புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
தொழில் வளர்ச்சி:
புதுக்கோட்டை மாவட்டத்தைத் தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயினும் கைத் தொழில்களில் இம்மாவட்டம் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. திருவாப்பூர், அறந்தாங்கி, பரம்பூர், இலுப்பூர் ஆகிய இடங்களில் பட்டு, பருத்தி நெசவுத் தொழில் செயல்பட்டு வருகிறது. சோனியாப்பட்டியில் விலை மலிவான புடவைகளைத் தயாரிக்கிறார்கள்.
அன்னவாசல், இலுப்பூர், மாங்குடி, சத்தியமங்கலம், திருவேங்கை வாசல், கூத்தாடி வயல், மலையூர், நாரங்கிப்பட்டி, கள்ளம்பட்டி, சும்பூதி, பூவரசக்குடி, கோசலக்குடி முதலிய ஊர்களில் மண் சிலைகளைச் செய்து விற்கிறார்கள். நெடுஞ்சாலைக்கு அருகிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், கிராம தேவதைக்கான கோயில்கள் முன்பும் வைக்கப்படும் பெரிய பெரிய குதிரை, யானை, நாய் உருவங்களை மண்ணால் செய்து சுட்டு வண்ணங்கள் பூசி விற்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பனை மரம் மிகுதியாதலால், இங்கு பனை ஓலையைக் கொண்டு பாய் முடைதல், தடுக்கு முடைதல், பெட்டிகள், கூடைகள், விளையாட்டு சாமான்கள் செய்தல் ஆகிய குடிசைத் தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இத்தொழில் கற்க அரசு தரப்பில் ஒரு தொழில் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஓலைச் சீவ ஒரு இயந்திரம் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. செங்கோட்டை, சென்னை முதலிய இடங்களிலிருந்து பிரம்பு இறக்குமதி செய்யப்பட்டு, அதைக் கொண்டு நாற்காலிகள், மேஜை, டீப்பாய் போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பிரம்புப் பொருட்களைத் தயாரிக்க புதுக்கோட்டையில் ஒரு பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
வரப்போரங்களில் விளைந்திருக்கும் கத்தாழையை தண்ணீரில் ஊறவைத்து, அடித்துத் துவைத்து, நாரை மட்டும் பிரித்தெடுத்து கயிறு உற்பத்தி செய்கின்றனர். மற்றும் ஆற்றோரங்களில் விளைந்திருக்கும் கோலைப் புல்லைக் கொண்டு பாய் முடைவதும் தொழிலாக நடைபெறுகிறது. இவ்விதம் பாய் முடைதல் அமனாப்பட்டி, கந்தர்வக் கோட்டை, முள்ளங்குறிச்சி, பல்லவராயன் பட்டி, தீத்தான் விடுதி முதலிய இடங்களில் நடைபெறுகின்றன. கோரைப் பாய்கள், ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புக்குத் தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தொழிலில் நவீன முறைகளைப் புகுத்தினால் மேலும் இது முன்னேறும்.
ஆத்திப்பள்ளத்தில் மூங்கில் கூடைகள், மூங்கில் தட்டிகள் செய்யப்படுகின்றன. திருக்கோகர்ணத்தில் கருங்கற்களில் சிற்பங்களை, குறிப்பாக கடவுளர் உருவச் சிற்பங்களை வடிக்கும் தொழில் நடைபெறுகிறது. சிலத்தூர், ராயவரம் முதலிய ஊர்களில் மரங்களைக் கொண்டு கடவுளர் வாகனங்கள் செய்யப்படுகின்றன. எருது, சிங்கம், மாடு, குதிரை முதலிய உருவச் சிலைகள் ஒருவகை பொதிய மரத்தைக் கொண்டு படைக்கப்படுகின்றன.
தேர்ந்த வர்ணப் பூச்சைக் கொடுத்தபின் கோயில்களில் வைப்பதற்காகவும், வீடுகளில் வைப்பதற்காகவும் விற்பனை செய்யப்படுகின்றன. 1960 ஏப்ரல் முதல் தேதியில் இம்மாவட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழில் வளர்ச்சி இணையம் தோற்றுவிக் கப்பட்டது. புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி முதலிய இடங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்க்கண்டத் தொழில்கள் அதன் கட்டுப்பாட்டில் உள்ளன.
