புதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்
வேளாண்மை:
புதுக்கோட்டை மாவட்டத்தை பூகோள அடிப்படையில் பாறைகள் நிறைந்த பகுதி, சமவெளிப் பிரதேசம் என இருப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பாறைப் பகுதிகள் விவசாயத்திற்கு இலாயக்கற்றவை. சமவெளிப் பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாய் விளங்குகிறது. விவசாயத்திற்கான நீர்ப்பாசனம் ஆறுகள், அணைக்கட்டுகள், ஏரிகள், குளங்களிலிருந்து பெறப்படுகிறது. வெள்ளாறு, பாம்பாறு, அக்னி ஆறு, அம்புலியாறு, கோரையாறு, குண்டாறு, கோவலனாறு, நரசிங்க காவேரி ஆகிய ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன. குடுமியாமலைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள அணையால் விசலூர், வயலோகம், பெருமானாடு, கவிநாடு ஏரிகள் நீர் பெறுகின்றன. சேந்தமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள அணையாலும் கவிநாடு ஏரி நீர் பெறுகிறது. ஹோல்ட்ஸ்வர்த் அணைக்கட்டு வளநாடு ஏரிக்கு நீர் வழங்குகிறது.
விவசாயத்திற்குப் பயன்படும் குளங்கள் இம்மாவட்டத்தில் நிறைந்து காணப்படுகின்றன. குளத்தூர் வட்டத்தில் 1968 குளங்களும், திருமயம் வட்டத்தில் 1595 குளங்களும், புதுக்கோட்டை வட்டத்தில் 533 குளங்களும் அறந்தாங்கி வட்டத்தில் 531 குளங்களும் விவசாயச் செழிப்புக்கு உதவுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மழையால் நீர் பெறுபவையாகும். இம்மாவட்டம் மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி, பாலை என்னும் ஐவகை நிலப் பண்புகளையும் கொண்டுள்ளது. வறட்சி காலங்களில் இம்மாவட்டம் பாலையாகக் காணப்படும். இங்கு காலங்காலாக நெல், சோளம், கம்பு, கேழ்வரகு இவைகளைப் பயிரிட்டு விவசாயப் பணி மேற்கொண்டு வருகிறார்கள். செவ்வல் மண் இருக்கும் பகுதிகளில் கம்பு, திணை, முந்திரி ஆகியவற்றை விளைவிக்கிறார்கள். கரிசல் மண் இருக்கும் பகுதிகளில் நெல், வாழை இவற்றை அதிகம் பயிரிடுகிறார்கள். கோடையில் இப்பகுதிகளில் வேர்க்கடலை, உளுந்து , துவரை முதலிய பணப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 440 ச.கி.மீ. பரப்பளவில் பரந்து கிடக்கும் படுகைப் பகுதிகளில் தென்னை பயிர்களாக புகையிலை, மிளகாய், வாழை, மாங்காய், பலாப்பழம் ஆகியன விளைவிக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் 1.75 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
தாது வளம்:
புதுக்கோட்டை மாவட்டம் இயற்கை தாது வளத்தில் சிறந்து காணப்படுகிறது.
பாறைகள்:
கோயில், கட்டடங்கள் கட்டுவதற்கும், நீர்நிலைகளில் கரை அமைப்பதற்கும் இங்கு கிடைக்கும் பாறைகள் சிறந்து விளங்குகின்றன. திருக்கோகர்ணம், புத்தாம்பூர், திருமயம், லம்பலக்குடி, கோனாப்பட்டு, மலைக்கோயில், பேரையூர், உசிலை மலைப்பாறை, விராலிமலை, விட்டமாப்பட்டி, குடுமியாமலை, பனங்குடி, அம்மாசமுத்திரம், வீரப்பட்டி, சித்தாம்பூர், கீரனுர் முதலிய இடங்களில் இக்கற் பாறைகள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன. இங்கு எடுக்கப்படும் கருங்கல் ஜல்லிகள் பாதைகள் அமைப்பதற்கும், அஸ்திவாரங்கள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன.
லேடரைட்:
இம்மாவட்டத்தில், உறுதியான கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் லேடரைட் என்னும் கனிமம் மிகுந்த அளவில் கிடைக்கிறது. இரும்பும் அலுமினிய கனிமங்களும் இயற்கையாகவே அளவாகக் கலந்த நிலையில் கிடைக்கின்றன.
காவி மண்:
செட்டிப்பட்டிப் பகுதிகளில் பாதுகாக்கப்படும் காட்டுப் பகுதிகளில் கிடைக்கும் இம்மண் வண்ணங்கள் தயாரிப்பதற்கும், சாக்கட்டிகள் செய்வதற்கும் பயன்படுகிறது. வீடுகளுக்குத் தேவைப்படும் டிஸ்டம்பர் தயாரிக்கவும் இம்மண் மிகுந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. இம்மண் சுமார் 16000 ச.மீ. பரப்பளவில் கிடைக்கிறது. செட்டிப்பட்டியில் சுமார் 15000 டன் கிடைப்பதில் மூன்றில் இரண்டு பாகம்
உபயோகப்படுத்தப்படுகிறது.
கங்கர்:
வீடுகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்பு இதிலிருந்து தயாரிக்க முடியும். வெள்ளை நிறத்திலும் இது காணப்படுகின்றது. ஆதனக்கோட்டை, ஆலங்குடி பகுதிகளில் இது நிறையக் கிடைக்கிறது.
ஸ்படிகம்:
வெங்கச்சங்கல் எனப்படும் ஒருவகை ஸ்படிகம் வீரலூர் ஏரிக் கரைகளில் கிடைக்கிறது. கல்தச்சு வேலைக்கருவிகள் செய்ய இது பெரிதும் பயன்படுகிறது. வீட்டு உட்புற அழகு வேலைகள் செய்யவும் இதை உபயோகிக்கிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புதுக்கோட்டை, பகுதிகளில், நீர், பாறைகள், இம்மாவட்டத்தில், குளங்களும், கிடைக்கிறது, வட்டத்தில், தமிழக, மாவட்டங்கள், tamilnadu, அளவில், இம்மண், தேவைப்படும், மிகுந்த, அமைப்பதற்கும், இங்கு, தகவல்கள், தமிழ்நாட்டுத், லேடரைட், கிடைக்கின்றன, information, சமவெளிப், கிடைக்கும், districts, ஸ்படிகம், | , சுமார், வீடுகளுக்குத், pudukkottai, பயன்படுகிறது, சிறந்து, தாது, என்னும், ஆறுகள், இம்மாவட்டம், திருமயம், கட்டப்பட்டுள்ள, ஏரிகள், நெல், கம்பு, விளைவிக்கப்படுகின்றன, பரப்பளவில், முதலிய, வாழை, இருக்கும், விவசாயம், கவிநாடு