புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
திருக்கட்டளை:
புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் ஆலங்குடி வட்டத்தில் உள்ளது. கி.மு. 874 ஆம் ஆண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் இங்கு கட்டப்பட்ட சிவாலயம் சோழர் காலச் சிறப்புடன் திகழ்கிறது. பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வாலயச் சுற்றுச் சுவர்களில் காணப்படுகின்றன.
சித்தன்னவாசல்:
இது ஒரு சுற்றுலாத்தலம். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தன்ன வாசல் குகைக் கோயில்கள் உலகப் புகழ்பெற்றவை. சித்தன்னவாசல் பெரியபுராணம், தேவாரப் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் அண்ணல்வாயில் என்று குறிக்கப்படுகிறது. அண்ணல் வாயில் என்பது அன்னவாசல் என்று மாறி வழங்கப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் பல்லவர் காலச் சிற்பக்கலையைப் பின்பற்றியவை. பாண்டியர் காலத்திய 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான சுதை ஓவியங்கள் இக்கோயில்களில் அழகுற அமைந்துள்ளன.
சித்தன்னவாசல் |
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை |
பொற்பனைக் கோட்டை:
பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுகிறது. புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கோட்டை 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சுமார் 2000 போர் வீரர்கள் தங்க வசதியானது.
பொன்பட்டி:
இவ்வூர் அறந்தாங்கி வட்டத்தை சேர்ந்தது. இக்கிராமத்தின் மேற்கிலமைந்த கரூர் எனும் ஊரில், தியான நிலையில் அமர்ந்தவாறு 2 1/2 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை காணப்படுகிறது. இதிலிருந்து சோழர் ஆட்சியில் புத்தமதம் இப்பகுதியில் பரவியிருந்தது தெளிவாகிறது. சோழ அரசன் வீரராஜேந்திரன் வேண்டுகோளுக் கிணங்க, பொன் பட்டியை ஆண்ட புத்தமித்திரனால் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் என்னும் நூல் இயற்றப்பட்டது. வீரசோழியம் சிறந்த தமிழ் இலக்கண நூலாகும். கலித்துறையால் ஆக்கப்பெற்ற இந்நூல் சந்தி, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்னும் ஐவகையாலும் சிறப்புற்றது. புத்தமித்திரன் பிறந்த ஊரும் இதுவேயாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புதுக்கோட்டை, கோயிலும், சித்தன்னவாசல், தொலைவில், கோட்டை, கட்டப்பட்ட, தமிழக, உள்ளது, மாவட்டங்கள், tamilnadu, நூற்றாண்டைச், கோயில்கள், அரண்மனை, ஆலயமும், ஆலயம், ஓவியங்கள், வழங்கப்படுகிறது, புதுக்கோட்டைக்கு, தகவல்கள், இங்கு, சோழர், தமிழ்நாட்டுத், ஸ்வாமி, pudukkottai, வைணவ, districts, திருவாப்பூர், பொன், என்னும், | , வீரசோழியம், நூற்றாண்டில், இவ்வூர், பொற்பனைக், கோட்டைக்கு, வட்டத்தில், இங்குள்ள, மாறி, குகைக், காலச், சுதை, அமைந்துள்ளன, information, காணப்படுகின்றன, தென்மேற்கில், ஆலயங்கள், சிறப்பு, பெரிய