தீப்பெட்டித் தொழிற்சாலைகள் - 2
பதநீர், பதநீர் பொருள் உற்பத்தி - 15
கைக்குத்தல் அரிசி ஆலை - 1
மட்பாண்ட தொழில் நிலையங்கள் - 2
தச்சு, கருமாரநிலையம் - 1
இன்னும் பல கிராமக் கைத்தொழில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. அதனால் தொழில்துறையில் பின்தங்கியுள்ள இம்மாவட்டம் மேலும் பல தொழில் வாய்ப்புகளைப் பெறும். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முக்கியத் தொழிற்சாலைகள்: சிப்காட் காம்ப்ளக்ஸ், புதுக்கோட்டை; ஸ்பெக்சுரல் பேப்ரிக்கேஷன்ஸ், நல்லூர்; பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ், நல்லூர்; மாத்தூர் இண்டஸ்ட்ரியல் காம்ளக்ஸ், சால்வன்ட் எக்ஸ்ட்ராக்ஷன் யூனிட், புனக்குளம்; கெமிக்கல் யூனிட் மற்றும் டெக்ஸ்டைல் மில், அறந்தாங்கி; டெக்ஸ்டைல் மில், நமனசமுத்திரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் மற்றும் வணிகத்துறையில் பதிவு பெற்ற தொழில் நிலையங்கள் பின்வருமாறு:
மரப்பட்டறைகள் - 77
அச்சகங்கள் - 10
இரும்புக் குழாய் பொருட்கள் - 9
சோப்பு தயாரித்தல் - 15
மிட்டாய் செய்தல் - 4
மெழுகுப் பொருட்கள் - 12
விவசாயக் கருவிகள் - 90
தீப்பெட்டி -7
சிமெண்ட் பைப்புகள், மொசைக் கற்கள் - 22
வீட்டுப் பொருட்கள், (பித்தளை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அலுமினியப் பாத்திரங்கள்) - 33
கற்கள் பட்டைத் தீட்டுதல் - 9
டயர் ரீடெரேடிங் - 5
பாக்கு, புகையிலை - 5
பஸ் பாடி கட்டுதல் - 22
பேப்பர் அட்டை செய்தல் - 2
கதவுத் தாழ்ப்பாள், குதிரை, மாடு லாடம் செய்தல் - 6
துணிப் பொருட்கள் - 4
இரும்புப் பெட்டிகள் - 3
பிளாஸ்டிக் பொருட்கள் - 5
மருந்து உற்பத்திப் பொருட்கள் - 4
கயிறு உற்பத்தி - 1
சர்க்கரை தயாரித்தல் - 1
அரிசி ஆலை - 1
சேமியா தயாரித்தல் - 1
ஐஸ் தயாரிப்பு - 2
கால்சியம் குளூகோனட் - 1
இவை தவிர பதிவுப் பெறாத பல தொழில் நிலையங்களும் உள்ளன. மொத்தம் 351 தொழிற்சாலைகளில் புதுக்கோட்டையில் 122 தொழிற்சாலைகளும், அறந்தாங்கியில் 138 தொழிற்சாலைகளும், திருமயத்தில் 37 தொழிற்சாலைகளும், குளத்தூரில் 47 தொழிற்சாலைகளும், ஆலங்குடியில் 7 தொழிற்சாலைகளும் உள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொழில், புதுக்கோட்டை, பொருட்கள், முதலிய, கொண்டு, தொழிற்சாலைகளும், தமிழக, செய்தல், மாவட்டங்கள், tamilnadu, நிலையங்கள், தமிழ்நாட்டுத், பாய், முடைதல், உற்பத்தி, வருகிறது, செய்யப்படுகின்றன, குதிரை, செயல்பட்டு, தயாரித்தல், தகவல்கள், இடங்களில், அறந்தாங்கி, மாடு, pudukkottai, கடவுளர், மூங்கில், | , சிற்பங்களை, வைப்பதற்காகவும், உருவச், பதநீர், பிளாஸ்டிக், யூனிட், டெக்ஸ்டைல், நல்லூர், மேலும், தொழிற்சாலைகள், அரிசி, மில், கற்கள், தயாரிக்கப்பட்டு, ஊர்களில், செய்து, விற்கிறார்கள், பெரிய, ஆகிய, இலுப்பூர், வளர்ச்சி, அரசு, இம்மாவட்டம், மாவட்டத்தில், districts, அனுப்பப்படுகின்றன, புதுக்கோட்டையில், விளைந்திருக்கும், கயிறு, information, நிலையம், பெட்டிகள், கூடைகள், தொழில்கள், நடைபெறுகிறது