புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | புதுக்கோட்டை |
பரப்பு : | 4,644 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,618,345 (2011) |
எழுத்தறிவு : | 1,110,545 (77.19 %) |
ஆண்கள் : | 803,188 |
பெண்கள் : | 815,157 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 348 |
வரலாறு:
புதுக்கோட்டை என்பது புதியக் கோட்டை எனப் பொருள்படும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டைமான் ரகுநாதா என்பவரால் ஒரு புதிய கோட்டை கட்டப்பட்டு, புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் பரப்பளவில் சிறிது என்றாலும், வரலாறு, சிற்பம், ஓவியம், ஏனைய கலைகள் மற்றும் கனிம வளம் போன்ற சிறப்புக்களால் பெருமைப் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது. இம்மாவட்டம் பல்லவர், பாண்டியவர், ஹேர், சோபூர், முத்தரையர், ஹொய்சளர், முஸ்லீம்கள், விஜயநகர அரசு, நாயக்கர்கள்,மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் படையெடுக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, அவர்களின் கலை கலாச்சாரங்களால் தாக்கம் பெற்றது. சுதந்திரத்திற்கு முன்பு தொண்டைமான்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1974 ஜனவரி 1ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொது விவரங்கள்:
எல்லைகள்:
கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தஞ்சை மாவட்டமும்; மேற்கிலும் வடக்கிலும் திருச்சி மாவட்டமும்; தெற்கில் சிவகங்கை மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எல்லைகளாக உள்ளன. கடற்கரை நீளம் 36 கி.மீ.
பருவநிலை:
புதுக்கோட்டை மாவட்டம் வடகிழக்கு பருவ மழையால் நல்ல மழை பெறுகின்றது. சராசரி மழையளவு (ஆண்டுக்கு) 1395.1 மி.மீ.
வருவாய் நிர்வாகம்:
கோட்டங்கள்-2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி) வட்டங்கள்-7 (கந்தர்வக் கோட்டை, குளத்தூர், ஆலங்குடி, திருமயம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில்).
உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சிகள்-2 (புதுக்கோட்டை, அறந்தாங்கி) ஊராட்சி ஒன்றியங்கள்-13 (புதுக்கோட்டை, அன்னவாசல், திருமயம், விராலிமலை, குன்றாண்டார் கோவில், பொன்னமராவதி, அரிமழம், அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, மணல்மேல்குடி, திருவரங்குளம், ஆவுடையார் கோவில்); பேரூராட்சிகள்-8; கிராமங்கள்-757.
பாராளுமன்ற தொகுதி
இம்மாவட்டத்திலுள்ள பாராளுமன்றத் தொகுதி-1 (புதுக்கோட்டை)
கல்வி:
பள்ளிகள்: துவக்கநிலை-1,103; நடுநிலை-182; உயர்நிலை-81; மேனிலை-38. கல்லூரிகள்-9; மாட்சிமை தாங்கிய மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை; அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை; ஸ்ரீகணேசா செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி; ஸ்ரீமூகாம்பிகை பொறியியல் கல்லூரி, கீரனுர்; அரசினர் பாலிடெக்னிக், அறந்தாங்கி; சீனிவாசா பாலிடெக்னிக், கீரனுர்; ஜெ.ஜெ. கலைக்கல்லூரி, புதுக்கோட்டை; ராயவரம் சுப்பிரமணியம் பாலிடெக்னிக், வெங்கடேஸ்வர பாலிடெக்னிக் ஆகிய கல்வி நிறுவனங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.
இவை தவிர, இலங்கை, பர்மா முதலிய இடங்களிலிருந்து குடிபெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி பெறுவததற்காக மாட்டூர் பகுதியில் அகதிகளுக்கான உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 18 வயதிற்கு மேல் 23 வயதிற்கு உட்பட்ட இளங்குற்றவாளிகள் கல்வி பெற ஒரு அரசுப் பள்ளி புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புதுக்கோட்டை, அறந்தாங்கி, கல்வி, tamilnadu, பாலிடெக்னிக், தமிழக, மாவட்டங்கள், கல்லூரி, கோட்டை, கோவில், மாவட்டமும், தமிழ்நாட்டுத், தகவல்கள், districts, கலைக்கல்லூரி, அரசினர், கீரனுர், பள்ளி, | , வயதிற்கு, வருகிறது, இயங்கி, pudukkottai, நிறுவனங்கள், தஞ்சை, திருச்சி, இம்மாவட்டம், எனப், மாவட்டம், மக்கள், வரலாறு, ஆவுடையார், திருமயம், information, தொகுதி