ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
2.2.2 இரண்டாவது -- பகுபதப்பெயரியல்
83. |
பகுபத மொன்றாய்ப் பலவொருங் குணர்த்திற் பகாப்பத மவற்றுட் பகுதி யென்ப. | 84. |
அன்ஆன் அள்ஆள் அர்ஆர் துஐ அபிற வுமைம்பாற் பெயர்ப்பகு பதவி குதியே. | 85. |
ந ஞ விடைப் பகுபத நண்ணலு நெறியே. | 86. |
வடநடைப் பகுபதம் வரமொழி முதற்கண் இ ஏ யென ஐ ஔவும் உ ஒ வென ஔவும் அவ்வென ஆவுமாம் ஐயிறி னீறுபோய் எயனீட் டீன்ற வெச்சமா முளபிற. | 87. |
எதிர்மறைப் பகுபதத் தியைந்த மொழிமுதல் லொற்றெனி லவ்வு முயிரெனி லன்னு மிருமைக் காநிரு வெனவட நடையே. |
இரண்டாவது - பகுபதப்பெயரியல் - முற்றிற்று
2.2.3 மூன்றாவது - தொகைநிலைத்தொடர்மொழிப் பெயரியல்
88. |
தொகைநிலை யென்ப தொடரும் பெயரொடு வினைபெயர் புணர்புளி வேற்றுமை முதலொழித் தொருமொழி போற்பல வொன்றிய நெறியே. | 89. |
தொகைநிலை வகைப்படின் றொகும்வேற் றுமைவினை யுவமை பண்பும் மையோ டன்மொழி யாறே. | 90. |
தொகைநிலை விரித்துச் சொல்லுங் காலெழு வகைநிலை யளவும் வகுக்கப் படுமே. | 91. |
தொகுபெயர் வேற்றுமைத் தொடர்பெய ரன்ன வியற்றிரி பழிவாக்க மியைந் தாந்தொகையே. | 92. |
ஐயிறுங் குணப்பெய ரஃகியீ றொழித லீறுபோ யுகர மிடையிலி யாத லாதிநீ டலடிய கரமை யாத றன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரித லினமிக லினையவும் பண்பிற் கியல்பே. | 93. |
"அடைசினை முதன்முறை யடைதலு மீரடை முதலோ டாதலும் வழக்கிய லீரடை சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே." | 94. |
ஓரொரு வீரிரு மும் மூ நாலை யைம் மாறறு வேழெழு வெண்ணென வியிருட வியைமுறைக் காரு மெண்ணின் றொகையே. | 95. |
"ஒன்றுமு தலீரைந் தாயிரங் கோடி யெண்ணிறை யளவும் பிறவரிற் பத்தி னீற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்று மேற்ப தேற்கு மொன்பது மினைத்தே." | 96. |
ஒன்று முதலெட் டளவூர்ந் தபத்தொற் றொழிதலு மாய்த முறழ்தலு மாம்பல வொன்றுட னானா மொன்பது மிற்றே. | 97. |
'ஒன்ப தொழித்தவெண் ணொன்பது மிரட்டின்' முன்னது குறுகிமற் றோட 'வுயிர்வரின் வவ்வு மெய்வரின் வந்தது மிகனெறி.' | 98. |
அளவின் றொகையா யளவொடு தொக்கியை கலங்கலனாகி யேயு மிகுமே யுரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட மருவும் டகர முரியின் வழியே யகர வுயிர்மெய்யா மேற்பன வரினே. | 99. |
"திசையொடு திசையும் பிறவுஞ் சேரி னிலையீற் றுயிர்மெய் கவ்வொடு நீங்கலும் றஃகா னலவாய்த் திரிதலு மாம்பிற." |
மூன்றாவது - தொகைநிலை தொடர்மொழிப் பெயரியன் - முற்றிற்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 18 | 19 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம், Thonnool Vilakkam, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்