பொன்னியல் சீவரத்தார்
புளித்தட்டையர் என்னு மிவர்க்கருளா தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் உன்ன வினைகெடுப்பான் |
1.106.10 |
பொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகியஅறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.
1151 |
கோட லிரும்புறவிற் கொடிமாடக் ஓடு புனல்சடைமேற் நாட லரும்புகழான் மிகுஞானசம் பாடல்கள் பத்தும்வல்லார் |
1.106.11 |
செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற்கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 104 | 105 | 106 | 107 | 108 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஊறல் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவூறலாகும், யுள்குதுமே, வினவில், நாள்தோறும், நினைவோமாக, சிவபிரான், றிருவூறலை, முற்காலத்தில், கடவுள், விளங்கிய, எழுந்தருளிய, சூழ்ந்து, மிடம்வினவில், பலர்வந், உய்யும், இப்பதிகத்தின், கலங்கி, நாமும், பாடல்கள், போயிற்று, சிதைந்து, உறையும், செய்யுள், விரும்பி, பொழில்கள், எங்கள், நிறைந்த, சூழ்ந்த, னிடம்வினவில், திருமுறை, திருச்சிற்றம்பலம், பொழில்களும், விரும்புமிடம், விரும்பும், திருஊறல், சிவபெருமான், பொருந்திய, திருவூறலை, அத்தலத்தை