முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.010.திரு அண்ணாமலை
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.010.திரு அண்ணாமலை

1.010.திரு அண்ணாமலை
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்.
தேவியார் - உண்ணாமுலையம்மை.
97 |
உண்ணாமுலை யுமையாளொடும் பெண்ணாகிய பெருமான்மலை மண்ணார்ந்தன வருவித்திரண் அண்ணாமலை தொழுவார்வினை |
1.010.1 |
உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.
98 |
தேமாங்கனி கடுவன்கொள தூமாமழை துறுகன்மிசை ஆமாம்பிணை யணையும்பொழி பூமாங்கழல் புனைசேவடி |
1.010.2 |
கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக் கருதி மரநிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.
99 |
பீலிம்மயில் பெடையோடுறை சூலிம்மணி தரைமேனிறை ஆலிம்மழை தவழும்பொழி காலன்வலி தொலைசேவடி |
1.010.3 |
தோகைகளோடு கூடிய ஆண்மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல்கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த்துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ். (தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்)
100 |
உதிரும்மயி ரிடுவெண்டலை எதிரும்பலி யுணலாகவு முதிருஞ்சடை யிளவெண்பிறை அதிருங்கழ லடிகட்கிடம் |
1.010.4 |
உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித் திருவடிகளில் அதிரும் வீரக் கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.
101 |
மரவஞ்சிலை தரளம்மிகு அரவஞ்செய முரவம்படும் உரவஞ்சடை யுலவும்புன குரவங்கமழ் நறுமென்குழல் |
1.010.5 |
வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?
102 |
பெருகும்புன லண்ணாமலை பருகுந்தனை துணிவார்பொடி கருகும்மிட றுடையார்கமழ் உருகும்மன முடையார்தமக் |
1.010.6 |
பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத் தோன்றிய நஞ்சை உட்கொள்ளும் அளவிற்குத் துணிபுடையவரும், அந் நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.
103 |
கரிகாலன குடர்கொள்வன நரியாடிய நகுவெண்டலை எரியாடிய விறைவர்க்கிட அரியாடிய கண்ணாளொடும் |
1.010.7 |
கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசைபாடச் செவ்வரி பரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.
104 |
ஒளிறூபுலி யதளாடையன் பிளிறூகுரன் மதவாரண வெளிறூபட விளையாடிய அளறூபட வடர்த்தானிடம் |
1.010.8 |
ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.
105 |
விளவார்கனி படநூறிய கிளர்தாமரை மலர்மேலுறை அளவாவண மழலாகிய தளராமுலை முறுவல்லுமை |
1.010.9 |
விள மரத்தின் கனியை உகுப்பது போல அம்மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும்குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.
106 |
வேர்வந்துற மாசூர்தர மார்பம்புதை மலிசீவர ஆரம்பர்த முரைகொள்ளன்மின் கூர்வெண்மழுப் படையானல்ல |
1.010.10 |
உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலானகுணம்.
107 |
வெம்புந்திய கதிரோனொளி அம்புந்திமூ வெயிலெய்தவன் கொம்புந்துவ குயிலாலுவ சம்பந்தன தமிழ்வல்லவர் |
1.010.11 |
வெம்மை மிக்க கதிரவன் ஒளிபுகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரு அண்ணாமலை - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அண்ணாமலை, யண்ணல், தோன்றிய, திருவடிகளை, லண்ணாமலை, தொழுவார், திருவண்ணாமலை, வெண்மையான, திருவண்ணாமலையில், திருமுறை, கமழும், சிவபிரானின், சிவபிரான், சிவபெருமானது, தலைவனும், வாரும், அழித்த, செய்யும், கொண்டவனும், விளையாடிய, விரிந்த, உண்ணாமுலை, மேகங்கள், ஒலிக்கும், அருவிகள், மணிகள், பொழில்களை, இறைவனின், என்னும், உறையும், திருச்சிற்றம்பலம், சிவந்த, விளங்கும்